திருப்பதி ஏழுமலையானிடம் பாடம் கற்றுக் கொண்ட டிரம்ஸ் சிவமணி! அப்படி என்ன நடந்தது?
சென்னை: திருப்பதி ஏழுமலையான் தனக்கு கற்றுக் கொடுத்த பாடம் குறித்து டிரம்ஸ் சிவமணி ஒரு பேட்டியில் கூறியிருந்ததை பார்க்கலாம். அப்படி என்ன பாடம் கற்றுக் கொடுத்தார் என்பதை அறிந்து கொண்டு நாம் இனி அந்த தவறை செய்யாமல் நடத்தல் வேண்டும்.
டிரம்ஸ் சிவமணிக்கு கடவுள் பக்தி அதிகம். இவர் சிவராத்திரியின் போது சிவாலயங்களுக்கு சென்று கச்சேரி நடத்துவது வழக்கம். அது போல் திருப்பதி உள்ளிட்ட பெருமாள் கோயில்களுக்கும் அவர் செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதை தமிழ் குவோராவில் நானறிந்த ஆன்மீகம் எனும் ஐடியில் கூறியிருப்பதாவது: திருப்பதிக்கு மட்டும் போறேன்னு சொன்னா போயிடணும். இல்லாட்டி அது வேற மாதிரி ஆயிடும். இது என்னோட அனுபவம். அவர் (பெருமாள்) எனக்கு கற்றுக் கொடுத்த பாடத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
ஒரு சமயம் நானும் என் நண்பர் தும்பராஜாவும் திருப்பதிக்குச் சென்றோம். பாலன்னா என்பவரிடம் ரெகமண்டேஷன் லெட்டர் வாங்கிக் கொண்டோம். இதை அந்த சம்பந்தப்பட்ட நபரிடம் காண்பித்து சீக்கிரம் தரிசனம் முடித்துக் கொண்டு வந்து விடலாம் என்பது நம்பிக்கை.
திருப்பதி கோயிலின் அருகே உள்ள அந்த அலுவலகத்திற்குச் சென்று பாலன்னா சொன்ன நபரை பார்க்கலாமென்றால் அவர் அவருடைய இருக்கையில் இல்லை. வாசலில் நின்றிருந்தோம். அப்போது ஒரு சிறுவன் எங்களிடம் வந்து "5 ரூபாய் கொடுக்கறீங்களா? தரிசனம் செய்து வைக்கிறேன்" என்றான்.
ஆனால் நாங்கள் அந்தச் சிறுவனை நம்பாமல் வேறு பாஷையில் பேசி சரியாக கலாய்த்து அனுப்பி விட்டோம். பாவம் அவன் சென்றுவிட்டான். அதுமட்டுமல்லாமல் எங்களிடம் அந்த பரிந்துரை கடிதம் இருக்கிறதே என்ற நினைப்பும் ஒரு காரணம்.
நேரம் சென்றுக் கொண்டேயிருந்தது. பாலன்னா சொன்ன ஆள் வருவதற்கான அறிகுறியே இல்லை. "சரி நேரமாகிவிட்டது. இவ்வளவு தூரம் வந்து சுவாமியை தரிசிக்காமல் எப்படிச் செல்வது? என்று வரிசையில் நிற்க ஆரம்பித்தோம். சரியாக 7 மணி நேரம் காத்திருப்பிற்கு பிறகே நுழைவாயிலின் அருகே வர முடிந்தது.
கதவருகே தான் பாலன்னா சொன்ன ஆளைப் பார்க்க முடிந்தது. அவர் தான் ஒரு அவசர மீட்டிங்கில் இருந்ததால் உதவ முடியாததற்காக வருத்தப்பட்டார். அதன் பிறகு நாங்கள் தரிசனம் செய்துவிட்டு வந்தோம். இந்த 7 மணி நேர காத்திருப்பு, யாரையும் அலட்சியப்படுத்தக் கூடாது என்பதையும் தான் என்ற ஆணவத்தையும் தூக்கி போட வைத்தது. இது நான் கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடம் என குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications