குளியலறையில் மறந்தும் இதை வைக்காதீங்க.. வீட்டில் காலியாக வைக்க கூடாத 5 பொருள்.. பணக்கஷ்டம் வந்துடும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் சிலவற்றை காலியாக வைத்திருக்கக்கூடாது என்பார்கள்.. அப்படி காலியாக அந்த பொருளை வைத்திருப்பதால், குடும்பத்தில் மேலும் சிக்கல்களும், வறுமையும், இன்னலும் சேர்ந்து கொள்ளும் என்கிறார்கள்.

நம்முடைய வீட்டை பராமரிப்பதிலும், வீட்டில் மகிழ்ச்சி, செழுமை அதிகரிக்க பலவகையில் வாஸ்து குறிப்புகள் பேருதவி புரிகின்றன.. அந்த வகையில் நம்முடைய வீட்டில் பாசிடிவ் எனர்ஜி பெருகுவதுடன், நிதி நிலைமையும் சீராக வேண்டுமானால், எப்போதும் நிறைந்திருக்க சில பொருட்களை கட்டாயம் வைத்திருப்பது அவசியம்.

spirituality bathroom purse

அதேபோல, சில பொருட்களை கட்டாயம் வைத்திருக்கக்கூடாது என்பதும் அவசியம்.. அதேபோல, மேலும் சில பொருட்களை காலியாக வைத்திருக்க கூடாது என்பதும் அவசியம். அப்படி காலியாக வைத்திருந்தால், நிதி நெருக்கடிகள் மேலும் மோசமடைந்து நேர்மறை தாக்கங்கள் ஏற்படும். அந்தவகையில் 3 பொருட்களை மட்டும் இங்கே பார்ப்போம்.

உலோகம்: எப்போதுமே வீட்டில், பூ வைக்கும் உலோகத்தை வீட்டில் காலியாக வைக்கக் கூடாது என்பார்கள்.. அந்த உலோகத்திலுள்ள பூக்களை காயவிடவும் கூடாது.. அவை வாடும் முன்னேயே புதிய பூக்களை வைக்க வேண்டும்.. ஆனால், எக்காரணம் கொண்டும் பூக்கள் இல்லாமல் அவை வெறுமையாக இருக்கக்கூடாது.

அதேபோல, குளியலறையில் உள்ள பக்கெட்டுகள் காலியாக இருக்க கூடாது.. எப்போதும் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும். அப்போது தான் குடும்பம் மகிழ்ச்சியாகவும், பணம் நிறைந்ததாகவும் இருக்கும்... பக்கெட் காலியாக இருந்தால், குடும்பத்தில் நிதிப்பிரச்சனைகள் ஏற்படுமாம்.. அத்துடன் எதிர்மறை ஆற்றலை கொண்டுவந்துவிடும்.. எனவே தண்ணீரை எப்போதுமே நிரப்பியிருக்க வேண்டும். அதேபோல, குளிப்பதற்கு நீலநிற வாளியை பயன்படுத்துவது இன்னும் நல்லது.

பர்ஸ் காலி: அதேபோல நீங்கள் பயன்படுத்தும் பர்ஸை காலியாக வைத்திருக்கக்கூடாது.. உங்களிடம் பணம் இல்லாவிட்டாலும், அதில் கொஞ்சம் பணத்தை வைத்திருப்பது முக்கியம். காலியான பர்ஸ் வைத்திருப்பது துரதிர்ஷ்டத்தை கொண்டு வரக்கூடும். எனவே, ஒரு ரூபாய் நாணயமும், 20 ரூபாய் நோட்டும் அவசியம் இருக்கவேண்டும்.

அதேபோல, வீட்டில் அரிசி, பால், சர்க்கரை, பருப்பு, உப்பு போன்றவற்றை, முழுமையாக இல்லாமல் செய்யக்கூடாது. ஒருவேளை அவை தீர்ந்துவிடுவது போல இருந்தாலே, மறுபடியும் வாங்கி வைத்துவிட வேண்டும். உணவுப் பொருட்களை வீணடிக்கக் கூடாது.. கீழே கொட்டவும் கூடாது. இது குடும்பத்தில் வறுமையை கொண்டுவந்துவிடும்.

பூஜையறை: பூஜையறையில் தண்ணீர் பாத்திரத்தை காலியாக வைக்கக்கூடாது. பூஜை முடிந்ததுமே, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் துளசி சேர்த்து கலக்கி வைக்க வேண்டும்.. வெற்று பாத்திரத்தை வைத்தால், அது குடும்பத்தில் எதிர்மறை தாக்கத்தையும், நிதி சிக்கலையும் ஏற்படுத்துமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+