புத்த பூர்ணிமா.. ஒரே நாள் புத்த பௌர்ணமி விரத பூஜையில் இத்தனை மகத்துவமா? புத்தம் - சரணம் - கச்சாமி
சென்னை: பௌத்தர்களால் சிறப்பிக்கப்படும் புத்த பூர்ணிமா நாளின் சிறப்புகள் என்னென்ன? புத்த பூர்ணிமா தினத்தன்று, தியானம் மேற்கொள்வதன் நோக்கம் என்ன?
புத்தருக்கு ஞானம் கிடைத்த நாளே புத்த பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது.. வருடந்தோறும் வைசாக மாதம் பௌர்ணமி நாளன்று இந்த புத்த பூர்ணிமா திருநாள் கொண்டாடப்படுகிறது. அதேபோல, இந்த 2024ம் ஆண்டுக்கான புத்த பூர்ணிமா கடந்த மே மாதம் 23ம் தேதி கொண்டாடப்பட்டது.
கயா: புத்த கயா என்ற இடத்தில் தான் புத்தருக்கு ஞானம் கிடைத்ததாக கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தில் கயா என்ற இடத்தில் இந்த வழிபாட்டு ஸ்தலம் உள்ளது.. புத்தரின் பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லாம் இந்த புத்த பூர்ணிமாவில் நிகழ்ந்ததாகவே பௌத்தர்களும் நம்புகிறார்கள். எனவேதான், இந்த ஒருநாள் மட்டும் மிகவும் விசேஷமாக புத்த கயாவில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது..

வழிபாடுகள்: அதேபோல உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள சாரநாத் மற்றும் சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், லடாக், டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளிலும் மிகப்பெரிய அளவில் இந்த புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.
புத்த பூர்ணிமாவை, புத்த பௌர்ணமி, புத்த ஜெயந்தி அல்லது விசாக் என்றெல்லாம் என பல பெயரில் அழைக்கப்படுகிறது.. உலகம் முழுவதுமுள்ள பௌத்தர்களும், பௌத்த மதத்தின் மீது பற்று வைத்திருப்பவர்களும், இந்த புத்த பூர்ணிமா நாளன்று, விரதம் இருந்து புத்தரை வழிபாடு செய்து வேண்டி கொள்வார்கள்..
அதுமட்டுமல்ல, தியானம் என்பது மன அமைதியை தந்து, நம்முடைய வாழ்வை செம்மைப்படுத்தும் என்று பௌத்தர்கள் நம்புகிறார்கள். இதற்காகவே, புத்தர் கோயிலுக்கு சென்று, பிரார்த்தனை செய்வதுடன், பல்வேறு பொருட்களையும் பிறருக்கு தானமாக வழங்குவார்கள்.
வெண்மை உடை: இந்த புத்த பூர்ணிமா தினத்தன்று புத்த மதத்தினர் வெள்ளை நிற உடைகளை மட்டுமே அணிவார்கள்.. அன்றைய தினம் மடாலயங்களிலும், வழிபாட்டிடங்களிலும், வீடுகளிலும், வழிபாடுகளையும் விழாக்களையும் நடத்தி மகிழ்வார்கள். "கீர்" எனப்படும் பானம் இந்த புத்த பூர்ணிமா தினத்தன்று அவர்களது உணவில் முக்கிய அங்கமாக இடம்பெறும்..
கௌதம புத்தர் பிறந்து 2500 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அவரது போதனைகள் சாகாமல் வாழ்ந்து வருகிறது என்றால் புத்தர் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றே அர்த்தம்.!
புத்தர் சிலைகள்: எனவேதான், அமைதி, கருணை, நல்லொழுக்கம், நல்லெண்ணத்தின் அடையாளமாக திகழும் புத்தர் சிலையை, பலரும் தங்கள் வீடுகளில் வைத்திருக்கிறார்கள்..
இதில், தியான நிலையில் இருக்கும் புத்தர் சிலை அல்லது ஒருபுறம் நிற்கும் புத்தர் சிலை நல்லது. புத்தரின் சிலையை வீட்டில் வைத்திருப்பதால், வீட்டில் அமைதி, செழிப்பு ஏற்படும் என்பார்கள். வீட்டில் புத்தரின் சிலையை வாஸ்து படி, கிழக்கில் வைக்க வேண்டுமாம்.. இதனால் வாழ்வில் நல்லது நடக்கும் என்று நம்பப்படுகிறது. சிலையை கிழக்கு நோக்கி வைக்க முடியாத பட்சத்தில் வடக்கு நோக்கி வைக்கலாம்.
எப்படி வைக்கலாம்: ஆனால், புத்தர் சிலையை ஜன்னல் அல்லது கதவுக்கு எதிரே வைக்கக்கூடாது. படுக்கை அறையிலும் வைக்கக்கூடாது. சிறிய மரச்சாமான்களிலும் வைக்கக்கூடாது... ஃபிரிட்ஜ் மீதோ அல்லது பெரிய சாதனங்களுக்கு பக்கத்திலோ வைக்கக்கூடாது... கிச்சன், பாத்ரூம், ஸ்டோர்ரூம், வாஷிங் ரூம் அருகில் வைக்கக்கூடாது. தரையில் வைக்காமல், தரையிலிருந்து 3 முதல் 4 அடி உயரத்தில் வைக்கப்பட வேண்டும்.. எப்போதுமே புத்தர் சிலை வைக்கும் இருப்பிடம், அதன் மதிப்பை அதிகரிக்க வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications