ஆடி முதல் வெள்ளிக்கிழமை! அம்மன் கோயில்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் இன்று தொடக்கம்
சென்னை: ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை இன்று கொண்டாடப்படுவதால் அம்மன் கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணமும் இன்று தொடங்குகிறது.
இதுகுறித்த அறிக்கை சட்டசபையில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவால் வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2025-26ம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் 'ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு இவ்வாண்டு 2,000 பக்தர்கள் ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்படுவர்' என அறிவிக்கப்பட்டது.

இதை செயல்படுத்திடும் வகையில் இந்தாண்டு சென்னை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு ஆடி மாத ஆன்மிக பயணம் 5 பயண திட்டங்களாக வரும் ஜூலை 18, 25, ஆகஸ்ட் 1, 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தொடங்கப்பட உள்ளது. ஆன்மிக பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் கார்டு அல்லது நிரந்தர கணக்கு எண் (பான்) நகல் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in http://www.hrce.tn.gov.in > என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் ஜூலை மாதம் 11ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆடி மாத ஆன்மிக பயணம் தொடர்பான விவரங்களுக்கு துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆடி மாதத்தில் மூத்த குடிமக்களை அம்மன் கோயில்களுக்கு அழைத்துச் செல்லும் கட்டணமில்லா பேருந்து சேவை இன்று தொடங்குகிறது. சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் இருந்து இந்த சேவை தொடங்குகிறது.
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி இன்று அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிகாலையிலேயே திருவேற்காடு தேவி கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், மயிலாப்பூர் முண்டககன்னியம்மன் உள்ளிட்ட ஆலயங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இன்று அம்பாளை எப்படி வழிபடுவது என்பதை பார்க்கலாம். அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வாசல் தெளித்து கோலமிட்டு வீட்டை துடைக்க வேண்டும். பிறகு பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். வேப்பிலையை நிலை வாசலில் கட்ட வேண்டும்.
கலசம் வைக்கும் பழக்கம் இருப்போர் பித்தளை சொம்பில் மஞ்சளால் தோய்த்த நூலை சுற்றி குங்குமம் வைத்து பூக்களை வைக்க வேண்டும். அந்த நீர் நிரம்பிய கலச நீரில் அம்பிகை எழுந்தருளுவார் என்பது நம்பிக்கை.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications