தொலைந்த பொருளை மீட்டுத் தரும் அரைக்காசு அம்மன் வரலாறு தெரியுமா? ரொம்ப பவர்ஃபுல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொலைந்த பொருளை மீட்டுத் தரும் அரைக்காசு அம்மன் குறித்து தெரியுமா? அந்த பெயர் எப்படி வந்தது? சென்னையில் எங்கிருக்கிறாள் இந்த அம்மன்?

இதுகுறித்து av tamil story எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தொலைந்த பொருட்களை மீட்டு தரும் அரைக்காசு அம்மன். ஒரு முறை புதுக்கோட்டையை ஆண்ட விஜயநகர பேரரசர் பாரம்பரிய நகை ஒன்று காணாமல் போய்விட்டது. அதை கண்டுபிடிக்க அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பயனற்றவை.

spirtuality

பின்னர் அதை மீட்டெடுக்க பிரகதாம்பாள் அம்மனிடம் அரசர் பிரார்த்தனை செய்தார். காணாமல் போன நகை கிடைத்தது. மன்னர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதற்காக தனது நன்றியை தெரிவிக்கும் வகையில் அரை காசு நாணயத்தில் ஒரு பக்கத்தில் பிரதாம்பாளின் படத்தை பொரித்து பண்டிகை சமயங்களில் அந்த நாணயங்களை குடிமக்களுக்கு விநியோகம் செய்தார்.

அந்த காலத்தில் அரை காசு நாணயங்கள் அரை வட்ட வடிவத்தில் வடிவமைக்கப்பட்டன. அன்று முதல் இந்த அம்மன் அரைக்காசு அம்மன் என அழைக்கப்படுகிறார். இந்த அன்னைக்கு பிரசாதமாக வெல்லத்தை வைத்து கொடுக்கிறார்கள். எலுமிச்சை மாலை அணிவித்து இவரை வணங்கினால் தொலைந்த பொருள் மட்டுமல்ல நமக்கு வரவேண்டிய பொருளும் கூட எளிதாக கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. பணத்தை மீட்டுத் தருதல், திருமணம், குழந்தை பிறப்பு, குடும்ப உறுப்பினர்களின் ஒன்று கூடல் போன்ற பல விஷயங்களுக்காக மக்கள் இங்கு வந்து மனமுருகி வேண்டி செல்கிறார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கோயில் ரத்னமங்கலம், வண்டலூரில் உள்ளது. இந்த கோயில் காலை 5.30 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி, அமாவாசை நாட்களில் அம்பிக்கைக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. மேலும் அரைக்காசு அம்மன் படம் பொறித்த டாலரும் பிரசாதமாக வழங்குகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+