பூராடம் வாழ்க்கை ஃபுல்லா போராட்டமா? பெருமாளின் நட்சத்திரமான திருவோணத்தின் சிறப்பு என்ன?
சென்னை: எந்த நட்சத்திரக்காரர்களுக்கு எந்தெந்த கோயில் என்பதை பார்த்து வருகிறோம். இதில் இன்று மூல நட்சத்திரம் முதல் ரேவதி வரை உள்ள நட்சத்திரங்களுக்கு எந்தெந்த கோயில்கள் என்பதை பார்ப்போம். இது வரை 18 நட்சத்திரங்களுக்கான கோயில்களும் அதன் சிறப்புகளும் விளக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது:

மூலம்:
கோயில்: மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்
அம்மன்: புஷ்பகுஜாம்பாள்
🚩தல வரலாறு:
சிவன் ஆனந்ததாண்டவம் ஆடியபோது மிருதங்கம் வாசித்தவர் சிங்கி என்ற நந்திதேவர். இசையில் ஆழ்ந்து கண்ணை மூடியபடி தாளம் போட்டதால், நடனத்தைப் பார்க்க முடியவில்லை. அதனால், மப்பேடு வந்து சிவபூஜை செய்து இறைவனின் நடனத்தைக் கண்டு களித்தார். மெய்ப்பேடு என்பதே மப்பேடு ஆகிவிட்டது. சிங்கி வழிபட்ட சிவன் என்பதால் சிங்கீஸ்வரர் எனப்பட்டார்.
சிறப்பு: மூலநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரதோஷத்தன்று இங்கு வழிபடுவது சிறப்பு. இங்குள்ள நவவியாகரண கல் மீது ஏறி, நந்தியையும், மூலவரையும் ஒரே சமயத்தில் தரிசித்தால் ஆரோக்கியம் மேம்படும்.
இருப்பிடம்: சென்னை கோயம்பேடு- தக்கோலம் வழியில் 45 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை6- 10, மாலை 5.30-இரவு 7.30.
போன்: 94447 70579, 94432 25093
#பூராடம்:
கோயில்: கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: மங்களாம்பிகை
🚩தல வரலாறு:
சிவதரிசனம் பெற விரும்பிய கடுவெளிச்சித்தர் அருள்பெற்ற தலம் கடுவெளி. "கடுவெளி' என்றால் "ஆகாசவெளி'. சோழமன்னன் ஒருவன் இங்கு கோயில் கட்டினான். ஆகாயத்திற்கு அதிபதியாக ஆகாசபுரீஸ்வரர் இங்கு வீற்றிருக்கிறார்.
சிறப்பு: இத்தலம் பூராடம் நட்சத்திரத்திற்குரியது. ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும் பூராடத்தன்று இங்கு வழிபடுவதாக ஐதீகம். அன்று சிவனுக்கு புனுகு சாத்தி வழிபட திருமண, தொழில்தடை நீங்கும்.
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து திருவையாறு 13 கி.மீ., அங்கிருந்து கல்லணை வழியில் 4 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை9-10, மாலை 5-6, பூராடத்தன்று: காலை 8- மதியம்1.
போன்: 94434 47826, 96267 65472
#உத்திராடம்:
கோயில்: கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: மீனாட்சியம்மன்
🚩தல வரலாறு:
படைப்புத் தொழிலைச் செய்ததால், சிவனை விட தானே உயர்ந்தவன் என்று பிரம்மா கருதினார். இந்த மமதையை அடக்க, பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒருதலையைக் கொய்தார் சிவன். தனது பாவம் தீர பிரம்மா, பூலோகத்தில் சிவனை வழிபட்ட தலம் கீழப்பூங்குடி. பழைய கோயில் அழிந்து போனதால் புதிய கோயில் கட்டப்பட்டது.
சிறப்பு: இங்குள்ள மீனாட்சி அம்மனின் நட்சத்திரம் உத்திராடம். இதில் பிறந்தவர்கள் பிரம்மபுரீஸ்வரரையும், மீனாட்சியையும் உத்திராடத்தன்று வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். பவுர்ணமியன்று சிவனுக்கு விசேஷ பூஜை நடக்கும்.
இருப்பிடம்: மதுரையிலிருந்து 45கி.மீ., சிவகங்கையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் ஒக்கூர் 12கி.மீ., அங்கிருந்து கீழப்பூங்குடி 3 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை7- 11, மாலை 5- இரவு8
போன்: 99436 59071, 99466 59072
#திருவோணம்:
கோயில்: திருப்பாற்கடல் பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கோயில்
தாயார்: அலர்மேலுமங்கைத் தாயார்
🚩தலவரலாறு:
புண்டரீக மகரிஷியின் பக்திக்கு இணங்கி பெருமாள் பிரசன்னமான தலம் திருப்பாற்கடல். சந்திரன் ஒரு சாபத்தால் இருளடைந்தான். அவன் மனைவியரில் ஒருத்தியான திருவோணதேவி வருந்தினாள். இங்கு வந்து வழிபட்டு கணவரின் சாபம் நீங்கப் பெற்றாள்.
சிறப்பு: திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், மூன்றாம்பிறை ஆகிய நாட்களில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட நினைத்தது நிறைவேறும்.
இருப்பிடம்: வேலூர்- சென்னை வழியில் 20கி.மீ., தூரத்தில் காவேரிப்பாக்கம். இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் கோயில்.
திறக்கும்நேரம்: காலை 7.30- மதியம் 12, மாலை 4.30- இரவு 7.30
போன்: 94868 77896,04177 254 929
#அவிட்டம்:
கோயில்: கீழ்க்கொருக்கை பிரம்மஞானபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: புஷ்பவல்லி
🚩தல வரலாறு:
கோரக்கசித்தர் ஒரு மடத்தில் தங்கியிருந்தார். இரவில் விழித்தபோது, அவரருகில் ஒருத்தி படுத்திருந்தாள். முந்தானை சித்தர் மீது கிடந்தது. இதற்கு பரிகாரமாக தன் கைகளை வெட்டிக் கொண்டார். சிவனருளால் கைகள் வளர்ந்தன. கையை வெட்டியதால் "கோரக்கை' என்றும், குறுகிய கைகளால் வழிபட்டதால் "குறுக்கை' என்றும் ஊருக்குப் பெயர் வந்தது. தற்போது "கொருக்கை' எனப்படுகிறது.
சிறப்பு: அவிட்ட நட்சத்திரத்தன்று பிரம்மஞானபுரீஸ்வரர், பிரம்மாவுக்கு ஞானம் தந்ததால் இத்தலம் அவிட்டத்திற்கு உரியதானது. இந்த நட்சத்திரத்தினர் ஆவணி அவிட்டத்தன்று அடிப்பிரதட்சிணம் செய்து வழிபட்டால் யோக வாழ்வு அமையும்.
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை11- மதியம்1, மாலை5- மாலை 6
போன்: 98658 04862, 94436 78579
#சதயம்:
கோயில்: திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: கருந்தார் குழலி
🚩தல வரலாறு:
தவமிருந்த அக்னிதேவனுக்கு சந்திர சேகரராக சிவன் காட்சியளித்து அருள்புரிந்த தலம் திருப்புகலூர். "புகல்' என்றால் அடைக்கலம். அடைக்கலம் புகுந்தவர்களை ஆட்கொள் பவராக சுவாமி இங்கு வீற்றிருக்கிறார். வர்த்தமானேஸ்வரர், மனோன்மணி அம்பாளும் இங்கு வீற்றிருக்கின்றனர்.
சிறப்பு: திருநாவுக்கரசர் தன் 81ம் வயதில் சித்திரை சதய நாளில் இங்கு சிவனோடு இரண்டறக் கலந்தார். இதை ஒட்டி பத்து நாட்கள் திருவிழா நடக்கும். சதய நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் ஆயுள், ஆரோக்கியம், செல்வவளம் உண்டாகும்.
இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம்- நாகப்பட்டினம் வழியில் 10கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 6- மதியம்12, மாலை 4- இரவு9
போன்: 04366 236 970
#பூரட்டாதி:
கோயில்: ரங்கநாதபுரம் திருவானேஸ்வரர் கோயில்
அம்மன்: காமாட்சி
🚩தல வரலாறு:
இந்திரனும், அவனது ஐராவத யானையும் பூரட்டாதிநாளில் திருவானேஸ்வரரை பூஜித்து நற்பலன் பெற்றனர். கோச்செங்கட்சோழன் கட்டிய முதல் மாடக்கோயில். இறைவன் இங்கிருந்தே காலச்சக்கரத்தைப் படைத்தார். கஜ கடாட்ச சக்தி விமானத்தின் கீழ் சுவாமி எழுந்தருளியிருக்கிறார்.
சிறப்பு: பூரட்டாதியன்று திருவானேஸ்வரரை வழிபட்டு ஏழு வண்ண ஆடைகளை ஏழைகளுக்கு தானம் அளித்தால் புத்திகூர்மை உண்டாகும். திருமணம், வேலைவாய்ப்பு தடையின்றி நடந்தேறும்.
இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து திருவையாறு 20 கி.மீ., இங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி 17கி.மீ., அங்கிருந்து அகரப்பேட்டை வழியில் 2கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை7-9, மாலை 5.30-இரவு 7
போன்: 94439 70397, 97150 37810
#உத்திரட்டாதி:
கோயில்: தீயத்தூர் சகஸ்ர லட்சுமீஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
🚩தல வரலாறு:
சிவதரிசனம் பெற விரும்பிய லட்சுமி, அகத்தியரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் வழிபட்ட தலம் தீயத்தூர். அவள், தினமும் ஆயிரம் தாமரை மலர்களால், சிவனை வழிபட்டதால் "சகஸ்ரலட்சுமீஸ்வரர்' என்று பெயர் வந்தது. "சகஸ்ர' என்றால் "ஆயிரம்'.
சிறப்பு: உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அவதரித்த தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸர், அக்னி புராந்தக மகரிஷி ஆகியோர் அரூபவடிவில் சகஸ்ரலட்சுமீஸ்வரரை தரிசிக்க உத்திரட்டாதி நாளில் வருவதாக ஐதீகம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொங்கல் நைவேத்யம் செய்ய பணக்கஷ்டம் தீரும். செயல்பாடுகளில் தடை நீங்கும்.
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து ஆவுடையார்கோயில் 40கி.மீ., அங்கிருந்து திருப்புனவாசல் செல்லும் வழியில் 21கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 6- மதியம் 12
போன்: 99652 11768, 04371-239 212
#ரேவதி:
கோயில்: காருகுடி கைலாசநாதர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
🚩தல வரலாறு: சந்திரன் தன் மனைவியான ரேவதியுடன் சிவனருள் பெற்ற தலம் காருகுடி. "கார்' எனப்படும் ஏழுவகை மேகங்களும் சிவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு "காருகுடி' என்ற பெயர் உண்டானது. 1800 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி கோயிலைக் கட்டினான்.
சிறப்பு: ரேவதி நட்சத்திர தேவதை அரூப வடிவத்தில் (உருவமின்றி) தினமும் சிவனை வழிபடுவதாக ஐதீகம். ரேவதி நட்சத்திரத்தினர் இங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட நினைத்தது விரைவில் நிறைவேறும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும்.
இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி 40கி.மீ, இங்கிருந்து தாத்தய்யங்கார் பேட்டை 21கி.மீ., அங்கிருந்து காருகுடி 5கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை6- 11, மாலை5- இரவு8
போன்: 97518 94339, 94423 58146
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களாக 18 நட்சத்திரங்களுக்கான கோயில்களை பார்த்த நிலையில் இன்று மீதமுள்ள 9 நட்சத்திரங்களுக்கான கோயில்களையும் அதன் சிறப்புகளையும் பார்த்ததுடன் இந்த பகுதி இத்துடன் நிறைபெறுகிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய்












Click it and Unblock the Notifications