தொட்டதெல்லாம் துலங்க.. இந்த 1 பொருள் போதுமே.. குளியலறையில் கல் உப்பு வைத்தால் என்னாகும் தெரியுமா? அட
சென்னை: கல் உப்பு, மஞ்சள் தூள் இந்த இரண்டும் இருந்தாலே தொட்டதெல்லாம் துலங்கும் என்கிறது ஆன்மீகம்.. எப்படி தெரியுமா? இதோ இந்த எளிய பரிகாரத்தை மனஉறுதியுடனும், திடமான நம்பிக்கையுடன் செய்துவந்தாலே பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
ஒரு பாத்திரத்தில் கல் உப்பு, மஞ்சள் இரண்டையும் சம அளவில் கலந்து, அதை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தேய்த்து ஓடுகின்ற நீரில் குளித்து விட வேண்டும். இதனால், உடம்பில் துர்சக்தி, தரித்திரங்கள் விலகிவிடும்.

அல்லது கல் உப்பு, மஞ்சள் இரண்டையும் கொண்டு, உங்களது 2 கைகளையும் நன்றாக தேய்த்து, ஓடும் நீரில் அல்லது கடலில் கழுவினாலும், துர்சக்தி நீங்கிவிடுமாம். கஸ்தூரி மஞ்சளும் பயன்படுத்தி கொள்ளலாம்.
நல்ல மாற்றம்: ஓடும் நீர், கடல் இப்படி எதுவுமே இல்லாவிட்டால், கோவிலில் தரப்படும் தீர்த்தத்தை வாங்கி வந்து, குளிக்கும் நீரில் தலைக்கு குளிக்கலாம். இப்படி 3 வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வந்தால், நல்ல மாற்றம் வீட்டில் தென்படும். அதிர்ஷ்டமும் மெல்ல மெல்ல வர துவங்கும். மஞ்சள் பயன்படுத்தினாலும், இந்த பரிகாரத்தை ஆண்களும் செய்யலாம்..
அதேபோல, குளிக்கும் நீரில் கல் உப்பை மட்டுமே கலந்து குளித்து வந்தால் உங்கள் உடலில் உள்ள நெகடிவ் எனர்ஜி அனைத்தும் நீங்கி விடும்... வீட்டிலுள்ள 4 மூலைகளிலும் இப்படி கல் உப்பை சிறு முடிச்சாக கட்டி வைக்கலாம்.. இதன்மூலமும் தீய சக்திகள் அண்டாமல் இருக்கும்.
எதிர்மறை சக்திகள்: கழிவறையை எப்போதுமே உப்பு வைத்து சுத்தம் செய்ய வேண்டும்.. அதேபோல, செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் பாத்ரூமில் உப்பு வைப்பது நல்லது.. இந்த உப்பையும் 2 வாரங்களுக்கு ஒருமுறை மாற்றி கொண்டேயிருக்க வேண்டும். இதனால், துர்சக்திகள், கிருமிகள், தொற்றுகள், அனைத்துமே விலகிவிடும்.
அதேபோல, கடல் நீரில் வருடத்திற்கு ஒருமுறையாவது குளிக்க வேண்டும் என்பார்கள். அப்படி முடியாதபட்சத்தில், நாம் குளிக்கும் தண்ணீரிலேயே, 2 கைப்பிடி கல் உப்பை போட்டு கரைத்து, தலைக்கு ஊற்றி குளிக்க வேண்டும்.. பெண்கள் வாரம் ஒரு முறை, குறிப்பாக, வெள்ளிக்கிழமையன்று உப்பு கலந்த நீரில் குளிக்கலாம்.. ஆண்கள், சனிக்கிழமைகளில் தலைக்கு குளிக்கும்போது உப்பு குளியல் செய்யலாம.
உப்புத்தன்மை: உப்புத்தன்மை உடம்பில் இருந்தால், சாதாரண தண்ணீரை மீண்டும் ஊற்றி குளித்துக்கொள்ளலாம். இதனால் வாழ்க்கையில் உள்ள தடைகள் அத்தனையும் நீங்கிவிடும்.. கண் திருஷ்டிகளும் விலகிவிடும்..












Click it and Unblock the Notifications