கையெழுத்து போடும் போது கீழே கோடு போடுறீங்களா? வாஸ்து உணர்த்துவது என்ன?
சென்னை: நாம் போடும் கையெழுத்துக்குக் கீழ் ஒரு கோடு போட்டால் வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றல் கிடைக்கும் என ஜோதிடர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரே ஒரு கையெழுத்து தலையெழுத்தையே மாற்றும் என்கிறார்கள். கையெழுத்து போடுவதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலை பின்பற்றுகிறார்கள்.
ஒரு சிலர் இனிஷிலை கையெழுத்தாக போடுவார்கள். ஒரு சிலரது கையெழுத்தை பார்த்தால் ஒரு கலை போல் அழகாக இருக்கும். பெரும்பாலானர் கையெழுத்தின் கீழ் தேதியையும் நேரத்தையும் போடுவார்கள். இது மிகவும் பாதுகாப்பானதும் கூட!

அந்த வகையில் சிலர் கையெழுத்தின் கீழ் கோடு வரைவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். கையொப்பத்தின் கீழ் இரு கோடுகள் கூட வரைகிறார்கள்.
அது போல் கையெழுத்தின் கீழ் கோடு வரையலாமா? அவ்வாறு வரைந்தால் எத்தனை கோடுகள் வரையலாம் என்பது குறித்து ஜோதிடர் கூறுவதை கேளுங்கள். அவர்கள் கூறுகையில், கையெழுத்துக்கு கீழ் கோடு வரைவது என்பது அந்த கோட்டின் அளவு, திசையை பொறுத்து அது உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
கையொப்பத்தின் கீழ் நீண்ட, நேர்க்கோட்டை வரைந்தால் அது உங்கள் நம்பிக்கையையும் முடிவெடுக்கும் திறனையும் பலப்படுத்துகிறது. வாஸ்துவின்படி கோடு கையெழுத்தை விட பெரியதாகவும் வளைவு நெளிவு இல்லாமல் நேராக இருத்தல் வேண்டும்.
ஒரு வேளை கோடு உங்கள் கையொப்பத்தை விட சிறியதாகவோ அல்லது வளைவாகவோ இருந்தால் அது உங்கள் வாழ்க்கையில் குழப்பத்தையும் தடையையும் ஏற்படுத்திவிடும். பலர் கையொப்பத்திற்கு கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகளை போடுவார்கள். ஆனால் இது சரியல்ல. மங்களகரமானதும் இல்லை. அதிகமான கோடுகள் வரைவது மனக் குழப்பத்தை ஏற்படுத்தும்.

அந்த நேரத்தில் சிலரால் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. வாழ்க்கையிலும் தடைகள் ஏற்படும். கையெழுத்தின் கீழ் கோடு வெட்டப்பட்டாலோ அல்லது ஒரு வளைவு இருந்தாலோ அது வாஸ்துவின்படி நல்லதாகக் கருதப்படவில்லை. இதன் அர்த்தம் ஒருவரது முன்னேற்றம் தடுக்கப்படலாம். எனவே கையெழுத்துக்கு பிறகு கோடு போடும் பழக்கம் இருந்தால் அந்த கோடு உங்கள் கையெழுத்தை விட பெரியதாக இருக்க வேண்டும்.
அது போல் கையெழுத்தை வைத்து ஒருவரின் குணநலன்கள், செயல்பாடுகள், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஜோதிடத்தில் கணிக்கப்படுகிறது. கையெழுத்தை நெருக்கமாக போடுவோர் வெள்ளை மனம் கொண்டவர்கள் சொல்லப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் மற்றவர்களிடம் இருந்து ஆலோசனைகளை பெறுவார்கள்.
மற்றவர்களை பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். சுருக்கமாக சொன்னால் உளவு பார்க்கும் இயல்புடையவர்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications