தாலி கயிறு மாத்தணுமா? தாலி சரடு மாற்றும்போது இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க.. மஞ்சள் மகிமை மாங்கல்யம்
சென்னை: பெண்கள் தங்கள், தாலியை எப்படி அணிய வேண்டும்? தாலி சரடை எந்த முறையில் அணிய வேண்டும்? என்பது குறித்தெல்லாம் பல்வேறு முக்கிய குறிப்புகளை, ஆன்மீகத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒருசில குறிப்புகளை பார்ப்போம்.
எப்போதுமே, கழுத்திலிருக்கும் தாலியானது, பெண்களின் மார்பு பகுதியில் படுமாறு கட்டியிருக்க வேண்டும்... தாலி கயிற்றில் தங்கமும், மஞ்சளும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த தாலியானது, பெண்களின் மார்பு பகுதியில் படுமாறு அணிந்திருக்க வேண்டும். இப்படி அணிவது, பெண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது... மார்பக பிரச்சனைகளும் எளிதில் நெருங்காது..

மார்பக புற்றுநோய்: அதிலும் மார்பக புற்று நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு இந்த மஞ்சளுக்கு உண்டு. இதனால், இதய நோய் அபாயமும் குறைகிறது.. வீக்கம் மற்றும் ஆக்சிஜனேற்றத்தை குறைக்கவும் இந்த மஞ்சள் உதவுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதனால்தான், தாலியை தங்கத்தில் அணிந்தாலும் அதனை மஞ்சள் கயிற்றில் கட்ட வேண்டும் என்பதற்கும் இதுவே காரணமாக உள்ளது
தாலி சரடுகளாக அணிந்தாலும் இதுபோலவே, மாங்கல்யத்தில் மஞ்சள் குங்குமம் இருக்க வேண்டும். எத்தனை சவரனில் சரடு வாங்கினாலும், அது ஒற்றைப்படையில் இருக்கும்படி வாங்க வேண்டும். ஒருவேளை, இரட்டை படையில், இரண்டு பவுன் சரடு வாங்க நேரிட்டால், அதில் ஒரு குண்டுமணி தங்கமாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குண்டுமணி தங்கம்: அதாவது, 3, 7, 9 என்று ஒற்றைப்படையில் தாலிக்கொடி அணியலாம்.. ஆனால், இரட்டை படையில் அணிவதாக இருந்தால், சின்ன குண்டுமணி தங்கமாவது சேர்த்து அணிவது மிகவும் நல்லது. ஏனென்றால், இரட்டை படையில் தாலி சரடு அணிந்தால், தம்பதிக்குள் தகராறுகள் வருமாம்.
தாலி கயிறை மாற்றுவதானாலும், சுபதினத்தில் மட்டுமே செய்ய வேண்டும். அதுவும், காலையிலேயே மாற்றி கொள்வது நல்லது.. அல்லது மாலையில் மாற்றிக்கொள்ளலாம். ஆனால், மாலையில் ராகு, எமகண்ட காலத்திலும் மாற்றக்கூடாது. காலையிலேயே குளித்து முடித்து, கிழக்குப் பக்கமாக உட்கார்ந்து தாலி கயிறு மாற்றிக் கொள்ள வேண்டும்.
சுமங்கலி: கணவர் அல்லது சுமங்கலியாக இருக்கும் அம்மா, மாமியார் இப்படி மூத்தவர்கள் உடனிருக்க வேண்டும். தாலிக்கயிறு மாற்ற உட்காரும்போது, அந்த சடங்கு முழுமையாக முடியும்வரை எழக்கூடாது..
அதேபோல, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் புது தாலி மாற்றலாம்.. காலையில் சாப்பிடும் முன்பே, ஏதாவது ஒரு கோயிலுக்கு சென்று, கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது. எக்காரணம் கொண்டும், மாங்கல்ய கயிற்றில் ஊக்கு, சாவி தொங்க விடக்கூடாது... . புதிய கயிறு மாற்றும்போதும், அதில், மஞ்சள் பூசியிருக்க வேண்டும்.
மஞ்சள் தாலி கயிற்றை, வருடம் 2 முறை மாற்றுவார்கள்.. குறிப்பாக, ஆடி பெருக்கு நாளில் தாலி மாற்றுவது சிறப்பு.. அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும்.. எனவே, தாலிக்கயிறை அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications