11 நாட்கள் ஒளி வடிவில் அண்ணாமலையார்! திருக்கார்த்திகை தீபத்திற்கு அவல் பொரி படைப்பது ஏன் தெரியுமா?
சென்னை: கார்த்திகை தீபத்தன்று அவல் பொரி ஏன் படைக்கப்படுகிறது தெரியுமா?
திரு கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி நம் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிப்படுவது வழக்கம். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.

தான் என்ற அகந்தையுடன் இருப்பவர்களால் இறைவனை அடைய முடியாது. இறைவன் ஜோதி வடிவானவன். அனைத்து உயிர்களுக்குள்ளும் இறைவன் நிறைந்திருக்கிறான் என்பதை உலகிற்கு சிவபெருமான் உணர்த்திய தினம்தான் கார்த்திகை தீபத்திருவிழா ஆகும்.
அடி முடி காணா சிவனே என்ற சொல்லுக்கு வலுசேர்க்கும் விதமாக, சிவனின் அடி, முடியை காண புறப்பட்டு, தோற்றுப் போன பிரம்மனுக்கும், விஷ்ணுவிற்கும், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் சிவ பெருமான் ஜோதி வடிவாக காட்சி கொடுத்த தினத்தை தான் நாம் திருக்கார்த்திகை தீபத்திருநாளாக கொண்டாடுகிறோம்.
இந்த தீபத்தின் போது குறைந்தபட்சம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும். அதிகபட்சமாக 50, 100 என எத்தனை விளக்குகள் ஏற்றலாம். பூஜை அறை, படுக்கை அறை, சமையல் அறை, படுக்கை அறை, கூடம் என அனைத்து இடங்களிலும் எத்தனை விளக்குகள் ஏற்ற முடியுமோ ஏற்றலாம்.
இந்த நிலையில் திருக்கார்த்திகை தீபத்திற்கு அவல் பொரி படைப்பது வழக்கம். வெல்லம் பாகு எடுத்து அதில் அவல், வேர்க்கடலை. பொட்டுக் கடலை, முந்திரி, திராட்சை என்பதை எல்லாம் போட்டு கலந்து உருண்டை பிடித்து நெய்வேத்தியம் செய்து வழிபட வேண்டும். இது ஏன் என்றால் சிவப்பெருமான் என்றால் எளியோருக்கெல்லாம் எளியோர் என்பதால் எளிதாக கிடைக்கும் அவலை படைப்பது வழக்கம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications