வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடம் எதிர்காலத்தை சரியாக கணிக்கிறதா?
சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது வைத்தீஸ்வரன் கோவில். இந்த பகுதியிலுள்ள ஜோதிடர்கள் படித்துச் சொல்லும் ஓலைச்சுவடி ஜோசியமும், நாடி ஜோசியமும் மக்கள் மத்தியில் வெகு பிரபலம். பலரும் நாடி ஜோதிடம் சொல்பவர்கள் மிகச் சரியாக தங்கள் பெயர், பெற்றோர், உடன் பிறந்தவர்கள், தொழில் என பலவற்றையும் புட்டு புட்டு வைப்பதாக சிலாகிக்கிறார்கள். சிலருக்கோ, அது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வியும் உள்ளது.
இதுகுறித்து சிவபெருமாள் பாலமுருகேசன் என்பவர் சமீபத்தில் குவாராவில் கூறிய பதில் ஒன்று வைரலானது. இதோ அவரது வார்த்தைகளில் இருந்து நீங்களே படியுங்கள்.

நான் பார்த்திருக்கிறேன். சென்னையிலேயே 1991-ல். வேண்டுமென்றே மதிய உணவு இடைவேளையில் சென்றேன். அரைமணி நேரத்துக்கு மேல் இருக்க முடியாது என்றேன். ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த கைரேகை பதிவை கொடுத்தேன். அவ்வளவுதான். பிறகு எல்லாமே அவர் படிக்க படிக்க ஆம், இல்லை என்ற பதில்கள். ஒருவழியாக ஓலை கிடைத்தது. வேகமாக படித்து அதை பதிவு செய்தும் கொடுத்தார். எனது பெயர் (அதே பெயரில் இதுவரை ஒரே ஒருவரை சந்தித்திருக்கிறேன்), எனது தந்தையார் பெயர் (அவர் பெயரில் இன்றுவரை வேறு எவரையும் சந்திக்கவில்லை), எனது தாயார் பெயர், எனது தாய்மாமனை வீட்டில் அழைக்கும் பெயர் (மிகச்சிலரே அறிந்த விஷயம்) இப்படி ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம். பிறகு எதிர்காலம். இன்று பார்க்கையில் அனேகமாக 90 சதவிகிதம் சரியாகவே இருக்கிறது.
எனக்கு நடக்கப்போகும் மிக ஆபத்தான அறுவை சிகிச்சை பற்றி கூட கூறியிருக்கிறார் - எந்த வயதில் என்பது உட்பட. எனவே நம்புகிறேன். ஆனால் நாடி சோதிடர்கள் மத்தியில் பல ஏமாற்றுக்காரர்களும் இருக்கிறார்கள் என்பது உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். அதேநேரம், பலரும் இவரது பதிவுக்கு பின்னூட்டமிட்டிருந்தனர்.
அதில் ராஜாராம் என்பவர் கூறுகையில், 1980 என நினைக்கிறேன். நண்பர் ஒருவருக்கு சுவடி ஜோசியம் பார்க்க சென்றோம். அவர்கள் படித்ததில் 99 சதவிகிதம் சரியாக இருந்தது. ஆனால் அது எப்படி என தெரியவில்லை என்று ஆச்சரியம் வெளிப்படுத்தியுள்ளார். மூர்த்தி பெரியசாமி என்பவர் கருத்து வேறுமாதிரி உள்ளது.
இதுபற்றி அவர் கூறுகையில், வயதும் அனுபவமும் உள்ளவர்கள் மட்டுமே உண்மையாக கூறுகின்றனர். புதிதாக உருவாக்கப்பட்ட இடங்களில் எல்லாம் நம்மிடம் பேசி அதன் பின்னர் பதில் கூறினார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் சிலர் சரியாக பார்த்து சொல்லும் ஜோதிடர்களின் தொலைபேசி எண்களை பகிருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். உங்களுக்கு இப்படியான அனுபவம் உள்ளதா, நீங்களும், நமது, கமெண்ட்டில் பதிவு செய்யலாமே.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications