லட்டுக்காக திருப்பதிக்கு எல்லாம் போக வேண்டாம்! ஆனாலும் லட்டு பிரசாதம் கிடைக்குமே! எங்கு தெரியுமா?
திருப்பதி: இனி திருப்பதி போகாமலேயே லட்டை வாங்கலாமே! எங்கே கிடைக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருப்பதி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது லட்டுதான். சர்க்கரை நோயாளிகள் கூட ஏழுமலையான் கோயில் லட்டு ஒன்றும் செய்யாது என்ற நம்பிக்கையுடன் சாப்பிட்டு வருகிறார்கள்.

இந்த லட்டை வாங்க பலர் வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கிறார்கள். ஆரம்பத்தில் பெரிய சைஸில் இருந்த லட்டு தற்போது சிறிய சாத்துக்குடி பழத்தின் சைஸில் உள்ளது. எனினும் லட்டு லட்டுதானே! தினந்தோறும் 3 முதல் 5 லட்சம் வரை லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
இதனால் லட்டு பிரசாதம் மூலமே பல லட்சம் வருமானம் கிடைக்கிறது. இந்த லட்டுக்காகவே பக்தர்கள் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்கிறார்கள். திருப்பதிக்கு போயிருந்தோம் என்றாலே மற்றவர்கள் லட்டைத்தான் கேட்பார்கள்.
அது போல் முடி திருத்தும் கடையில் கோடையை சமாளிக்க மொட்டை போட்டாலும் கூட "லட்டு எங்கப்பா" என கேட்காதவர்களே இருக்க மாட்டார்கள். திருப்பதியில் இந்த லட்டு செய்யும் இடத்திலும் விநியோகம் செய்யும் இடத்திலும் ஒரு வாசம் வரும் பாருங்க! அப்பப்பா!
அப்படிப்பட்ட லட்டு பிரசாதம் , திருப்பதியில் மட்டும்தான் கிடைக்கும் என நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா, அப்படி என்றால் அது தவறு! விசாகபட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா கோயிலில் இந்த லட்டு பிரசாதம் கிடைக்கிறது. அதுவும் தினமும் இல்லை. இது மாதத்தில் ஒரு நாள் மட்டுமே கிடைக்கும்.
இந்த லட்டு பிரசாதம் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவை பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டு இங்கு கவுன்ட்டரில் விற்பனை செய்யப்படுகிறது. மாதத்தில் ஒரு நாள் இந்த விற்பனை செய்யப்படும். இந்த திருமலை திருப்பதி லட்டு விற்பனை ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை கிடைக்கும். திருமலையில் இருந்து நேரடியாக இங்கு பக்தர்கள் வந்து வாங்கிச் செல்கிறார்கள். திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்த லட்டுக்கள் இந்த கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு தேவஸ்தானத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு பக்தர்களுக்கும் இரு லட்டுகள் வழங்கப்படுகின்றன. எனினும் எந்த நிர்ணயமும் இல்லை. இருப்பிற்கேற்ப லட்டுகளை வாங்கிச் செல்லலாம். இந்த கோயிலில் 5 அல்லது 6 மணி நேரத்தில் லட்டு விற்பனை முடிந்துவிடுகிறது.
திருப்பதி லட்டுக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. வேறு எங்கும் அது போல் லட்டை தயாரித்து வழங்குவதில்லை. கீழ் திருப்பதியில் போலி லட்டை விற்பனை செய்கிறார்கள். ஆனால் அதை பெரும்பாலானோர் வாங்குவதில்லை. கடலை மாவு, சர்க்கரை, நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி, கற்கண்டு, உலர் திராட்சை, குங்குமப்பூ ஆகியவைகளை குறிப்பிட்ட அளவில் அதற்கென உள்ள முறைப்படி சேர்த்து திருப்பதி லட்டு தயாரிக்கப்படுகிறது.
ஏழுமலையானுக்கு பிரசாதங்களை தயாரித்து பூஜை செய்ய வழங்கி வந்தவர் கல்யாண ஐயங்கார் குடும்பத்தினர். இவர்கள் தான் பூந்தியை லட்டாக்கி பிரசாதமாக்கியவர்கள் என்று சொல்லப்படுகிறது. 'கல்யாணம் ஐயங்கார்' என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்ட அவரின் இயற்பெயர் ஸ்ரீமான் பூதேரி பத்தங்கி ஸ்ரீனிவாசராகவன். பூதேரி கிராமத்திலிருந்து வந்து தன் உறவினர்களுடன் திருமலையில் தங்கி திருமலை வெங்கடேஷ பெருமாளுக்கு குடும்பத்துடன் கைங்கரியம் செய்யும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications