Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த பறவை உங்க வீட்டில் கூடு கட்டுதா? அப்ப பணம், மகிழ்ச்சி தங்கும்.. பறவைகள் போட்டோவை இப்படி வைங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பறவை வளர்ப்பதை பலரும் விரும்புகிறார்கள்.. குறிப்பிட்ட பறவைகளை வீடுகளில் வளர்த்து வருவதை காண்கிறோம்.. எனினும், வீடுகளில் பறவைகள் வீட்டில் கூடு கட்டினால் நல்லதா? எந்த பறவைகள் வீடுகளில் கூடு கட்டினால் நல்லது? என்றுகூட ஆன்மீகத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

பறவைகள் என்பது, நம்முடைய கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவே அமைந்துள்ளது.. முருகனின் வாகனமாக கருதப்படுவதால், வீட்டுக்குள் மயில் வருவது அபூர்வமாகவும், நன்மைக்குரியதாகவும் பார்க்கப்படுகிறது. மயில்கள் வீடுகளுக்குள் வராத பட்சத்தில், மயிலிறகு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

spirituality birds vastu

பறவைகள்: Love Birdsகளை வளர்ப்பதாக இருந்தால், அதனுடைய கூடு வடகிழக்கு திசையை நோக்கி இருக்கும்படியும், காற்றோட்டமான சூழல் இருக்கும்படியும் பார்த்து கொள்ளலாம்.

வீடுகளில் சில பறவைகள் கூடு கட்டினால் மிகவும் நல்லது.. ஏனென்றால், உயிரினங்களுக்கு தெய்வ சக்தியை அறியும் ஆற்றல் உள்ளது. எனவே, புறா, குருவி, அணில் போன்றவை கூடு கட்டினால் அதனை கலைக்கக்கூடாது என்பார்கள்.. சிலசமயம், இந்த பறவைகளின் கூட்டை கலைப்பது வீட்டிற்கு கெட்ட சகுனமாக அமையலாம். அதேபோல வீட்டிற்குள் பறவை வந்தாலும் விரட்டக்கூடாது.

புறாவை எடுத்துக் கொண்டால், மங்களம் மற்றும் அமைதியின் சின்னமாக கருதப்படுகிறது. வீட்டில் ஒரு புறா கூடு இருப்பது மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அதிகரிக்க செய்யும் என்பது நம்பிக்கையாக உள்ளது..

புறா கூடுகள்: எனினும், புறாவின் வீடு அழுக்காக இருந்தால், அது ஒரு அசுப அறிகுறியை தரக்கூடியதாம்.. புறாக்கள் வலுக்கட்டாயமாக வந்து கூடு கட்ட நினைத்தாலும், அது குடும்பத்திற்கு நல்லதில்லை என்கிறார்கள். அதேபோல, வீட்டின் ஜன்னல் அல்லது பால்கனியில் புறா கூடு இருந்தால், அது துரதிர்ஷ்டம் என்கிறார்கள். வீட்டில் தேன் கூடு இருப்பதும் நல்லதல்ல என்கிறது சாஸ்திரம்.. இதனால், வீட்டில் கஷ்டம் சேர்ந்துவிடுமாம்..

அடுத்ததாக சிட்டுக்குருவிகளை சொல்லலாம்... தெய்வ நம்பிக்கையை அதிகப்படுத்தும் சிட்டுக்குருவி, வீட்டில் கூடு கட்டினால் அதை எக்காரணம் கொண்டும் கலைக்காமல் இருந்தாலே போதும்.. புதிதாக திருமணமான தம்பதியர் வீட்டில், சிட்டுக்குருவி கூடு கட்டினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.. ஒருவேளை கூடுகட்டாமல் அடிக்கடி சிட்டுக்குருவி வீட்டுக்குள் வருவதாக இருந்தால், சிறிது தண்ணீரும், வைக்கோலும் வைத்தாலே போதும்.

சிட்டுக்குருவிகள்: சிட்டுக்குருவிகளின் படங்களைகூட வீட்டில் வைப்பதும் நல்ல பலன்களை தரக்கூடியதே.. இதனால், வாஸ்து தோஷங்கள் எளிதாக நீங்குவதுடன், எதிர்மறையையும் வீட்டிலிருந்து அகற்றுகிறது. இந்த சிட்டுக்குருவி போட்டோக்களை வீட்டின் கிழக்கு திசையில் வைக்கலாம்.

சிட்டுக்குருவி என்றில்லை.. பொதுவாக, பறவைகளின் போட்டோக்களை வீடுகளில் வைப்பதுகூட, குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சூழலை உருவாக்கும் என்கிறார்கள்.. அந்தவகையில், வாத்துகள், கிளிகள், மயில்கள் போன்ற ஒரு ஜோடி பறவைகளின் உருவத்தை அல்லது படத்தை வீட்டில் வைக்கலாம்..

அமைதி மகிழ்ச்சி: அதுமட்டுமல்ல, ஜோடி பறவைகளின் போட்டோக்களை புதிதாக மணமான தம்பதிகளின் படுக்கையறையில் வைத்திருப்பதால் இணக்கம் கூடும் என்பது நம்பிக்கையாகும்.. வீட்டில் அன்பும் அமைதியும் குறைவில்லாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது .

அதேசமயம், கரையான் கூடு, குளவி கூடு போன்ற பூச்சிகள் கட்டும் கூடுகள், வீடுகளில் இருப்பது மிகவும் ஆபத்தானவை என்கிறார்கள்.. அதிலும், கரையான் கூடுகள் இருந்தால், அந்த குடும்பத்தில் வீண் விரயங்களும், நிம்மதியின்மையும் சேர்ந்துவிடும்.. அதனால், கரையான்கூடு இருந்தால மட்டும் அதனை உடனடியாக அகற்றிவிட வேண்டும்.. பிறகு அந்த இடத்தில், சிறிது சிமெண்ட் வைத்து பூசி விட்டால் போதும்.. இதனால், அங்கு மீண்டும் மீண்டும் கரையான் படையெடுத்து வராமல் தடுக்கப்பட்டுவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+