Ragukalam and Yemakandam: இரவு நேரத்தில் ஏன் ராகு காலம், எமகண்டம் வருவதில்லை!
சென்னை: இரவு நேரத்தில் ஏன் ராகு காலம் மற்றும் எமகண்டம் வருவதில்லை என்பது தெரியுமா. பொதுவாக ராகு காலம், எமகண்டங்களை கணக்கில் கொண்டு நற்காரியங்களில் ஈடுபடுவார்கள். அப்படிப்பட்ட இவை காலை 6 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை ஒன்றரை மணி நேரம் என தினமும் சுழற்சி முறையில் வரும்.
உதாரணமாக திங்கள் கிழமை ராகு காலம்- காலை 7.30- 9, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30- 6 மணி வரை... இப்படியே சொல்லி கொண்டிருக்கலாம்.

இதுகுறித்து குருசாமி ஆறுமுகம் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இரவில் ஏன் ராகு காலம் மற்றும் எமகண்டம் இல்லை. மற்றும் முதலில் ஞாயிறு...சனி வரை 7 கிரகங்கள்.
ராகு கேது கிரகங்கள் அல்ல. விஷப்பாம்புகள் சந்திரனை, சூரியனை விழுங்கி அந்த நேரங்களில் உங்களது மனம் மற்றும் உடல் நிலைகளை பாதித்து, சிந்திக்கும் ஆற்றல், செயல்பாடுகளை மறைக்கின்றன, கெடுக்கின்றன என்ற நம்பிக்கைகள்.
இவைகள் விண்வெளியில் கிரகங்களைப் போல சுற்றுகிறதா? இல்லை. இவ்வாறாக ராகுவும் கேதுவும் சுற்றும்போது, உங்களை தினமும் 90 நிமிடங்கள் மறைத்து, அவைகளின் நிழல் உங்கள் மீது விழுவதால் கேடு கெட்ட காலம். உங்களது உடலை மனதை நீர்நிலையைப் பாதிக்கிறது என நம்பிக்கை. அதாவது ஒரு நாளைக்கு 90 நிமிடம்.
வட இந்தியாவில் ராகு எமகண்டத்துக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை. தென்னிந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் முக்கியமாக ஏற்படுத்தியது நவகிரகங்கள், சோதிடம்.
முதலில் ராகு கேது நம்பிக்கைகள் விஷ்ணுபுராணத்தில் உருவானது. உலகத்தைத் தோற்றுவிக்க தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போட்டி.
அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாருக்கு (வீனஸ்), ரகஸ்ய மந்திரங்கள் கிடைத்து இறந்தவர்களை பிழைக்கவைக்கும் சக்தி கிடைத்தது. அசுரர்கள் தேவர்களை விட உயர்ந்துவிட்டனர்.
தேவர்கள் அய்யய்யோ என விஷ்ணுவை பிரார்த்திக்க, விஷ்ணு, பாற்கடலை வாசுகி பாம்பைக் கயிறாகக் கொண்டு, இமயமலையை மதகு ஆகக்கொண்டு கடைந்தால் உங்களுக்கும் சாகாத அமிர்தம் கிடைக்கும் என்று சொன்னார்.
தேவர்களால் மட்டும் கடைய முடியவில்லை. அசுரர்களின் உதவிகளைக் கேட்டனர். அசுரர்கள் சரி, ஆனால் சமபங்கு வேணும் எனக் கேட்க தேவர்களும் ஒத்துக் கொண்டனர். அமிர்தம் கிடைத்தது. உடனே அசுரர்கள் அபகரித்துக் கொண்டனர்.
மறுபடியும் தேவர்கள் விஷ்ணுவை வேண்ட , தெரியுமே என்ன வேஷம் விஷ்ணு போடுவார் என்று! ஆமாம். மோகினி வேடம் போட அசுரர்கள் மோகினி பின்னால் ஜொள்ளுவடித்துச் சென்றனர்.
ஆனால் அதில் ஒருவன் ஸ்வர்பானு என்ற அரக்கன் இவனுக ஏதோ மோசம் செய்கிறார்கள் என தேவர்களுடன் வரிசையில் அமிர்தம் குடிக்க நிற்கிறான் !
சூரியனும் சந்திரனும் தேவர் குலத்தவர்கள். ஸ்வர்பானு வரிசையில் அமிர்தம் வேண்டி நிற்பதை பார்த்து விடுகின்றனர். அமிர்தம் கிடைத்து ஸ்வர்பானு குடிக்கப் போகிறான். இதை சந்திரசூரியர் விஷ்ணுவிடம் போட்டுக் கொடுக்க, விஷ்ணு , தனது சுதர்சன சக்கரத்தை வீச தலையை துண்டித்து விடுகிறது. ஆனால் இதற்குள் அமிர்தம் உடலில் இறங்கிவிட்டது. சாக மாட்டான். ஒன்றுக்கு இரண்டு உருவம் எடுத்தான்.
தலைப்பாகம் உருவம் ராகு; உடம்பு உருவம் கேது. இவர்களுக்கு சூரிய சந்திரர்களின் மேல் கோபம், பழிவாங்கத் துடிக்கிறான். அதனால் வானில் இவர்களை முழுங்க சுற்றிக் கொண்டே வருகிறான். ஸ்வர்பானு ராகு, கேதுவாக.
கிரேக்க வானசாஸ்திரங்கள், சோதிடம் வட இந்தியாவுக்கு வந்த காலங்கள் கிபி 2-3நூற்றாண்டு. யவனேஷ்வரா என்பவர் யவனஜாதகம் என சமஸ்கிரிதத்தில் எழுதினார். இது தென்னிந்தியாவிலும் 8ம் நூற்றாண்டுகளில் பரவின.
தென்னிந்தியாவில் நாடி சோதிடம் என ஓலை சோதிடம் என பலவாறாக எழுதப்பட்டன. வடநாடுகளில் வைணவத்தைச் சேர்ந்தது. தமிழ்நாட்டில் சைவசிவனைச் சார்ந்தது. வைத்தீஷ்வரன் என வைத்தியத்துக்கும் பிற தமிழ் சாஸ்திரங்களுக்கும் தலைவன்.
சரி கேள்விக்குப்பதில். இந்து நம்பிக்கைகளில் சூரிய உதயத்திலிருந்து சூரியமறைவு வரைதான் நாள். இரவு கணக்கில் வராது. ஆங்கில நாட்களைப்போன்று சமமும் கிடையாது. வெயில் காலங்களில் நாளின் அளவு அதிகரித்தும், குளிர்காலங்களில் நாளின் அளவு குறைந்தும் வரும். அதுவும்போக வாரம் கிடையாது. வளர்பிறை, தேய்பிறை. அமாவாசைக்கு மறுநாள் மாதம் பிறக்கும். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications