திருப்பதியில் இனி லட்டு மட்டுமில்லை! இதுவும் ஃப்ரீயாம்! பக்தர்களுக்கு சிரமமே ஏற்படாது!
திருப்பதி: திருப்பதியில் பக்தர்களுக்கு இனி லட்டு பிரசாதம் மட்டுமில்லாமல் இன்னொன்று இலவசமாக கிடைக்கும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த இலவசத்தால் பக்தர்கள் அவதிப்படாமல் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்லலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். இதே தொடர் விடுமுறை நாட்கள், பிரம்மோற்சவங்கள், திருவிழாக்களின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அவ்வாறு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் முடி காணிக்கை கொடுத்து வருகிறார்கள்.
கல்யாண கட்டா என்ற இடத்தில் முடி காணிக்கை பெறப்படுகிறது. இதற்காக இலவச டிக்கெட்டை வாங்கிக் கொண்டு நாவிதர்களிடம் முடி காணிக்கை கொடுத்துவிடலாம். முடி காணிக்கை செலுத்தும் இடங்களில் எல்லாம் சிசிடிவி கேமராக்கள் இருக்கிறது என்பதால் அந்த இடத்தில் நாவிதர்கள் பணம் வாங்க வாய்ப்பில்லை.
இவ்வாறு மொட்டை போடுவோர் பொது இடங்களில் உள்ள பாத்ரூம்களில் குளிக்கும் போது அவர்களுக்கு வெந்நீர் கிடைப்பதில்லை. அவர்கள் ஐஸ் போல் இருக்கும் தண்ணீரில்தான் குளிக்க வேண்டும். மலை பிரதேசம் என்பதால் ஐஸ் ஆவதற்கு முந்தைய நிலையில்தான் தண்ணீர் இருப்பது போல் இருக்கும். இதே அறை எடுத்து தங்கியிருப்பவர்களுக்கு வெந்நீர் வரும். அதில் குளித்து கொள்ளலாம்.
கோடை காலங்களிலேயே மலையில் குளிராக இருக்கும். இன்னும் மழைக்காலம், மார்கழி மாதங்களில் சொல்லவே வேண்டாம், குளிர் வாட்டி எடுக்கும். பெரிய பெரிய அறைகளில் தங்கியிருப்பவர்களுக்கு அருகிலேயே முடி காணிக்கை செலுத்தும் இடம் இருக்கும். இவர்கள் அறைக்கு வந்து ஹீட்டர் போட்டு வெந்நீரில் குளிக்கலாம்.
வெந்நீர் என்றால் வெதவெதவெனத்தான் வருமே தவிர கொதிக்க கொதிக்க வராது. ஒரு நாளைக்கு 27 ஆயிரம் பேர் முடிகாணிக்கை செலுத்தி வருகிறார்கள். இவர்கள் குளிரில் வாடுகிறார்கள். இதனிடையே கோயில் வளாகத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் குளிக்கும் அறை தூய்மையாக இல்லை.
இப்படி சுகாதாரமற்று கிடந்த கழிப்பறை குறித்து சியாமளா ராவ், அதிகாரிகளை கடிந்து கொண்டார். இதையடுத்து முடி காணிக்கை செய்யும் பக்தர்களுக்கு தேவையான அளவு வெந்நீரை வழங்கவும் பழுதடைந்த நிலையில் காணப்படும் ஹீட்டர்களை மாற்ற சியாமளா உத்தரவிட்டுள்ளார். இதனால் பக்தர்கள் குளிர் உள்ளிட்ட எந்தவித சிரமம் இல்லாமல் குளிக்கலாம்.
ஏற்கெனவே லட்டு இலவசமாக கொடுக்கப்படுகிறது. கூடுதல் லட்டுகளுக்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டியுள்ளது. சீதோஷ்ண நிலையின் போது மட்டுமில்லாமல் கோடையிலும் இந்த வெந்நீர் பிரச்சினை பெரிய பிரச்சினையாக இருந்த நிலையில் அதற்கு தீர்வு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications