திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க எத்தனை மணி நேரம் ஆனது? ஒரே நாளில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?
திருப்பதி: திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய சர்வ தரிசனத்தில் 18 மணி நேரமானதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் 31 அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பின.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். தற்போது புரட்டாசி மாதம் நடைபெற்று வருவதால் ஏழுமலையானை தரிசிக்கிறார்கள்.

இந்த நிலையில் திருப்பதி பெருமாளை தரிசிக்க 3 மாதங்களுக்கு முன்பு ரூ 300 டிக்கெட்டை புக் செய்வது முக்கியம். இதுதான் தற்போதைய நடைமுறை. ஜனவரி மாதம் திருப்பதிக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் அக்டோபர் 24 ஆம் தேதி அதற்கான புக்கிங் தொடங்கும். அப்போது புக் செய்து கொள்ளலாம்.
இல்லாவிட்டால் தர்ம தரிசனம், திவ்ய தரிசனம் ஆகிய வழிமுறைகளிலும் பெருமாளை தரிசிக்கலாம். இலவச தரிசனத்திற்கு கூண்டிற்குள் அடைய விருப்பமில்லாவிட்டால் கூட்டத்தை பொருத்து குறிப்பிட்ட நேரத்தை டேகில் அச்சிட்டு தேவஸ்தானம் சார்பில் கொடுக்கிறார்கள்.
அதை பெற்றுக் கொண்டு அதில் குறிப்பிட்ட நேரத்தில் வரிசையில் போய் நின்றால் சுவாமியை தரிசிக்கலாம். இந்த புரட்டாசி மாதம் நேற்றைய தினம் எத்தனை பேர் பெருமாளை தரிசித்தனர் என்பதை பார்க்கலாம். நேற்று ஒரு நாளில் 66,986 பேர் பெருமாளை தரிசனம் செய்தனர். 26,163 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ 5.05 கோடி கிடைத்துள்ளது. அது போல் டைம் ஸ்லாட் மூலம் சர்வ தரிசன டிக்கெட் வாங்காமல் கூண்டில் அடைப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய 18 மணி நேரம் ஆனது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் 31 அறைகளும் நிரம்பின. பயணியர் தங்கம் விடுதி வரை வரிசை நீண்டிருந்தது. இந்த தகவல்களை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டிருந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications