Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகம் ஜகத்தை ஆளுமா? கேட்டை நட்சத்திரக்காரர்கள் எந்த கோயிலுக்கு சென்றால் நன்மை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த நட்சத்திரக்காரர்களுக்கு எந்தெந்த கோயில் என்பதை பார்த்து வருகிறோம். இதில் இன்று மகம் நட்சத்திரம் முதல் கேட்டை வரை உள்ள நட்சத்திரங்களுக்கு எந்தெந்த கோயில்கள் என்பதை பார்ப்போம். நேற்றைய தினம் 9 நட்சத்திரங்களின் கோயில்களும் அதன் சிறப்புகளும் விளக்கப்பட்டிரு்நதன.

spirtuality god temple

இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது:

#மகம்:
கோயில்: ஒடுக்கம் தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயில்
அம்மன்: மாணிக்கவல்லி, மரகதவல்லி

🚩தல வரலாறு:

மக நட்சத்திரத்தில் அவதரித்த பரத்வாஜர் தவமேடை அமைத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்ட தலம் ஒடுக்கம் தவசிமேடை. கோயிலுக்கு வரும் அடியவர்களின் பாதம் தன்மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜரே இங்கு பீடமாக இருக்கிறார்.

சிறப்பு: மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாதசிவராத்திரி நாளில் மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட வாழ்வு வளம் பெறும். இங்கு மாணிக்கவல்லி, மரகதவல்லி அம்மன் சந்நிதிகள் உள்ளன. சிவராத்திரியை ஒட்டி 30 நாட்கள் காலை நேரத்தில் மூலவர் மீது சூரியஒளி விழுவது சிறப்பு.

இருப்பிடம்: திண்டுக்கல்- நத்தம் சாலையில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு. அங்கிருந்து 2கி.மீ. தூரத்தில் கோயில்.
திறக்கும் நேரம்: காலை6- மாலை6.
போன்: 95782 11659, 93624 05382.

#பூரம்:
கோயில்: திருவரங்குளம் ஹரிதீர்த்தேஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி

🚩தல வரலாறு:
புத்திரப் பேறு வாய்க்காத சோழ மன்னன் கல்மாஷ பாதன் அகத்தியரின் உதவியை நாடினான். அவரின் வழிகாட்டுதலால், திருவரங்குளம் சிவனை வணங்கப் புறப்பட்டான். அந்தக் கோயில் புதைந்து போனது அறிந்து பூமியைத் தோண்டினான். லிங்கத்தில் கடப்பாறை பட்டு ரத்தம் பீறிட்டது. தோஷம் நேரும் என வருந்தி உயிர் விடத் துணிந்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து குறை தீர்த்தார். இந்த நிகழ்வு பூரம் நட்சத்திரத்தில் நடந்தது.
சிறப்பு: பூர நட்சத்திர லோகத்தில் சிவ,நாக, ஞானபிரம்ம, இந்திர, ஸ்ரீ, ஸ்கந்த, குரு தீர்த்தங்கள் உள்ளன. திருவரங்குளத்திலும் இவை ஏழும் உள்ளன. பூர நட்சத்திரத்தினர் தங்கள் பிறந்தநாளில் இங்கு வழிபட்டால் வாழ்வில் மேன்மை பெறுவர்.
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் 7 கி.மீ.
திறக்கும்நேரம்: காலை7- மதியம்12, மாலை5- இரவு7.30
போன்: 98651 56430, 99652 11768

#உத்திரம்:

கோயில்: இடையாற்றுமங்கலம் மாங்கல்யேஸ்வரர் கோயில்
அம்மன்: மங்களாம்பிகை

🚩தல வரலாறு:

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மாங்கல்ய மகரிஷி. இவர் அகத்தியர், வசிஷ்டர் ஆகியவர்களின் திருமணத்தில் மாங்கல்ய தாரண பூஜை நடத்தியவர். யாரும் அறியாமல் சூட்சும வடிவில் பூலோகத்தில் சிவனை வணங்கி தன் சக்தியை அதிகரித்துக் கொண்டார். சிவன் இவருக்கு அருள்புரிந்த தலமே இடையாற்று மங்கலம்.

சிறப்பு: மணவாழ்வுக்காக காத்திருப்பவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு. திருமணம் நிச்சயித்தபின், மாங்கல்ய மகரிஷிக்கு வெற்றிலை பாக்குடன் கல்யாண பத்திரிகை வைத்து வேண்டிக் கொள்கின்றனர். உத்திர நட்சத்திரத்தினர் வழிபட்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறுவர்.
இருப்பிடம்: திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 22கி.மீ., தூரத்தில் லால்குடி. அங்கிருந்து இடையாற்று மங்கலம் 5 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 8- மதியம்12, மாலை6- இரவு 8.
போன்: 98439 51363, 0431- 254 4070.

#அஸ்தம்:
கோயில்: கோமல் கிருபா கூபாரேஸ்வரர் கோயில்
அம்மன்: அன்னபூரணி

🚩தல வரலாறு:
சிவனின் கண்களைப் பார்வதி கைகளால் பொத்தினாள். உலகமே இருளில் மூழ்கியது. அப்போது, சிவனும் தன் கையில் இருந்த ஹஸ்தாவர்ண ஜோதியில் மறைந்தார். சிவனைத் தேடி, அம்பாள் பசுவடிவில் பூலோகம் புறப்பட்டாள். அஸ்த நட்சத்திரத்தன்று சிவனை ஜோதிவடிவில் தரிசித்து ஐக்கியமானாள். பக்தர்கள் மீது கருணை(கிருபை) கொண்டவர் என்பதால் "கிருபா கூபாரேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.

சிறப்பு: அஸ்த நட்சத்திரத்தினர் திங்கள், புதன்கிழமையில் வழிபடுவது நல்லது. அன்னபூரணி அம்பிகை பசுவாக இங்கு வந்ததால் பசு, கன்று தானம் அளிப்பது சிறப்பு.

இருப்பிடம்: கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குப் பிரியும் இடத்தில் இருந்து 8கி.மீ., தூரத்தில் கோமல்.
திறக்கும்நேரம்: காலை7- மதியம்12, மாலை 5.30- இரவு 7.30.
போன்: 95002 84866

#சித்திரை:

கோயில்: குவித்துறை சித்திரரத வல்லபபெருமாள்
தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி

🚩தல வரலாறு:
தேவகுரு பிரகஸ்பதியின் மகன் கசனை, அசுரகுரு சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானி திருமணம் செய்ய விரும்பினாள். கசனை அசுரலோகத்திலேயே கட்டாயப்படுத்தி இருக்கச் செய்தாள். மகனைக் காணாத பிரகஸ்பதி விஷ்ணுவை நோக்கி தவமிருந்தார். விஷ்ணு சக்கரத்தாழ்வார் மூலம் கசனை மீட்டார். இதையடுத்து சக்கரத்தாழ்வாரும், தேவ குருவும் ஒரே இடத்தில் அமர்ந்தனர். அதுவே குருவித்துறை தலம்.

சிறப்பு: பிரகஸ்பதிக்கு அருள்புரிய விஷ்ணு, சித்திர ரதத்தில், சித்திரை நட்சத்திரத்தன்று எழுந்தருளினார். எனவே, இக்கோயில் சித்திரைக்குரியதானது. வியாழன், பவுர்ணமி, சித்திரை நட்சத்திர நாட்களில் தரிசிப்பது சிறப்பு.

இருப்பிடம்: மதுரையிலிருந்து 23 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 7.30- மதியம் 12, மாலை 3- 6.
போன்: 94439 61948, 97902 95795.

#சுவாதி:
கோயில்: சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோயில்
அம்மன்: பூங்குழலி
🚩தல வரலாறு:
படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா ஆகியோர் நெல்லிவனத்தில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டனர். சித்தர் தவமிருந்த பகுதியானதால் இப்பகுதி சித்தர்காடு, சித்துக்காடு என அழைக்கப்பட்டது. . நெல்லி மரத்தடியில் இருப்பதால் சிவனுக்கு "தாத்திரீஸ்வரர்' என்று பெயர். "தாத்திரீ' என்றால் "நெல்லி.

சிறப்பு: சுவாதி நட்சத்திரத்தினர் இங்கு சிவனை வழிபட்டால் செல்வ வளமிக்க வாழ்வு உண்டாகும். திருமணயோகம் விரைவில் கைகூடும். இங்கு குபேரருக்கு நெல்லிக்காய் ஊறுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து வழிபட்டால் யோகவாழ்வு அமையும்.

இருப்பிடம்: சென்னை பூந்தமல்லி- தண்டுரை வழியில் 8 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை8- 10, மாலை 5-7
போன்: 93643 48700, 9382684485.

#விசாகம்:
கோயில்: பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயில்
🚩தல வரலாறு:
பூவன்பட்டர் என்ற அர்ச்சகரின் கனவில் முருகன் தோன்றி, புதையுண்டு கிடக்கும் சிலையை திருமலையில் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். அதன்படி, பந்தளமன்னர் கோயில் கட்டினார். மண்டபம் எழுப்புவதற்கான கற்களை, சிவகாமி பரதேசி என்ற முருக பக்தை, மலையடிவாரத்திலிருந்து வாழைமட்டை மூலம் இழுத்துச் சென்ற பெருமையுடையது.

சிறப்பு: விசாகம் என்றால் "மேலான ஜோதி'. இந்த நட்சத்திரத்தின் ஒளிக்கிரணங்கள் இம்மலையில் படுவதால் விசாக நட்சத்திரத்தினர் வழிபட்டால் வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும்.
இருப்பிடம்: மதுரையிலிருந்து செங்கோட்டை 155 கி.மீ., அங்கிருந்து 7கி.மீ., தூரத்தில் கோயில்.
திறக்கும்நேரம்: காலை6- மதியம் 1, மாலை 5, இரவு 8.30.
போன்: 04633- 237 131, 237 343.

#அனுஷம்:
கோயில்: திருநின்றியூர் மகாலட்சுமிபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: உலகநாயகி

🚩தல வரலாறு:
ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா கந்தர்வன் ஒருவனின் அழகை ரசித்தாள். இதை அறிந்த முனிவர் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமனிடம் கூறினார். பரசுராமனும் அவ்வாறே செய்து, தந்தையின் உதவியோடு மீண்டும் தாயை உயிர்பெறச் செய்தார். இந்த பாவம் நீங்க தந்தையும் மகனுமாக திருநின்றியூர் சிவனை வழிபட்டனர்.

சிறப்பு: பூமியில் புதைந்துபோன சிவலிங்கம், சோழ மன்னனால் கண்டறியப்பட்டு ஒரு அனுஷ நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே இக்கோயில் அனுஷத்திற்கு உரியதானது. அனுஷ நட்சத்திர ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலட்சுமி பூஜையன்றும் சிறப்பு வழிபாடு செய்தால் செல்வவளம் உண்டாகும்.
இருப்பிடம்: மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை6- 11, மாலை 4- இரவு 8.
போன்: 04364- 320 520

#கேட்டை:
கோயில்: பசுபதிகோயில் வரதராஜப்பெருமாள் கோயில்
தாயார்: பெருந்தேவி

🚩தல வரலாறு:
ராமானுஜரின் குருவான பெரியநம்பி, மார்கழி கேட்டையில் அவதரித்தவர். இவரது 105வது வயதில் சோழமன்னன் ஒருவன் ராமானுஜர் மீதிருந்த கோபத்தால் பெரியநம்பியின் கண்களைப் பறித்தான். அவர் பசுபதிகோயில் வரதராஜப் பெருமாளிடம் அடைக்கலம் புகுந்தார். அவரின் துன்பம் போக்கும் விதத்தில், பெருமாள் இங்கு மோட்சம் அளித்தார்.

சிறப்பு: பெரியநம்பியின் திருநட்சத்திர வைபவம் சிறப்பாக நடக்கும். கேட்டை நட்சத்திரத்தினர் வழிபட்டால் நல்வாழ்வு கிடைக்கும். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாயன்று வரும் கேட்டையில் வழிபடுவது சிறப்பு.
இருப்பிடம்: தஞ்சாவூர்- கும்பகோணம் வழியில் 13கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை7- 9, மாலை 5.30- 7.30.
போன்: 97903 42581, 94436 50920

(தொடரும்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+