கயிறு கையில் கட்டுவது இதுக்குதானா? சாமி கயிற்றினை எத்தனை நாட்கள் கட்டிக்கொள்ளலாம்? அடேங்கப்பா
சென்னை: கோயில்களில் தரக்கூடிய கயிறுகளை எத்தனை நாட்கள் கட்டிக்கொள்ளலாம்? ஆண்களும் பெண்களும் எந்த கையில் , இந்த கயிறுகளை கட்டிக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆன்மீகத்தில் மிக தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது. அதனை சுருக்கமாக காண்போம்.
கைகளில் சாமி கயிறுகளை விதவிதமாக கட்டுவதுண்டு. கைகளில் பல வண்ணங்களில், பக்தர்கள் கயிறு கட்டுவதுண்டு.. விரத காலங்களிலும் பூஜையில், மஞ்சள் கயிறுகளை வைத்து, விசேஷ பூஜைகள் செய்து அதையும் கைகளில் கட்டிக் கொள்வார்கள். திருப்பதி, காசி போன்ற தீர்த்தயாத்திரை சென்று வருபவர்களும், இதுபோல கயிறுகளை கட்டிக் கொள்வார்கள்..

கோயில்கள்: சில கோயில்களில் பிரசாதத்துக்கு பதிலாக தரப்படும் கயிறு கட்டிக் கொள்வார்கள்.. சில கோயில்களில் உணவு பொருட்களுக்குப் பதிலாக கயிறு வாங்கி தருவார்கள்.
சிலர், தங்களது வேண்டுதல் நிறைவேறுவதற்காக கையில் கயிறை கட்டிக்கொள்வார்கள். மேலும் சிலர், தீய சக்திகள் அண்டக்கூடாது என்பதற்காக கயிறு கட்டிக் கொள்வார்கள்.. சிலர் கெட்ட கனவுகள் எதுவும் வராமல் இருக்கவும் கயிறு கட்டுவார்கள்.. அதேபோல, வீட்டில் சுப காரியங்கள் நடக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டு கயிறு கட்டுவார்கள்.
அதேபோல, கயிறுகளை எத்தனை வேண்டுமானாலும் கைகளில் கட்டிக் கொள்ளலாம். ஒன்றை மட்டும் கட்டுபவர்களும் உண்டு.. சிலர் அடுக்கடுக்காக ஏராளமாக கயிறுகளை கட்டிக் கொள்வார்கள்.. இதற்கு ரட்சை அல்லது காப்பு என்று பெயர்.. இந்த கயிறுகளை கட்டிக்கொள்ள காலநேரமும், கயிறுகளின் நிறமும் ஒரே மாதிரி கிடையாது..
நிற கயிறுகள்: அம்மன் கோயில்களிலும், காசி, திருப்பதி போன்ற கோயில்களில் கருப்பு கயிறு, சிவப்பு கயிறு, மஞ்சள் நிற கயிறுகள் தரப்படுகின்றன. ஒருவரது ஜாதகத்தில் சூரிய திசை அல்லது சூரிய புத்தி நடக்கும்போது, சிவப்பு நிற கயிறை கட்டுவார்கள்.. இதனால், திறமையாக,சுறுசுறுப்பாக செயல்பட முடியும்... ஜாதகத்தில் சந்திர திசை மற்றும் சுக்கிர திசை நடப்பவர்களுக்கு அல்லது சந்திர, சுக்கிர புத்தி நடப்பவர்களுக்கு வெள்ளை நிறக்கயிறு கட்டப்படும்..
புதன் திசை அல்லது புதன் புத்தி நடக்கும்போது, பச்சை நிறகயிறு கட்டுவார்கள்.. இந்த பச்சை நிறக்கயிறு, குபேரனின் ஆசியுடன், செல்வத்தில் திளைக்கலாம். குருவின் ஆசி பெற மஞ்சள் கயிறை அணியலாம்.. குழந்தைகளுக்கும் இப்படி மஞ்சள் நிறக் கயிறை கட்டும்போது, நன்றாக படிக்கக்கூடியவர்களாக விளங்குவார்கள். சனி திசை அல்லது சனி புத்தி நடப்பவர்கள் கருப்பு கலர் கயிறு கட்டுவார்கள். இதனால், சனியின் வீர்யம் குறையும் என்பார்கள். திருஷ்டிக்காகவும் கருப்பு கலர் கயிறு கட்டுவார்கள்.
ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கயிறு கட்டிக் கொள்ள வேண்டும்... வரலட்சுமி பூஜையின் போது தரப்படும் கயிறுகளை மட்டும் பெண்கள் வலது கையில் கட்டிக் கொள்ளலாம்.
ஓடும் ஆறு: கோயிலில் இருந்து பெறப்படும் கயிறாக இருந்தாலும்சரி, மந்திரிக்கப்பட்ட கயிறாக இருந்தாலும்சரி, 21 நாட்களுக்கு மட்டுமே இதில் சக்தி இருக்குமாம்.. அதற்கு மேல் அவைகளை கழற்றி, ஏதாவது நீர் நிலைகள் அல்லது மக்கள் நடமாட்டமில்லாத இடங்களில் வீசிவிட வேண்டும்.
ஒருவேளை, பாதுகாப்பு அல்லது வேறு ஏதாவது காரணத்துக்காக கயிறு கட்டியிருந்தால், அந்த கயிறை 21 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டுமாம். ஒருவேளை 21 நாட்களுக்கு முன்பே, கயிறு தானாக அவிழ்ந்துவிட்டால், அதை மறுபடியும் கட்டக்கூடாது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications