குளியலறையில் இந்த பொருளை வைக்காதீங்க.. பாத்ரூமில் இது இருந்தாலே கஷ்டம் வருமாம்.. இது தெரியாம போச்சே
சென்னை: நம்முடைய வீடுகளில் உள்ள கழிவறைகளில் சில பொருட்களை எக்காரணம் கொண்டும் வைக்கக்கூடாதாம்.. அது என்னென்ன தெரியுமா?
உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில், வாஸ்து குறைபாடுகள் இருப்பதாக தெரிந்தால், அதை முதலில் நிவர்த்தி செய்துவிட வேண்டும்.. அந்தவகையில், வீட்டிலுள்ள சமையலறை, படுக்கையறை, பூஜையறைகள் எந்த திசையில் இருக்க வேண்டும் என்றெல்லாம் வாஸ்துவில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, நம்முடைய வீடுகளில் திசைகளும் முக்கியம், மூலைகளும் முக்கியம்.. வீட்டு மனையின் வடகிழக்கு மூலை எனப்படும் ஈசான்ய மூலையில்தான், பூஜை அறையை வைப்பார்கள்.. அதாவது, கிழக்கிலிருந்து சூரியக்கதிர்கள் ஈசான மூலைக்குள் வரும்படி இருக்க வேண்டும்.. இந்த ஈசான்ய மூலையில் கடவுள் படங்களை கிழக்கு நோக்கி வைக்கலாம் அல்லது வடக்கு நோக்கி வைக்கலாம்.

படுக்கையறை: சமையலறைகள் எப்போதுமே தென்கிழக்கு திசையிலும், படுக்கையறைகள் தென்மேற்கு திசையிலும் இருக்க வேண்டுமாம்.. அந்தவரிசையில், கழிவறைகள், குளியலறைகள் பற்றியும் வாஸ்து ஆலோசகர்கள் வலியுறுத்தி வைத்திருக்கிறார்கள்..
காரணம், குளியலறை, கழிப்பறை சரியான வாஸ்து முறைப்படி அமைக்காவிட்டால் அது நம்முடைய வீட்டில் எதிர்மறை சக்தி, சிந்தனைகளை உருவாக்கிவிடும்.. இதனால் காரிய தடைகள், பதட்டம், விபத்துகள், உடல்நலம் பாதிப்புகள் ஏற்படலாம்.
குளியலறைகள்: எனவே, எப்போதுமே குளியலறை வீட்டின் வடக்கு அல்லது வடமேற்கு மூலையில் இருக்க வேண்டும் என்றும் தெற்கு, தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் குளியலறையை அமைக்கவே கூடாது என்கிறார்கள். அதேபோல, சமையலறைக்கு எதிரே அல்லது அதற்கு அடுத்ததாக குளியலறை இருக்கக்கூடாதாம்.
அதுமட்டுமல்ல, குளியலறையில் சில பொருட்களை தெரியாமல்கூட வைத்துவிடக்கூடாது என்றும் வாஸ்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பாத்ரூம் குழாய்கள்: அதில் முக்கியமானது கிழிந்த மற்றும் பிய்ந்துபோன செருப்புகளை பாத்ரூமில் வைக்கக் கூடாதாம்.. பாத்ரூம் என்றில்லை, வீட்டில் எங்குமே கிழிந்த செருப்புகளை வைக்கக்கூடாது என்றும், அப்படி வைத்திருந்தால் அது எதிர்மறை ஆற்றலை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்றும் வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதேபோல பாத்ரூமில் குளியலறையில் ஈரமான துணிகளை நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடாது.. இதுவும் துர்சக்திகளை வீட்டுக்குள் கொண்டுவந்துவிட்டுவிடும் என்பதால், சீக்கிரமாகவே காயவைத்துவிட வேண்டும். உடைந்த கண்ணாடிகளை பாத்ரூமில் வைத்தால், பணக்கஷ்டம் ஏற்படுமாம். அதேபோல காலி பக்கெட்டுகளை வைக்காமல், தண்ணீர் நிரப்பி வைத்திருக்க வேண்டும்.
ரிப்பேர் குழாய்: குழாயில் தண்ணீரும் சிந்தாமல் பார்த்துகொள்ளவேண்டும். குழாய் தண்ணீர் கசிவு என்பது துரதிருஷ்டத்தின் அறிகுறி என்பார்கள். பாத்ரூம் என்றில்லை, வீட்டில் எந்த குழாய்களிலும் தண்ணீர் கசியாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஒருவேளை குழாய்கள் ரிப்பேராகியிருந்தால், அதை உடனடியாக சரி செய்துவிட வேண்டுமே தவிர, தண்ணீரை குழாயில் ஒழுக விடக்கூடாது. தண்ணீரில் சிக்கனம் இருந்தாலே, அதிர்ஷ்டம் வீட்டிற்குள் தாராளமாக கிடைக்குமாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications