மகர ராசியின் மகத்துவம்.. பலம், பலவீனம் இரண்டுமே இதுவே.. பொறுப்பும், அன்பும் கொண்ட மகர ராசி பெண்கள்
சென்னை: தலைமுடி கருப்பாக, முக அமைப்பு கூர்மையாகவும், கொண்ட மகர ராசிக்காரர்கள், அதிகமாக உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்... ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாக கொண்டவர்கள்.. இவர்களின் பொதுவான குணநலன்கள் என்னென்ன தெரியுமா? மகர ராசி பெண்களின் சிறப்புகள் என்னென்ன? மகர ராசிக்காரர்கள் சென்று வணங்கக்கூடிய தெய்வங்கள் என்னென்ன? இவைகளையெல்லாம சுருக்கமாக பார்ப்போம்.
மகர ராசிக்காரர்கள், சிறப்பாகவும் அழகாகவும் கம்பீரத்துடனும் இருப்பார்கள். எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், மனதிலேயே பலவித போராட்டங்களை, அதற்கு தாங்களே தீர்வு எடுப்பார்கள்.. இதே மனதிலேயே மற்றவர்களையும் எடை போடுவார்கள.

தைரியத்துக்கு பெயர் பெற்றவர்கள் மகர ராசிக்காரர்கள்.. தன்னம்பிக்கை நிறைந்தவர்கள்.. மற்ற ராசிக்காரர்களிடம் இல்லாத துணிச்சல் மகர ராசியினரிடம் உண்டு என்பார்கள்.. சகிப்புத்தன்மைக்க பெயர் பெற்றவர்கள் என்பதால், அனைவரும் இந்த ராசிக்காரருக்கு நெருக்கமாக இருப்பார்கள்.. சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி கொள்வதால், நட்பு வட்டாரம் இவர்களுக்கு பெரிதாக இருக்கும்..
பொறுமை, சகிப்புத்தன்மை, பக்குவம் நிறைந்தவர்கள் என்றாலும், அனைத்துக்குமே ஒரு லிமிட் இருக்கும். முடிந்தவரை பொறுமை காத்து அரணைப்பார்கள். அதற்கு மேல் சீண்டினால், உறவுகளை துண்டிக்கவும் தயங்க மாட்டார்கள்.
அளவுக்கு அதிகமான சகிப்புத்தன்மை
ஆனால், லேசில் கோபம் வராது.. மென்மையும், நாகரீகமும் மிக்கவர்கள். எதையுமே உழைத்து பெற வேண்டும் என்று நினைப்பவர்கள்.. தாங்கள் மட்டுமல்லாமல், தங்களின் குடும்பத்தையும் சேர்த்தே உயர்த்துவார்கள்.. எதையுமே பிளான் செய்துதான் செய்வார்கள்.. அதனால்தான், தன்னுடைய குடும்பத்தையும் சேர்த்து உயர்த்துவதில் முன்னுரிமை தருவார்கள்.
இரட்டை நிலை மனப்பான்மை இவர்களிடம் இல்லை.. ஒரு முடிவு எடுத்தால் தீர்க்கமாக யோசித்து முடிவெடுப்பார்கள்.. அதேபோல எடுத்த முடிவிலும் உறுதியாக இருப்பார்கள்.. இவர்களை நம்பி எந்த ரகசியத்தையும் சொல்லலாம். அந்த அளவுக்கு நம்பிக்கையானவர்கள். மகர ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலம், பலவீனம் பிடிவாத குணம்தான்.
பிளஸ் பாயிண்ட் குணம்
லட்சியப்பிடிப்பு கொண்ட மகர ராசிக்காரர்கள், தங்களது லட்சியத்தை அடைய பொறுமை காப்பார்கள்.. இவர்களிடம் பிளஸ் பாயிண்டே பொறுமை என்பதால்தான், குடும்பம், நட்பு, என அனைத்திலுமே இவர்களுக்கு உறவுகள் அதிகம்.. எந்த விஷயத்தையும் அரைகுறையாக தெரிந்து, அதில் இறங்க மாட்டார்கள்.. நாலாபக்கமும் விசாரித்து அல்லது போதுமான தகவல்கள் கிடைத்த பிறகே அதில் களமிறங்கி வெற்றி காண்பார்கள்.
ஒழுக்கத்துக்கு பெயர்போன மகர ராசிக்காரர்கள். போலித்தனம் இல்லாமல் பழகக்கூடியவர்கள் என்பதால், இந்த ராசியினரை நம்பி காதலிக்கலாம்.
காதலில் விழுந்துவிடுவார்கள்.. காதல் இந்த ராசிக்காரர்களுக்கு பிடித்தமானது.. மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். ஆனால், காதலராக இருந்துவிட்டால், அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. இப்படிப்பட்ட மகர ராசிக்காரர்களுக்கு, கடக ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையாக அமைந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதேபோல, மகர ராசிக்கு கன்னி ராசிக்காரர்கள் அல்லது துலாம் ராசிக்காரர்கள் பொருத்தமானவராக இருப்பார்கள்.
பெட்ரோல் பங்க் கை கொடுக்கும்
அலுவலக பணிகள் என்றாலும், இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார்கள்.. இதற்கான நற்பெயரையும் எடுப்பார்கள்.. இவர்களுக்கு சும்மா இருக்கவே பிடிக்காது.. எப்போதுமே சுறுசுறுப்பாக ஏதாவது வேலைகளை செய்து கொண்டேயிருப்பார்கள். ஒருவேளை அலுவலகம், கடைகள் வைத்திருப்பவர்களாக இருந்தால், வீட்டில் தங்கியிருக்க மாட்டார்கள்.. மாறாக அலுவலகம், தொழில் செய்யும் இடம் அல்லது கடைகளிலேயே எந்நேரமும் பிஸியாக இருப்பார்கள்.
ஒரு செயலில் முடிவெடுத்தால் உறுதியாக இருப்பார்கள். ஆனால், அதற்கு முன்பு மற்றவர்களின் அபிப்பிராயங்களையும் கேட்டுக்கொள்வார்கள் இறுதியில் தாங்கள் நினைத்ததை மட்டுமே செய்வார்கள்..
கறுப்பு நிறம் மகர ராசிக்காரர்களுக்கு ஏற்றது.. புகழ்பெற்ற நீதிபதிகள், வக்கீல்கள், பெட்ரோல் பங்க் ஓனர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், கிராம ஊராட்சித் தலைவர்கள் என பல பணிகளில் ஈடுபடுபவர்கள் மகர ராசிக்காரர்கள். குறிப்பாக, பெட்ரோல் மற்றும் பெட்ரோலில் ஓடும் கார், ரயில், லாரி போன்ற வாகனங்கள் தொடர்பான பணிகளில் இவர்கள் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். 40 வயதுக்கு மேல் தொழில்துறையில் சாதனையாளர்களாக மாறுவார்கள்.
பொறுப்பு மிக்கவர்கள
குறிப்பாக மகர ராசி பெண்களை எடுத்துக் கொண்டால், தன்னலமின்றி தன்னுடைய லட்சியத்தை அடைபவர்கள். குடும்பம், அலுவலகம் என எதுவாக இருந்தாலும், திட்டமிடுதலில் இவர்களை மிஞ்ச முடியாது.. கடின உழைப்பாளிகள், நேர்மையானவர்கள், அனைவரையும் அனுசரித்து அன்பு காட்டுவதால், பொறுப்புகளை சரியாக செய்வார்கள். தந்தையின் ஆதரவும், தெளிவான சிந்தனையும் கொண்டவர்கள் மகர ராசி பெண்கள்.
மகர ராசிப் பெண், மண் ராசியில் பிறந்தவர் என்பதாலும், சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர் என்பதாலும், ஒல்லியாக சாந்த குணம் உள்ளவராக இருப்பார். ஓரக் கண்ணால் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்வார்கள். ஆற அமர உட்கார்ந்து இவர் கதை பேசுவதையோ புறம் பேசுவதையோ கேலி கிண்டல் செய்வதையோ பார்க்க இயலாது. எப்போதும் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டே இருப்பார்கள்.
நடை - உடை - பாவனை
ஆனால், அவருடைய நடவடிக்கையில் நடை உடை பாவனையில் அந்த அளவுக்கு வேகம் தெரியாது.. சற்று மந்தமாகவே இருக்கும்.. எனினும், சொன்ன நேரத்தில் ஒரு காரியத்தை செய்து முடிக்கக்கூடியவர்கள்.. அதிலும் சரியாகவே செய்து முடிக்க வேண்டும் என்பதில் கருத்தாக இருப்பார்கள.. மகர ராசி பெண் மெதுவாக செய்தாலும் சிறப்பாகச் செய்வார்கள்..
பெரும்பாலும் பொறுமை காக்கும் இந்த ராசி பெண்கள், திடீரென கோபம் காட்ட நேரிடலாம். அப்போது நெருப்பை அள்ளிக் கொட்டுவது போல வார்த்தைகளை அள்ளி வீசிவிடுவார்கள். ஆனால், அடுத்த நிமிடமே இயல்பு நிலைக்கு வந்து, வழக்கம்போல் பேசிவிடுவார்கள்.. எனினும், அந்த சுடுசொற்கள்தான் பிறருக்கு வலியை தந்துவிடும்..
அதனால்தான், மகர ராசிப் பெண்களுக்கு, நண்பர்கள் அதிகம் இருப்பதில்லை.. இவரிடம் நெருங்கி பழகவும் தயக்கம் இருக்கும்.. அப்படியே மற்றவர்கள் நெருங்கி பழனினாலும், மகர ராசி பெண்கள், தங்கள் மனதிலிருப்பதை அவர்களிடம் சொல்ல மாட்டார்கள்.. இதனால் ஒளிவுமறைவு அந்த நட்பில் இருக்கும்...
ராசியான கற்கள்
சனியின் பூரண ஆதிக்கத்தில் பிறந்த மகர ராசிக்காரர்களுக்கு, திருமாலிடம் அளவுகடந்த பக்தி இருக்கும். சிவாம்சத்தின் சாரமாக சனி இருந்தாலும், பெருமாளை வழிபடுவதையே மிகவும் விரும்புவார்கள். மகரத்தை மகரக்கடல் என்பார்கள்.. எனவே, சயனக் கோலத்தில் மகா விஷ்ணு அரங்கநாதன் கோயில்கள், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாளை வழிபடலாம்.
நீலக்கலர் கல் அதிர்ஷ்டமாகும். இதனை தங்கத்தில் பதித்து மோதிரமாக அணியலாம். எனவே குடும்ப ஜோதிடரின் ஆலோசனையை பெற்றுக் கொள்வது நல்லதாகும்.
மகர ராசிக்கு சனி பகவான் அதிபதியாக இருப்பதால், அவரை வழிபடுவது மிகவும் முக்கியம். சனிக்கிழமைகளில் எள் முடிச்சு தீபம் ஏற்றி, சனி பகவானை வழிபடலாம். மேலும், கணபதி வழிபாடு செய்து வருவதும், சிவாலய தரிசனம் செய்து வருவதும் மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனை பெற்றுத்தரும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications