மகாளய அமாவாசை நாளில் மறக்காமல் தானம் கொடுங்கள்.. முன்னோர்கள் ஆசியோடு மன நிம்மதி கிடைக்கும்
சென்னை: மகாளய அமாவாசை இன்று சனிக்கிழமை தினத்தில் வருவது மிகவும் விசேஷமாகப் பார்க்கப்படுகின்றது. இந்த நாளில் நாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதுடன் சில பொருட்களை தானமாக தர வேண்டும்.
எத்தனையோ பேர் பணமிருந்தாலும் மன நிம்மதி இல்லாமல் தவிக்கிறார்கள். சோதனை மேல் சோதனை வருகிறதே எப்போது பிரச்சினை தீரும் என்று தவித்துக்கொண்டிருக்கின்றனர். நம்முடைய வீட்டில் நல்ல காரியம் நடக்காதா என்று ஏங்கித் தவிக்கின்றனர். பித்ரு தோஷம் இருந்தால் நம்முடைய வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெறாது. காரிய தடைகள் உண்டாகும் எனவே நாம் மறைந்த நம்முடைய முன்னோர்களுக்கு அமாவாசை நாட்களில் தர்ப்பணம் தர வேண்டும்.

மகாளய பட்ச காலம் பிரதமை தொடங்கி அமாவாசை வரை அனுஷ்டிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் எமனின் கோரைப்பற்கள் வெளியே தெரியும் மாதமாக இருப்பதால் புரட்டாசி அமாவாசை தினத்தில் பிதுர்பூஜை செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் எமனுக்கும் மகிழ்ச்சி ஏற்படும். இறுதி காலத்தில் எம பயம் இருக்காது எனப் புராணங்கள் கூறுகின்றன.
துர்மரணம் அடைந்தவர்களுக்கு கண்டிப்பாக திதி கொடுப்பது அவசியம். இந்த மகாளய அமாவாசையில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது நல்லது தோஷம் தீரும். சமீபத்தில் இறந்தவர்களுக்கு கூட இந்த மகாளய அமாவாசையிலேயே தர்ப்பணம் கொடுப்பது நல்லது. முன்னோர்களுக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம்.
சனி அமாவாசை தினத்தில் ஏழை எளியோரை ஒருபோதும் நாம் தொந்தரவு அல்லது கஷ்டப்படுத்தக் கூடாது. ஏழை மக்களின் உருவில் சனி பகவான் இருக்கிறார். அவர்களை அவமதித்தால் சனி பகவானால் தண்டிக்கப்படுவீர்கள். நாம் அவர்களுக்கு உதவியோ, மரியாதை கொடுத்தாலே போதும் சனி பகவானின் ஆசி கிடைக்கும்.
இந்த நாளில் நம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறந்தது. இதனால் அவர்களின் ஆசி நமக்கு கிடைத்து வாழ்க்கை வளம்பெறும்.
பித்ரு தோஷம் உள்ளவர்கள் பூர்வ புண்ணியம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கால கட்டத்தில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட தோஷங்கள் நீங்கி நன்மைகளும், புண்ணியமும் கிடைக்கும். சனிக்கிழமை மகாளய அமாவாசை தினமாகும். இந்த மகாளய அமாவாசையில் கோவில்களுக்கு சென்று வழிபடுவதோடு பித்ரு தோஷம் நீங்க திதி தர்ப்பணம் அளிப்பதோடு தானம் செய்யுங்கள்.
புனித தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள், தங்கள் இல்லத்திலேயே அந்தணர்களை வரவழைத்து பித்ரு பூஜையை செய்யக் சொல்லி பலன் பெறலாம். அன்னதானம், உடை தானம், பசு தானம் ஆகியவை மிகவும் போற்றப்படுகின்றன. இதில் உங்களுக்கு எந்த தானத்தை செய்ய முடியுமோ அந்த தானத்தை செய்யுங்கள். கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உப்பு, உடைகள், பார்லி ஆகியவை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். முக்கியமாக அன்னதானம் கொடுப்பது சிறப்பானது.
அதோடு ஒரு திறந்த வெளியில் தெற்கு திசை பார்த்து ஒரு விளக்கு அல்லது தீபத்தை பார்த்து வணங்குவது மிகவும் நல்லது. உங்களின் முன்னோர்களை நினைத்து வழிபடுவதால் அவர்களின் ஆசி கிடைப்பதோடு மன நிம்மதியும் கிடைக்கும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications