முன்னோர்களின் சொத்துகள் உங்களுக்கு கிடைக்குமா கிடைக்காதா? ஜாதகத்தை எடுங்க 5ஆவது இடத்தை பாருங்க
சென்னை: முன்னோர்களின் சொத்துகள் உங்களுக்கு கிடைக்குமா கிடைக்காதா என்பதை தெரிந்துக் கொள்ளலாம். அது போல் குலதெய்வம் அருள் இருக்கிறதா என்பதையும் பார்க்கலாம்.
இதுகுறித்து தமிழ் குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: நமது ஜாதகத்தில் 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். இந்த ஸ்தானம் தான் நம் முன் ஜென்மத்தினை பற்றி உணர்த்துகிறது. நம் முன்னோர்கள் மற்றும் நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியத்திற்கு ஏற்ப இந்த பிறப்பு அமைகிறது.

ஒரு ஜாதகத்தில் 5ஆம் அதிபதியும், 5ஆம் இடமும் சுபர் பார்வை, சேர்க்கையில் சுப நிலையில் அமையப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். 5ஆம் இடம், அதிர்ஷ்டம்,உழைக்காமல் வரும் பணம், முன்னோர்கள் சொத்து, பூர்வீக இடம், குழந்தை செல்வம்,ஆழ் மனம் .5 வலுப்பெறும்போது இவை அனைத்தும் நல்ல நிலையில் அமைந்து விடுகிறது.
நம் குல தெய்வத்தின் நிலையும் இங்கே தெரியும். இவர்களுக்கு குல தெய்வ அருளும் நன்றாக அமைந்து விடுகிறது. ஒரு ஜாதகத்தில் லக்னம் முதற்கொண்டு அனைத்து பாவகமும் பாதிக்கப்பட்டிருந்தாலும் 5ஆம் இடம் வலுப்பெற்றுவிட்டால் ஏதோ ஒரு வாய்ப்புகள் கிடைத்து வாழ்ந்துவிடுகிறார்கள். முன்னோர்கள் சொத்துகள் மற்றும் ஜாதகருக்காக வீட்டில் ஒருவர் உழைத்து தருகிறார்.
இங்கு பாவகிரகங்களான சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது, போன்றவை இருந்து 5-ஆம் அதிபதியும் பாதிக்கப்படும்போது தான் இங்கு தோஷமாக செயல்படுகிறது. அதிலும் இரண்டு, மூன்று பாவகிரகங்கள் ஒரே நேரத்தில் 5-ஆம் இடத்திற்கு தொடர்பு கொள்ளும் போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. 5-ஆம் இடம் ஆழ்மனதை குறிக்கும். இது போன்ற அமைப்பு உடையவர்களுக்கு மன அமைதி இருக்காது. எப்போதும் மன உளைச்சலில் இருப்பார்கள்.
கோபத்திலும், ஆத்திரத்திலும் கடுமையாக நடந்து கொள்வார்கள். திடீரென்று சாந்தமாக நடந்துக் கொள்வார்கள். இது போன்ற முரண்பாடுகள் உடையவர்களாக இருப்பார்கள். காதல், மது பழக்கம் போன்று ஏதேனும் ஒன்றுக்கு எளிதில் அடிமையாகுவார்கள். மற்றவர்கள் பாசம் காட்டி இவர்களை ஏமாற்றுவார்கள்.
யாராவது ஒருவர் மீது தீவிர அன்பு செலுத்திவிட்டு அவர்கள் பாசத்திற்காக ஏங்குவார்கள். முன்னோர்கள் சொத்துகள் கிடைக்காமல் போவதும், பூர்வீகத்தை விட்டு வெளியேறுவதும் இதனால் தான். இந்த அமைப்பு உடையவர்களுக்கு குலதெய்வம் இருப்பிடம் தெரிவதில்லை. அப்படி தெரிந்து வழிபாடு செய்தாலும் மனதிருப்தி கிடைப்பதில்லை.
இந்த அமைப்புகள் புத்திர தோஷத்தையும் ஏற்படுத்துகிறது. இதுபோன்று 5ஆம் இடம் முழுவதுமாக பாதிக்கப்பட்ட ஜாதகங்களில் எத்தனை யோக கிரக சேர்க்கைகள் இருந்தாலும் பெரிய அளவில் வேலை செய்வதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications