மறந்தும் இந்த பொருளை தானமாக தராதீங்க.. பரிசாக வாங்க கூடாத பொருட்கள் என்னென்ன தெரியுமா? கர்சீப் கூடவா
சென்னை: ஒருவரிடம் இருந்து சில பொருட்களை தானமாக பிறருக்கு தரக்கூடாது என்பார்கள்.. அதேபோல, சில பொருட்களை இலவசமாக கொடுக்கக்கூடாது என்றும் சொல்வார்கள்.. இதுகுறித்து வாஸ்து சாஸ்திரத்திலும் சொல்லப்பட்டுள்ளது. அதை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
தானமாக நாம் கொடுப்பது பிறருக்கு உபயோகமாக இருக்க வேண்டும்.. நாம் பயன்படுத்தாத பொருட்களை அடுத்தவர்களுக்கு தானமாக தருவதில் பிரயோஜனம் இல்லை..

கர்ம வினைகள்: எந்த பொருளை தானமாக தந்தாலும், அந்த தானத்தின் மூலம் தானம் பெற்றவர் முழுமையாக பயனை அடையவேண்டும். அப்போதுதான், நம்முடைய பாவங்கள், கர்ம வினைகள் குறைக்கப்படும்.
அதற்காக பழைய துணிகளை பிறருக்கு தருவது தானமாக கருதப்பட மாட்டாது.. அப்படியே பழைய துணிகளை தந்தாலும், அதை துவைக்காமல், கிழிந்து போய் தரக்கூடாது.. இதனால், பாவம்தான் அதிகமாக வந்துசேரும். அந்தவகையில், புதியதாக வாங்கிய குடை, செருப்பு, கம்பளி, புதிய ஆடைகள், அரிசி, பருப்பு, எண்ணெய், பூசணிக்காய், பாய், நல்ல சாப்பாடு போன்றவற்றை புதியதாக வாங்கி தானமாக தரலாம். இது அனைத்துமே பிறருக்கு பயன்களை பெற்றுத்தரும்.
கர்சீப்: அதேபோல, நண்பர்களிடமிருந்து இலவசமாக சில பொருட்களை பெறக்கூடாது என்பார்கள்.. குறிப்பாக ஒருவரிடமிருந்து இலவசமாக உப்பை எடுத்து உபயோகிக்ககூடாது. இது கடன்சுமையை அதிகரிக்க செய்து, உடல் ஆரோக்கியத்துக்கும் பாதிப்பை தந்துவிடும். அதனால் உப்பை இலவசமாக யாருக்கும் தரக்கூடாது.
இலவசமாக கர்சீப்பையும் பயன்படுத்தக்கூடாது.. பிறரிடமிருந்து கர்சீப்பை வாங்கினால், அவர்களுடன் உறவு முறிந்துவிட வாய்ப்புள்ளதாம்.. குடும்ப உறுப்பினர்களுக்கும் உறவு சிதைந்துவிடும்.. அதனால், யாரிடமிருந்தும் இலவசமாக கர்சீப்பை எடுக்கவோ அல்லது யாருக்கும் கொடுக்கவோ கூடாது.
எண்ணெய்: சனியுடன் தொடர்புடைய இரும்பு பொருட்களையும் யாரிடமிருந்தும் இலவசமாக பெறக்கூடாது.. இதுவும் வறுமையை தந்துவிடும்.. ஊசி, எண்ணெய் போன்றவற்றையும் பிறரிடமிருந்து பெறக்கூடாது, தரவும் கூடாது. இவை அனைத்துமே குடும்ப பொருளாதாரத்தை சீரழித்துவிடும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
