காமாட்சி விளக்கை ஏற்றினால் இதை செய்யாதீங்க.. காமாட்சி அம்மன் விளக்கு பரிகாரம்.. தீராத கடனும் தீரும்
சென்னை: தீராத கடனையும் தீர்த்திட, காமாட்சி விளக்கு போதும் என்பார்கள்.. இந்த விளக்கின் முக்கியத்துவம் என்ன? சிறப்புகள் என்ன? பயன்கள் என்ன? தெரியுமா?
உலக மக்களின் நன்மைக்காக தவம் இருந்த தெய்வம், காமாட்சி அம்மன்...அப்படி தவம் இருந்த வேளையில், சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது... அதனால்தான், காமாட்சி அம்மனை வழிபட்டாலே, ஒருவருக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும்.

அதுமட்டுமல்ல, ஒரு சிலருக்கு தங்களுடைய குலதெய்வம் எது? என்பது தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள், காமாட்சி அம்மனையே குலதெய்வமாக நினைத்து வழிபடலாம்....
மணப்பெண்: திருமணமாகி கணவன் வீட்டிற்கு செல்லும் மணப்பெண்ணை, புகுந்த வீட்டில் முதன் முதலில் காமாட்சி விளக்கை ஏற்ற சொல்வார்கள். ஏனென்றால், காரணம். காமாட்சி விளக்கில் குலதெய்வமும் இருந்து அருள்புரிவதால், முதன்முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அவர்களின் குலம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கையாகும்.
அதேபோல தினமும் காமாட்சி விளக்கு ஏற்றினால், குலம் தழைக்கும். வீட்டில் அனைத்து விதத்திலும் மங்களம் உண்டாகும். குலம் தழைக்கும். கிரக தோஷங்கள் தீரும். வறுமை நீங்கி செல்வம் செழிக்கும்.. சுற்றியுள்ள எதிர்ப்புகள் அனைத்துமே நீங்கும்.
வழிபாடு முறை: எனவே, வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கேற்றும்போது, ஒருசில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.. காமாட்சி அம்மன் விளக்குகள் எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும்.. விளக்கேற்றுவதற்கு முன்பே அதை சுத்தப்படுத்துவது அவசியம்.. வாரம் ஒருமுறையாவது கழுவிவிட வேண்டும்.
அதேபோல, விளக்கை தரையில் வைத்து ஏற்றக்கூடாது... கோலமிட்டு, கோலத்தின் மீது தட்டை வைத்து அந்த தட்டில் சிறிது பச்சரிசி கொட்டி, அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கை வைக்க வேண்டும். அல்லது அந்த தாம்பாளத்திலும், தண்ணீர் அல்லது மலர்கள் தூவி அதன்மீது விளக்கை வைத்து ஏற்றுவது நல்லது..
எண்ணெய்: அந்த காமாட்சி அம்மன் விளக்கில் நெய் ஊற்றி, தாமரைத் தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்தால் சிறப்பு.. அல்லது நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய்யில் விளக்கேற்ற வேண்டும்... ஆனால், சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யில் விளக்கேற்ற கூடாது.. விளக்கில் எண்ணெய் ஊற்றிய பிறகே திரி போட வேண்டும்...
விளக்கேற்றும்போது அதிக அளவிலான சுடர் வரக்கூடாது.. இந்த சுடர், மஞ்சள், குங்கும், பூக்களில் பட்டுவிடக்கூடாது. அதனால், எனவே, சிறிய அளவில் எரியும்படி பார்த்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் நல்லெண்ணெயில் சிறிது நெய் கலந்தும் ஏற்றலாம்... நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றிவிட்டு, அதில் 1 ரூபாய் நாணயமோ அல்லது 5 ரூபாய் நாணயமோ போட்டு, அதற்கு பிறகு திரி போட்டு தீபம் ஏற்றுவது இன்னும் சிறப்பை தரும்.
நல்ல நேரம்: இந்த விளக்கில் அம்மன் அமர்ந்த நிலையில், இருபுறமும் யானை இருக்கும். அதனால், விளக்கில் மஞ்சள், குங்குமம் வைத்து யானை உருவத்திற்கும் வைக்க வேண்டும்.காலை பிரம்ம முகூர்த்தத்தில் இந்த விளக்கேற்றி வழிபட்டால், அம்மனின் பூரண அருள் கிடைக்கும்.
தீராத கடன் பிரச்சனையில் உள்ளவர்கள், காலை 6 மணிக்கு முன்பு, காமாட்சி அம்மன் விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். 48 நாட்களுக்குள் உங்கள் வேண்டுதல் நிச்சயமாக நிறைவேறும்.
விளக்கு திசை: விளக்கை பொதுவாக கிழக்கு நோக்கி ஏற்றுவது நல்லது என்கிறார்கள். மேற்கு, வடக்கு திசைகளும் சிறப்பானதே. தெற்கு நோக்கி மட்டும் ஏற்றக்கூடாது. காமாட்சி விளக்கு மட்டுமில்லாமல் அகல், குத்துவிளக்கு எதுவானாலும் இதே முறைதான்.
மொத்தத்தில், காமாட்சி விளக்கு வைப்பது மனதை அமைதிப்படுத்தவும், ஆன்மீக அமைதியை அடையும் உதவுகிறது. இந்த விளக்கின் ஒளி மனதை நிம்மதிப்படுத்தும் என்பதால், தியானத்தின்போதும் உபயோக படுத்தலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications