வாஸ்துப்படி "இதை" கிழக்கு திசையில் வெச்சு பாருங்க.. வீட்டில் டபுள் மடங்கு செல்வம், பணம் பெருகுமாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடுகளில் செல்வம் தங்கியிருக்கவும், ஆரோக்கியம் பெருகவும் வளர்க்கக்கூடிய முக்கிய வாஸ்து செடிகள் என்னென்ன தெரியுமா?

எப்போதுமே, மரம், செடிகள் நம்முடைய வீட்டை சுற்றி இருப்பது ஆரோக்கியமான விஷயமாகும்.. அதேபோல, ஆக்சிஜன் உற்பத்தி செய்து தரும் மலர்களையும், செடிகளையும் இப்படி வளர்க்கலாம்.. சுவாசிக்ககூடிய ஆக்சிஜன் வழங்குவதுடன், மாசுபடும் துகள்களை சிலவகை செடிகள் கவர்ந்து அழித்து விடும். இதனால், சுற்றுப்புறச்சூழலும் மாசுபடாமல் காக்கப்படும்.

Spirituality Vastu tips Money Plant

மணி பிளாண்ட்: இதுபோலவே, நம் வீடுகளுக்கு உள்ளேயும் சிலவகையான செடிகளை வளர்ப்பது பரவலாகி வருகிறது.. குறிப்பிட்ட செடிகளை வீடுகளில் வளர்க்கும்போது, அது வீட்டிலுள்ள பிரச்சனைகளை இன்னும் அதிகப்படுத்திவிடுவதுடன், இழப்பையும் கொண்டுவந்து விட்டுவிடுமாம்.. அதே சமயம் சில வகையான செடிகளை வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழல் நன்றாக இருப்பதுடன், பாசிட்டிவ் எனர்ஜியும் பெருகிவிடும்.

உதாரணத்துக்கு மணி பிளான்ட்டை சொல்லலாம்.. இது காற்றிலுள்ள கார்பன் மோனாக்சைடு, ஃபார்மாடிகைடு, பென்சைன் போன்ற நச்சுக்களை ஈர்த்துக்கொண்டு, ஆக்சிஜனை வெளியிடும். டிவி, செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்களையும் இந்த செடி கிரகித்து கொள்கிறது.

தொட்டால் சிணுங்கி: அதுபோலவே, தொட்டால் சிணுங்கியும் அதிர்ஷ்டமான செடியாக கருதப்படுகிறது.. ஆனால், இந்த செடிக்கு தண்ணீர் ஊற்றி சரியாக பராமரிக்க வேண்டும்.. இதனால், ராகு தோஷம் நீங்கும் என்பார்கள். நீல நிற சங்குப்பூ செடிகளையும் வீட்டில் வளர்த்தால் மகிழ்ச்சி, ஒற்றுமை குடும்பத்தில் பெருகும் என்பார்கள்.

வீட்டை சுற்றிலும் துளசி செடிகளை வைக்கும்போது, துளசியின் மணம் வீட்டை நிரப்பி கொண்டேயிருக்கும்.. பாசிட்டிவ் ஆற்றலும் வீட்டுக்கு கிடைத்துக் கொண்டேயிருக்கும். கற்றாழை செடிகளையும் வீட்டில் வைத்தால், நேர்மறை ஆற்றலை கொண்டுவருவதுடன், வீசும் காற்றும் சுத்திகரிக்கப்படும்.

சீன சாஸ்திரம்: இந்த லிஸ்ட்டில் மூங்கில் செடியும் மிக முக்கியமானது.. காரணம், வாஸ்து, ஃபெங் சுயி என்ற சீன சாஸ்திரம் போன்றவறறுடன் நெருங்கிய தொடர்புடையது இந்த மூங்கில் செடிகள்..

மூங்கில் செடிகளை வளர்த்து வரும்போது, செல்வ வளம், ஆரோக்கியம் பெருகும் என்று நம்பப்படுகிறது. இந்த செடிகள் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.. ஆனால், இந்த செடியை 5 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டுமாம். அப்போதுதான் செல்வம் வீடுகளில் தங்கும் என்பார்கள்.

எந்த திசை: 6 எண்கள் கொண்ட செடிகளை வைத்தால் அதிர்ஷ்டம் வருமாம்.. 7 வைத்தால் ஆரோக்கியம் பெருகும் என்பார்கள்.. 21 என்ற எண்ணிக்கையில் திடீர் அதிர்ஷ்டம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுமாம்..

எப்போதுமே இந்த மூங்கில் செடியை, வீட்டின் கிழக்கு பகுதியில் அல்லது தென்கிழக்கு பகுதியில் வைக்க வேண்டுமாம்.. ஏனென்றால் இந்த பகுதி உங்கள் குடும்பத்தின் ஆற்றல் மண்டலமாக விளங்குகிறது.. நேர்மறை ஆற்றலை ஈர்க்க உங்கள் வீட்டின் நுழைவாயிலுக்கு அருகிலும் வைக்கலாம். தென்கிழக்கு இடம் செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்கும் என்பதால், இந்த இடமே பிரதானமாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.

ஆரோக்கியம்: வாஸ்து சாஸ்திரத்தின்படி, 2-3 அடி உயரம் வரை வளரும் மூங்கில் செடிகள் மங்களகரமானவை என்றும், இதனால் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் நிதி நிலை வலுப்பெறும் என்றும் நம்பப்படுகிறது. இது எல்லாவற்றையும்விட, மாசுகளை சுத்தப்படுத்தும் உயரிய தன்மை இந்த மூங்கில் செடிகளுக்கு உண்டு என்பதையும் மறந்துவிடக்கூடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+