நெற்றியில் குங்குமம்.. பெண்கள் 2 புருவத்துக்கு நடுவில் பொட்டு வைப்பது ஏன்? அறிவியல் + ஆன்மீகம் காரணம்
சென்னை: பெண்கள் நெற்றியின் வகிட்டில் குங்குமம் இட்டுக்கொள்வது ஏன் தெரியுமா? அது ஏன் சிவப்பு கலரில் குங்குமம் வைக்கிறார்கள்? தெரியுமா? இதற்கு அறிவியல் காரணமும் உண்டு, ஆன்மீக காரணமும் உண்டு. இரண்டையுமே நாம் இங்கு பார்க்கலாம்.
நம்முடைய நாட்டை பொறுத்வரை, சுமங்கலி பெண்கள் நெற்றியின் வகிட்டில் குங்குமம் வைப்பது வழக்கம்.. குங்குமத்தை நெற்றியில் வைப்பதன் அறிவியல் காரணங்கள் என்ன தெரியுமா? அதேபோல 2 புருவங்களுக்கு நடுவிலும் குங்குமம் வைக்க காரணம் என்ன தெரியுமா?

விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் போன்றவை அனைத்தும் சேர்த்து அரைக்கப்பட்ட பொடியுடன் நல்லெண்ணெய்யும், எலுமிச்சம் பழம் சேர்த்தால் குங்குமம் தயார். மஞ்சளும், காரமும் வேதிவினை புரிவதால் இந்த சிவப்பு நிறம் கிடைக்கிறது.. குங்குமம் ஒரு சிறந்த கிருமி நாசினி என்றே சொல்லலாம்..
பூஞ்சைகள்: இதற்கு நச்சு நுண்ணுயிரிகள் மற்றும் பூஞ்சைகளை அழிக்கும் சக்தி உள்ளது.. எனவே, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் நம்மை அண்டாது.. தொற்றுநோய் கிருமிகளும் நம்மை நெருங்காது.
2 புருவங்களுக்கு இடையிலுள்ள நெற்றி பொட்டில் சிந்தனை நரம்புகள் ஒன்றாக கூடும் இடமாக உள்ளன.. அங்கு, மெதுவாக விரலால் தொடும் போது மனதில் மெல்லிய உணர்வு ஏற்படும். அதுமட்டுமல்ல, குங்குமத்தை வைப்பதால் ஹிப்னாட்டிஸம் போன்ற எதிர்மறை சக்திகள் செயல்படுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
2 புருவங்கள்: 2 புருவங்களுக்கு மத்தியில் குங்குமத்தை வைப்பதால், சுழி முனை சக்கிரத்தின் வழியே உடல் உஷ்ணம் தணிகிறது.. மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைத்து, மனதை அமைதிப்படுத்துகிறது.. குங்குமம் வைப்பதால் உடலில் உள்ள சக்கரங்கள் சீராக இயங்க செய்கின்றன.. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.
அதுமட்டுமல்ல, வகிட்டில் குங்குமம் வைத்து கொள்வதால், பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமையும். மூளைக்குச் செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றியாகும்.. அதனால்தான், நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு உடனடியாக தணிகிறது. மேலும், உணர்ச்சியற்ற நரம்புகளும் தூண்டப்படுகின்றன.
நெற்றியின் மையப்பகுதி: நெற்றியின் மையப்பகுதியில் காந்தசக்தி அதிகமாக உள்ளதால், குங்குமம் வைப்பதன் மூலமாக மற்றவர்கள் நம்மை வசியப்படுத்துவதிலிருந்து தப்பிக்க முடியும். அந்தவகையில், குங்குமம் நெற்றியில் வைப்பதற்கு, ஆன்மீக காரணங்களும் உள்ளன.. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் தருவதும், பெற்றுக்கொள்வதும் இரண்டுமே மாங்கல்யத்தின் பலத்தை பெருக்கும்.
புராணத்தின்படி, சிவபெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட போது, பார்வதியின் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டார்.. இதற்கு பிறகுதான், இந்து திருமணங்கள் அனைவற்றிலுமே, மணமக்களுக்கு நெற்றியில் குங்குமம் வைத்து விடும் பழக்கம் வந்ததாக சொல்கிறார்கள்..
குங்குமம்: கல்யாணத்தில் மணமக்கள் இருவருக்குமே குங்குமம் வைக்க காரணம், சிவன் - பார்வதியை போல் எப்போதும் இந்த தம்பதியும், சரி பாதியாக ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதே இதன் அர்த்தம்.,
சனாதன தர்மத்தில் சிவப்பு என்பது சக்தியின் நிறமாகவும், கட்டுப்பாடு, அடக்கம் ஆகியவற்றின் நிறமாகவும், துர்கா தேவிக்கும், பராசக்திக்கும் உகந்த நிறமாகவும் கருதப்படுகிறது.. ஒரு பெண், தன்னுடைய கல்யாணத்துக்கு பிறகு, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, புகுந்த வீட்டில் பண்பாடு, கலாச்சாரத்தை மதித்து வாழ வேண்டும் என்பதை குறிக்கவே, குங்குமம் வைக்கிறார்கள்.
பார்வதி தேவி: அதேபோல, நெற்றியில் குங்குமத்தை வைத்துக் கொண்டால், கணவரின் ஆயுள் கூடுகிறதாம்.. பெண்களின் கணவருக்கு எந்த, கெடுதியும் நெருங்கவிடாமல், பார்வதி தேவி பாதுகாப்பாள் என்றும் நம்பிக்கை உள்ளது. எனவே, குங்குமம் என்பது மங்களகரமான சின்னமாகவும், அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது..
இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. அந்த காலத்தில் திருமணமான ஆண்கள் கால் விரலில் மெட்டி அணியும் வழக்கமும் இருந்திருக்கிறது. எனவே, வகிட்டில் குங்குமம் வைத்த பெண்ணை கண்டு ஆணும், மெட்டி அணிந்த ஆணை, குனிந்த தலை நிமிராத பெண்ணும் கண்டு விலகி செல்லவும் இப்படி பயன்படுத்தப்பட்டதாம்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications