கணுக்காலில் கருப்பு நிற கயிறு கட்டுவது ஏன்? பெண்கள் கட்டலாமா? இந்த ராசிக்காரர்கள் மட்டும் தொடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன் தெரியுமா? யார் யாரெல்லாம் கட்டலாம்? எந்தெந்த ராசிக்காரர்கள் கட்டலாம்? இதனால் வரும் மருத்துவ நன்மைகள் என்னென்ன?
அன்றைய காலத்தில், வலது கால்களில் ஆண்களும், இடது கால்களில் பெண்களும் கயிறு கட்டியிருக்கிறார்கள்.. பட்டு, தர்ப்பை, அருகம்புல் என்ற இந்த 3 பொருட்களையுமே கயிறு போல திரித்து கையில் அணிந்து கொள்வார்களாம்.

Spirituality

காரணம், இந்த பொருட்களுக்குமே அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை இருக்கிறது. நவக்கிரகத்தின் கதிர் வீச்சுகளை, ஈர்க்கும் தன்மையும் இந்த கயிறுகளுக்கு இருக்கிறது.. எப்போதுமே நேர்மறை சக்தியை மனதில் அதிகரிக்க செய்வது இந்த கருப்பு கயிறுகள்.. அதனால்தான், கருப்பு நிறத்தில் கயிறுகளை கைகளிலும், கால்களிலும் கட்டி கொள்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, சூரிய ஒளியிலிருந்து வீசும் கதிர்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை சக்தி, கருப்பு நிறத்துக்கு உண்டு.. எனவே, இந்த கயிறு கட்டுவதால் பலகாலமாக குணமடையாத தீராத நோயும் தீரும் என்பார்கள்...

கணுக்கால்: எனவேதான், காலில் கணுக்கால் பகுதியில் இந்த கயிற்றினை கட்டுவார்கள். உடலின் முக்கிய நரம்பு முடிச்சுப்பகுதி நம்முடைய கணுக்கால் பகுதியாகும்.. நம்முடைய எண்ணங்களும், மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல்பாடுகளும் அமைகின்றன.. எனவே, கணுக்கால் பகுதியில் கயிறு கட்டும்போது, நாடியின் இயக்கம் சீராவதுடன், எண்ணங்களும், மனநிலையும் சரிநேர்க்கோட்டில் அலைபாயாமல் இருக்குமாம்..

நம்முடைய உடலில் ரத்த ஓட்டம் மேம்படும்.. கால்களை சுற்றியுள்ள கயிற்றால் செலுத்தப்படும் அழுத்தம், ரத்த ஓட்டத்தை தூண்டவும், ரத்த கட்டிகள் மற்றும் பிற சுழற்சி பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கவும் பெரிதும் உதவுகிறதாம்.. இந்த கயிற்றால் பயன்படுத்தப்படும் அழுத்தம் இயற்கையான அக்குபிரஷர் புள்ளியாக செயல்படுகிறது.. இது உங்கள் கால் தசைகளில் உள்ள பல்வேறு வலிகள் மற்றும் வலிகளிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.

பலன்கள்: ஆன்மீகத்தில் கருப்பு கயிறுகளுக்கு முக்கிய பலன்கள் உண்டு.. பொதுவாக கருப்பு நிற கயிறுகளை அணிவது எதிர்மறை ஆற்றல் மற்றும் தீங்கு விளைவிக்கும் ஆவிகளை விலக்கி வைக்குமாம். அந்தவகையில், கணுக்காலில் கயிறு கட்டுவது, தடைபட்ட வாழ்க்கையை பலப்படுத்த உதவுகிறது.. தீய விஷயங்களிலிருந்து விலக்கி பாதுகாப்புத் தன்மையை அளிக்கிறது.

அதுமட்டுமல்ல, சனி பகவான் எப்போதுமே ஒருவரின் கால்களேயே முதலில் பற்றுவாராம்.. அதனால்தான், கணுக்காலில் கருப்பு கயிறு கட்டுகிறார்கள்.. இதனால், ராகு, கேது பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதுடன், கருப்பு கயிறு கட்டினால் நிதிநிலைமை சீராகுமாம்..

யார் யாரெல்லாம் கருப்பு கயிறு கட்டுவார்கள்: எனவே, ஜாதகத்தில் ராகு கேது பலவீனமானவர்கள் காலில் கருப்பு கயிறு அணிவதன் மூலம் பலன்கள் பெறலாம்.. அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி காலங்களில், கறுப்பு கயிறு கட்டிக்கொள்வதால், சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் அத்தனையும் விலகிவிடும்..

அதேபோல, சிலருக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகும்.. இவர்களுக்கு காலில் முடியால் ஆன கருப்பு கயிறுகளை கட்டுவார்கள். காலில் மட்டுமல்லாமல், கை, கழுத்து அல்லது இடிப்பிலும் கருப்பு கயிறு அணியும் பழக்கம் உள்ளது.. இதனால், கண் திருஷ்டி நீங்கும் என்பது ஐதீகம்.

பொருளாதார சிக்கல்: பொருளாதார பிரச்சனை உள்ளவர்களும் கருப்பு கயிறு கட்டுவார்கள்.. எனவே, செவ்வாய்கிழமை சனி பகவானை வணங்கி காலில் கருப்பு கயிறு கட்டினால், பணப் பிரச்சனைகள் நீங்கி பணம் வரும். கயிறு கட்டுவதற்கு முன், அதில் 9 முடிச்சுகள் போட வேண்டும். அதன் பிறகு அவர்கள் காலில் அணியலாம்.

அதேபோல, குழந்தைகள் பிறந்து சில நாட்களிலேயே குழந்தைக்கும், தாய்க்கும் கருப்பு கயிறு கட்டுவார்கள்.. கருப்பு கயிறு குழந்தைகளுக்கு எந்த அசௌகரியத்தையும் ஏற்படுத்தாது. எதிர்மறை சக்திகளிலிருந்து இந்த கயிறு காக்கக்கூடியது என்பதால், பருவமடைந்த பெண்களும் வலது காலில் கட்டிக் கொள்ளலாம். இதனால், பயம், தீய சக்திகளிலிருந்து தங்களை காத்துக்கொள்ளலாம்.

எப்படி கயிறு கட்டுவது: சனி பகவான் சன்னதியிலோ அல்லது சிவன் கோயில்களுக்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு சாமியின் பாதத்தில் கறுப்பு கயிறு வைத்து வழிபாடு செய்துவிட்டு, கருப்பு கயிறு கட்டுவது நல்லது.. செவ்வாய்கிழமை சனி பகவானை வணங்கி, கருப்பு கயிறில் 9 முடிச்சுகளுடன் காலில் அணிவதால், பொருளாதார நிலைமை மேம்படும் என்பது நம்பிக்கை. ஆனால், இந்த 9 முடிச்சுகளும் தனித்தனியாக இருப்பது நல்லது.

பெண்கள் காலில், கருப்பு கயிறை கட்டுவதானால் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டிக்கொள்ளலாம். சனிக்கிழமைகளில் கட்டிக்கொண்டல் மிகவும் சிறப்பு. கயிறு கட்டும் முன்பு சனி தேவ மந்திரத்தை 21 முறை ஜெபித்து அணிய வேண்டும். அல்லது ஸ்ரீ ராம ஜெயம் சொல்லலாம், அனுமன், துர்கா தேவியை மனதில் நினைத்துக் கொண்டு மந்திரங்களை உச்சரிக்கலாம்.

ராசிகள்: ஆனாலும் கருப்பு கயிறு எல்லாருமே கட்டிக்கொள்ளக்கூடாது. ஒருசிலருக்கு கருப்பு கயிறு சேராது.. குறிப்பாக, மேஷ ராசி, விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் கருப்பு நிற கயிறு அல்லது கருப்பு நிற உடைகளை பயன்படுத்தக் கூடாது.

ஏனெனில் இந்த இரு ராசிகளை ஆளக்கூடியவர் செவ்வாய் பகவான். அதனால் இந்த ராசியினர் கருப்பு நிறத்தை அணிந்தால் அவர்களின் மன நிலையில் குழப்ப நிலை ஏற்படுவதுடன் சிலருக்கு உயிருக்கே ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளதாம். கறுப்பு நிற உடை அணிவதையும் இவர்கள் தவிர்ப்பது நல்லது. தனுசு, துலாம், கும்பம், ராசிக்காரர்களுக்கு கருப்பு கயிறு மிகவும் நல்லது.. இவர்கள் கருப்பு நிற ஆடைகளையும் அணிந்து கொள்ளலாம்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+