மாரியம்மா எங்கள் மாரியம்மா.. ஆடி மாதத்துக்கும், மாரியம்மனுக்கும் என்ன சம்பந்தம்? வேப்பிலை ஏன்? ஓஹோ
சென்னை: ஆடி மாதத்தில் அம்மனை தரிசிக்க என்ன காரணம்? வேப்பிலை மாரியம்மாள் என்று பெயர் வர காரணம் என்ன? ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன்? இவைகளுக்கெல்லாம் ஆன்மீகம் மற்றும் அறிவியல் காரணங்கள் அடங்கியிருக்கின்றன.
தவத்தில் சிறந்து விளங்கிய ஜமதக்னி முனிவரை, பொறாமை கொண்ட, கார்த்துவீரியா சூரனின் மகன்கள் கொன்று விடுகிறார்கள். இதை கேள்விப்பட்ட ஜமதக்னி முனிவரின் மனைவி ரோணுகா தேவி, தீயில் விழுந்து மாண்டு போக முடிவு செய்கிறாள்.

பதிவிரதை: ஆனால், பதிவிரதையான ரேணுகா உயிரிழப்பதை, மழையாக பொழிந்து தடுத்த நிறுத்திவிடுகிறார் இந்திரன். எனினும், ரோணுகா தேவியின் உடம்பெல்லாம் முத்து முத்தாக கொப்புளங்கள் வந்துவிட்டன. உடுத்தியிருந்த ஆடையும் தீயில் எரிந்துவிட்டது. எனவே, தன்னுடைய உடலை மறைக்க அங்கிருந்த வேப்பிலைகளை ஆடையாக உடுத்திக்கொண்டாள் ரேணுகா தேவி.
பிறகு தன்னுடைய பசி தீர அருகிலிருந்த கிராமத்திற்கு சென்று யாசகம் கேட்டபோது, அரிசி, வெல்லம், இளநீரை உணவாக அம்மக்கள் தந்துள்ளனர். இந்த பொருட்களை வைத்து கூழ் தயாரித்து குடித்தாளாம் ரேணுகா தேவி..
ரேணுகா தேவி: இறுதியில் ரேணுகா தேவியின் பக்திக்கு மனம் இறங்கிய சிவ பெருமான், ஆடி மாதத்தில் "மாரியம்மன்" என்ற பெயரில் வழிபடப்படுவாள் என்றும், விரும்பி சாப்பிட்ட கூழ் அவளுக்குரிய உணவாக படைத்து வழிபடப்படும் என்றும் வரம் தந்தாராம். இதற்கு பிறகே மிகச்சிறந்த சிவபக்தையான ரேணுகா தேவியை, பிற்காலத்தில் மாரியம்மனாக வழிபட துவங்கினராம்.
அதுமட்டுமல்ல, ஆடி மாதத்தில் சிவபெருமானே சக்தியின் அம்சத்துக்குள் அடங்கிவிடுகிறார் என்பது ஐதீகம். மழைக்குரிய தெய்வமாக மாரியம்மன் திகழ்வதால்தான், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு வரும் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
ஆடி மாதம்: அதுமட்டுமல்ல, வெப்பமும் காற்றும் இணைந்திருப்பதுதான் ஆடி மாதம்.. இந்த மாதத்தில் வெப்பம் குறைந்து, குளிர்ந்த காற்று பரவும்.. மேலும், உடல் உஷ்ணமான நோய்கள் தாக்கக் கூடும்.. எனவேதான், ஆடி மாத வழிபாடுகளில், மாவிலையும் வேப்பிலையும் முதன்மையான இடத்தில் உள்ளன. மாவிளக்கேற்றி வழிபடுவதும் எலுமிச்சை சாதம், எலுமிச்சை தீபம் போன்றவற்றை செய்வதற்கு காரணமும், தொற்றிலிருந்து விடுபடுவதற்குதான்.












Click it and Unblock the Notifications