திருப்பதின்னாலே லட்டுதான்.. அந்த பிரசாதத்தை யார் தயாரிக்கிறார்கள் தெரியுமா? லட்டின் ரெசிபி இதுதான்!
திருப்பதி: திருப்பதிக்கு போனால் திருப்பம், அப்புறம் லட்டு! இந்த லட்டை யார் தயாரிக்கிறார்கள் தெரியுமா?
திருப்பதி என்றாலே நம் நினைவுக்கு வருவது லட்டுதான். அப்போதெல்லாம் அக்கம்பக்கத்தில் இருப்போர், திடீரென காலையில் நம் வீடுகளுக்கு வந்து லட்டு பிரசாதத்தையும் கருப்பு நிற கயிறையும் கொடுப்பார்கள்.

உள்ளே அழைத்ததும் , "திருப்பதிக்கு போய்ட்டு வந்தோம், அதான் பிரசாதம் கொடுக்கலாம்" என வந்தேன் என்பார்கள். நாமும் தரிசனம் எப்படியிருந்தது என கேட்போம்.
இப்படியாக தாங்கள் வாங்கும் லட்டை அனைவருக்கும் கொடுத்து பகிர்ந்து உண்பார்கள். அந்த லட்டை கடந்த காலங்களில் நிறைய அளவில் வாங்கி, அதையே மூன்று வேளையும் உணவாக சாப்பிட்டவர்களும் உண்டு. எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டு போகாது அந்த லட்டு.
திருப்பதி லட்டு எல்லோருக்கும் கிடைத்துவிடாது. பெருமாள் யாரெல்லாம் அவரது பிரசாதத்தை சாப்பிட வேண்டும் என நினைக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். அவர் கூடாது என முடிவு செய்துவிட்டால், தலை கீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் லட்டு கிடைக்கவே கிடைக்காது.
அது போல் தான் திருப்பதி தரிசனமும்! வெங்கடாஜலபதி விருப்பப்பட்டால்தான் நாம் அவரை தேடி போக முடியும். இல்லாவிட்டால் எத்தனை முறை பிளான் போட்டாலும் அது சொதப்பலில்தான் முடியும். திருப்பதி ஏழுமலையானுக்கு ஏராளமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன.
அதில் பொங்கல், தயிர்சாதம், புளியஞ்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், லட்டு, பாயாசம், தோசை, ரவா கேசரி, முந்திரிப் பருப்பு, எள்ளு சாதம், கேசரி என விதவிதமான பிரசாதங்கள் செய்யப்படுகின்றன. இத்தனை படைத்தாலும் லட்டை மட்டும் எந்த பிரசாதமும் அடிச்சிக்க முடியாது. வாசனையே தனிதான்.
திருப்பதி லட்டுக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. வேறு எங்கு அது போல் லட்டை தயாரித்து வழங்குவதில்லை. கீழ் திருப்பதியில் போலி லட்டை விற்பனை செய்கிறார்கள். ஆனால் அதை பெரும்பாலானோர் வாங்குவதில்லை. கடலை மாவு, சர்க்கரை, நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி,கல்கண்டு, உலர் திராட்சை, குங்குமப்பூ ஆகியவைகளை குறிப்பிட்ட அளவில் அதற்கென உள்ள முறைப்படி சேர்த்து திருப்பதி லட்டு தயாரிக்கப்படுகிறது.
திருப்பதியில் தினந்தோறும் 2 லட்சம் முதல் 3 லட்சம் லட்டுகள் வரை லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஏழுமலையானுக்கு பிரசாதங்களை தயாரித்து பூஜை செய்ய வழங்கி வந்தவர் கல்யாண ஐயங்கார் குடும்பத்தினர். இவர்கள் தான் பூந்தியை லட்டாக்கி பிரசாதமாக்கியவர்கள் என்று சொல்லப்படுகிறது. 'கல்யாணம் ஐயங்கார்' என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்ட அவரின் இயற்பெயர் ஸ்ரீமான் பூதேரி பத்தங்கி ஸ்ரீனிவாசராகவன். பூதேரி கிராமத்திலிருந்து வந்து தன் உறவினர்களுடன் திருமலையில் தங்கி திருமலை வெங்கடேஷ பெருமாளுக்கு குடும்பத்துடன் கைங்கரியம் செய்யும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications