வாசற்படியில் ஏன் உட்காரக் கூடாது? முன்னோர்கள் எதையும் சும்மா சொல்லிவிடவில்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாசற்படியில் உட்காராதே, நிற்காதே என நம் பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம். இது ஏன் என கேட்டால் பலருக்கு விளக்கங்கள் கிடைக்காது. உட்கார கூடாதுன்னா உட்காரக் கூடாதுதான் என்று பதில் வரும். இது என்பதற்கான காரணத்தை பார்க்கலாம்.தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம். ஒரு வீட்டின் தலைவாசலில் அஷ்டலஷ்மியும் வாசம் செய்வது போல, தலைவாசல் கதவில் குலதெய்வம் குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறப்படுகிறது. உங்களுடைய குலதெய்வம் உங்கள் வீட்டின் கதவில் தான் குடியிருக்கும்.

அதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டின் கதவை சத்தமில்லாமல் திறக்கவும், மூடவும் கூறுவார்கள். அடிக்கடி எண்ணெய் விட்டு சுலபமாக மூடும்படி வைத்திருப்பார்கள். குழந்தைகள் கதவின் தாழ்ப்பாளை ஆட்டும் பொழுது பெரியவர்கள் அதட்டுவதை நாம் கேட்டிருப்போம். வீட்டின் தலை வாசலில் இருபுறங்களிலும் விளக்கு ஏற்றி வைப்பது பண்டைய கால வழக்கமாக நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

nilaivasal kuladeivam

அந்த இரண்டு புறங்களிலும் கும்ப தேவதைகள் அமர்ந்திருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த தேவதைகளை குளிர்விக்கவே அப்பகுதியில் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. அவர்களை வணங்குவதற்காகவே வீட்டின் தலைவாசலை குள்ளமாக வடிவமைத்து வைத்திருப்பார்கள். அந்த வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டிற்குள் நுழையும் முன் கும்ப தேவதைகளை வணங்கி செல்லுவதற்கு தான் இவ்வாறு உயரம் குறைவாக முந்தைய காலங்களில் கதவுகள் வடிவமைக்கப்பட்டன.

அது போல எப்படி நம் கோயில்களில் வாசல் படியை மிதிக்காமல் தாண்டி உள்ளே செல்கிறோமோ அதே போல் தான் வீடு என்னும் கோவிலில் வாசல் படிகளை தாண்டி உள்ளே செல்லவேண்டும். நம் வீட்டின் நிலைவாசல் படிகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வழிபடுவதும் இந்த தேவதைகளுக்கு தான்.

அத்தகைய தெய்வீக சக்தி வாய்ந்த இந்த நிலைவாசல் படியை மிதித்துக் கொண்டு உள்ளே செல்லக் கூடாது. அது போல் ஒருபோதும் நிலவாசல் படியில் அமரக் கூடாது. வீட்டின் தலை வாசலில் மகாலட்சுமிகளும், கதவில் குலதெய்வமும் வாசம் செய்வதால் அந்த இடத்தில் தலை வைத்து படுக்கக் கூடாது, தரித்திரம் ஏற்படுத்தும் என்பார்கள். அது போல் தலைவாசலில் கால் வைத்து நிற்கக் கூடாது. அங்கு நின்று தும்முவது, தலை வாருவது போன்றவற்றை செய்தால் வீட்டில் தரித்திரம் தான் உண்டாகும்.

இது போன்ற சில தவறுகளை வீட்டில் செய்தால் பணவரவு கட்டாயம் தடைபடும். வீட்டின் உள்ளவர்களுக்கு மன நிம்மதி கெடும். கெட்ட சக்திகளும் உள்ளே நுழைவதற்கு வசதியாக அமைந்து விடும். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் நம்முடைய குலதெய்வம் தான். அதனால் தான் எப்போதும் நம் வீட்டின் கதவுகளில் குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சில சமயங்களில் நமக்கு தெரியாமல் நாம் சில நேரங்களில் நமக்கு வரும் ஆபத்துக்கள் விலகியதை அடுத்து தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விட்டது என்று கூறுவோம்.

நம்முடைய பல கஷ்டங்களில் இருந்து குலதெய்வம் நம் துணையாக இருந்து பாதுகாப்பதாக ஆன்மீக சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே இதுவரை தெரியாமல் செய்திருந்தாலும், இனியும் தலைவாசலில் இந்த தவறுகளை நாம் செய்யாமல் இருப்பது தான் மிகவும் நல்லது. நமது வீட்டின் தலைவாசல் என்ற நிலைவாசல் படியில் மஞ்சள் குங்குமம் இட்டு மாலை நேரங்களில் விளக்கு வைத்து வழிபடுவோம். இவையெல்லாம்தான் வாசற்படியில் அமரக் கூடாததற்கு காரணம். இந்த தகவல்கள் குவோராவில் இருந்து எடுக்கப்பட்டவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+