குளியலறை, சமையலறையில் இதை மட்டும் வெச்சிடாதீங்க.. வீட்டில் பணக்கஷ்டம் வந்துருமாம்.. சூப்பர் டிப்ஸ்
சென்னை: நம்முடைய வீட்டின் வாஸ்து அமைப்பு மிகவும் முக்கியமானது.. இதில் ஏதாவது சிறிய குறைபாடு இருந்தாலும், சிறிய பாதிப்பு இருந்தாலும், ஒட்டுமொத்த குடும்பமே ஆட்டம் கண்டுவிடும்.. ஆரோக்கிய குறைபாடு, நிதிப்பற்றாக்குறை வரை அனைத்துமே பாழடைந்துவிடும்.. எனவேதான் வீட்டின் பூஜை அறை மட்டுமல்லாமல், ஒவ்வொரு அறைகளுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் பல்வேறு விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அந்தவகையில், குளியலறை, சமையலறை குறித்து இங்கே பார்ப்போம்.
ஈசான்ய மூலை என்று சொல்லக்கூடிய வடகிழக்கு திசையில் கிச்சன் இருக்கக்கூடாது.. அப்படி இருந்தால், வீட்டின் அமைதி சீரழிவதுடன், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் மோசமாகும்.. அதேபோல, தென்மேற்கு என்று சொல்லக்கூடிய கன்னி மூலையில் கிச்சன் இருந்தாலும், நிதிப்பற்றாக்குறை ஏற்படும். வீட்டில் கஷ்டம் சூழ்ந்துவிடும்.

தென்கிழக்கு பகுதி
எனவே, அக்னி மூலை என்ற தென்கிழக்கு பகுதியிலேயே சமையலறை இருப்பது சிறப்பு. சூரிய ஒளி கிச்சனுக்குள், ஜன்னல் வழியாக விழுவது குடும்பத்துக்கு நல்லது. எப்போதுமே பழைய உணவுகள், காலாவதியான உணவுகளை வைத்திருக்கக்கூடாது.. இதுவும் நிதி நிலைமையை மோசமாக்கிவிடும்.. காலாவதியான கெட்டுப்போன உணவுப் பொருட்களை உடனே அகற்றிவிட வேண்டும்.
பயன்படுத்தப்படாத பாத்திரங்கள், உடைந்த, நெளிந்த பாத்திரங்கள், நசுங்கிய பாத்திரங்கள், எதையும் கிச்சனில் வைத்திருக்கக்கூடாது.. இது பணத்தட்டுப்பாட்டை அதிகப்படுத்திவிடும். கணவன் மனைவிக்குள் தகராறுகளும் அதிகமாகும்.. உடைந்த கண்ணாடி இருந்தாலும் அகற்றிவிட வேண்டும். நெருப்பின் பிரதிபலிப்பு கண்ணாடியில் படவும் கூடாது,
மருந்து பொருட்கள்
மருந்து பொருட்களை கிச்சனில் வைக்க வேண்டாம். ஏனென்றால், குறிப்பிட்ட திசைகளில் மருந்து வைக்கும்போது, அது நெகட்டிவ் விளைவுகளை தந்துவிடும். சமையலறை குழாயில் தண்ணீர் சிந்துவது, வீண் பண செலவுகளை குடும்பத்தில் ஏற்படுத்திவிடும். குப்பைகளை கிச்சனில் வைத்திருக்கக்கூடாது.
உப்பு, அரிசி, பருப்பு, புளி போன்ற அத்தியாவசிய பொருள் முழுமையாக தீரும் வரை வைக்கக்கூடாது.. அதிலும் வெள்ளிக்கிழமை இந்த பொருட்கள் சமையலறையில் சிறிதளவாவது இருப்பது அவசியம்.
அஞ்சறைப்பெட்டியில் மகாலட்சுமியும், ஊறுகாய் ஜாடியில் குபேரனும், கல் உப்பில் அன்னை லட்சுமியும், அரிசியில் சிவனும் பெருமாளும், துவரம்பருப்பில் செவ்வாய் பகவானும் வசிப்பதாக நம்பப்படுவதால், இவைகள் எப்போதுமே தீராமல் பார்த்து கொளள வேண்டும்.
கூர்மையான பொருட்கள்
கூர்மையான பொருட்களான கத்தரிக்கோல், கத்திகள் போன்றவற்றை சரியான இடங்களில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் நிதி உறுதியற்ற தன்மையை ஏற்படுத்திவிடும்.. பணப் பற்றாக்குறையை தவிர்க்க வேண்டுமானால், இந்த கூர்மையான பொருட்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கிவிட வேண்டும்.. அத்துடன், அரிவாள்மனை, கத்தி போன்றவைகளை கழுவி மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும்.
இரவு நேரம், பாத்திரங்களை சிங்க்கில் போட்டு வைக்காமல் உடனே கழுவிவிட வேண்டும். வியாழக்கிழமை இரவில், அடுப்பு மேடை கழுவி விடுவதுடன், பச்சரிசி மாவு, மஞ்சள் பொடி கலந்து போட்டுவிடுவது நல்லது.
அஞ்சறைப்பெட்டி
அடுப்பு உட்பட, உப்பு ஜாடி, அஞ்சறைப் பெட்டி, அரிசி கொட்டி வைத்திருக்கும் பாத்திரம், அரிவாள்மனை, கத்தி போன்ற பொருட்கள் எப்போதும் சுத்தமாகவே இருக்க வேண்டும். இவைகளுக்கு மஞ்சள், குங்கும பொட்டு வைப்பது நல்லது. சாப்பிட்டதும் எச்சில் பாத்திரங்களை உடனே கழுவி வைத்துவிட வேண்டும்.. நாளைக்கு கழுவி கொள்ளலாம் என்று, எச்சில் தட்டுகளை போட்டு வைக்கக்கூடாது.. அடுப்பு மேடையையும் கழுவி விட வேண்டும்
குளியலறையிலும், உடைந்த மற்றும் மங்கலான கண்ணாடி, உடைந்த பக்கெட், கிழிந்த போட்டோக்கள், சீரற்ற குழாய்கள், அழுக்கான துணிகளை போட்டு வைக்கக்கூடாது. நல்ல கண்ணாடி என்றாலும், பாத்ரூம் கதவுக்கு முன்னால் வைப்பதை தவிர்க்கலாம். கழிவறை சுவர்களுக்கும், டைல்ஸ் பதிவதற்கும், பக்கெட்டுகளுக்கும் நீல நிறம் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
மங்களகரமான நிறங்கள்
அல்லது மங்களகரமான பச்சை நிறத்தை பயன்படுத்தலாம். ஆனால், கருப்பு நிறத்தை எதற்குமே பயன்படுத்தக்கூடாது.. தினமும் பாத்ரூமை கழுவிவிடுவதால் நிதி நிலைமையும், உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.
ஈரத்துணிகளை பாத்ரூமில் போட்டுவைப்பது, வாஸ்து தோஷத்தையும், சூரிய தோஷத்தையும் உண்டாக்கிவிடும்.. ஈரத்துணிகள் சனிபகவானுக்கு பிடித்தமானது என்பதால், குளியலறையில் ஈரமான, அழுக்கு துணிகளை அப்புறப்படுத்த வேண்டும். கழிவறையில் செடிகள் வளர்ப்பதாக இருந்தால் வாடிவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்..இது பணத்தட்டுப்பாட்டை குறைக்கும். கிழிந்துபோன, பிய்ந்துபோன செருப்புகளை பாத்ரூமில் வைப்பது தோஷத்தை தந்துவிடும்.
-
எவ்வளவு அடி வாங்கியும் திருந்தல.. வாயை விடும் பாக். அமைச்சர்! இந்தியாவின் ஒரு தாக்குதலுக்கு தாங்காது -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு?












Click it and Unblock the Notifications