Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருட ஜெயந்தி.. பில்லி, சூனியம், நாகதோஷம் போக்கும் அஷ்டநாக விஸ்வரூப கல் கருடன்.. சிறப்பு அபிஷேகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருடாழ்வார் பிறந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு செய்தால் பில்லி, சூன்யம், நாக தோஷம் மற்றும் அனைத்து தோஷங்களும் நீங்கும். அபிசார தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. பெரிய திருவடி என்று போற்றப்படும் கருடாழ்வார் ஜெயந்தியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் 21 அடி உயரத்தில் எழுந்தருளிய அஷ்டநாக விஸ்வரூப கல் கருட பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தட்சனின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு. காஷ்யப முனிவருக்கு காத்ரு, வினதா என்று இரண்டு மனைவிகள். காத்ருவும்,வினதாவும் சகோதரிகள். ஒருமுறை வானில் பறந்து கொண்டிருந்த உக்கைஷ்ரவா என்ற தேவலோகக் குதிரையைக் கண்டனர்.

Garuda Jayanthi 2023: Ashtanaga Vishwarupa Kal Garuda that cures Naga dosha

குதிரையின் வால் என்ன நிறம் என்பது பற்றி இருவருக்கும் வாக்குவாதம் மூண்டது. வினதா அதை வெள்ளை என்று சொல்ல காத்ரு வெள்ளைக் குதிரைக்கு கருப்பு வால்தான் இருக்க முடியும் என்று பந்தயம் வைத்தாள். யார் பந்தயத்தில் தோற்றுப் போகிறார்களோ அவர்கள் மற்றவரிடம் காலம் முழுவதும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நிபந்தனை. மறுநாள் அந்த குதிரையின் வால் நிறத்தை மீண்டும் உறுதி செய்து கொள்வது என்று இருவரும் பேசிக்கொண்டனர்.

அன்று இரவே காத்ரு தன் குழந்தைகளான ஆயிரம் பாம்புகளிடம் குதிரையின் வால் போல் தோற்றமளித்து தான் பந்தயத்தில் ஜெயிக்க உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டாள். பாம்புகள் மறுநாள் அக்குதிரையின் வால் போல் காட்சி தந்து வினதாவை ஏமாற்றின. வினதாவும் அதை நிஜமென்று நம்பி காலம் முழுவதற்கும் தன் சகோதரிக்கு கட்டுப்பட்டு இருக்கத் தொடங்கினாள். இந்த வினதாவுக்கு மகனாகப் பிறந்தவனே கருடன். தன் தாயின் நிலை கண்டு வருந்திய கருடன் தன் பாம்பு சகோதரர்களிடம் தன் தாய்க்கு விடுதலை வாங்கித் தருமாறு வேண்டிக்கொண்டான்.

Garuda Jayanthi 2023: Ashtanaga Vishwarupa Kal Garuda that cures Naga dosha

பாற்கடலை கடையும்போது கிடைக்கும் அமுதத்தை தமக்கு கொண்டு வந்து தந்தால் கருடனின் தாயை தங்கள் அன்னையிடம் இருந்து மீட்டுத் தருவதாக பாம்புகள் வாக்களித்தன. பலவகையான போராட்டங்களுக்கு பிறகு மிக பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த அமிர்த கலசத்தை கருடன் தூக்கிச் செல்ல தன் தாயின் மேல் அவன் வைத்திருந்த பிரியத்தை எண்ணி மனம் மகிழ்ந்த நாராயணன் அவனை தனது வாகனமாகிக் கொண்டார். வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்' என்று வரமளித்து கருடனை தன்னுடைய வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்' என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது.

பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. விஷ்ணுவை தன் மீது அமர்த்திக் கொண்டு வெகு வேகமாக கருடன் பறந்த போது இந்திரன் தன் வஜ்ராயுதத்தை ஏவி அவனைத் தடுக்கப் பார்த்தான். ஆனால் வஜ்ராயுதம் கருடனுக்கு எந்த தீங்கும் இழைக்கவில்லை. கருடனின் சக்தி அறிந்த இந்திரன் அமிர்தத்தை வேறு எவருக்கும் தரக்கூடாது என்று கட்டளை இட்டான். அதற்கு கருடன் "என் தாய் விடுதலை ஆனதும் தாங்களே வந்து அமிர்த கலசத்தை மீட்டுக் கொள்ளுங்கள். பதிலுக்கு பாம்புகள் எனக்கு உணவாகும் வரத்தை நீங்கள் அருள வேண்டும்" என்று வரம் கேட்டார்.

Garuda Jayanthi 2023: Ashtanaga Vishwarupa Kal Garuda that cures Naga dosha

இந்திரனும் கருடனின் சொல்லால் மனம் நெகிழ பாம்புகள் இருக்கும் இடத்தில் அமிர்த கலசத்தை ஒரு புல் தரையின் மீது கருடன் வைத்தான். ஆகம முறைப்படி சுத்த பத்தமாக ஸ்நானம் செய்த பிறகே அமிர்தத்தை பருக வேண்டும். அதற்கு முன்பு தன் தாயை விடுவிக்க வேண்டும் என்று கருடன் சொல்ல வினதாவும் விடுதலை ஆனாள். பாம்புகளும் ஸ்நானம் செய்யச் சென்றன. அந்நேரம் இந்திரன் வந்து அமிர்த கலசத்தை மீண்டும் எடுத்துச் சென்றான். அமிர்த கலசத்தை காணாத பாம்புகள் ஏமாற்றத்தில் திகைத்தன. அதுமுதல் கருடன் பாம்புகளை உணவாக்கிக்கொள்ள ஆரம்பித்தது.

கருடாழ்வார் சுவாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர் என்பதால் ராகுவின் தன்மை பெற்றிருக்கிறார். ஸ்வாதி நக்ஷத்திரம் சுக்கிரனின் வீடாகிய துலாராசியில் அமைந்திருப்பதால் சுக்கிரனின் அதிதேவதையாகிய ஸ்ரீ மஹாலட்மியின் அம்சமாகவும் விளங்குகிறார். சுக்கிர ஸ்தலமாகிய ஸ்ரீ ரங்கத்தில் பெரிய திருவடியாகி பெரிய கருடனாகவும் அமிர்த கலச கருடனாகவும் அருள்புரிவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டையில் அருள்பாலிக்கும் கல் கருட பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 21 அடி உயரத்தில் எழுந்தருளிய அஷ்டநாக விஸ்வரூப கல் கருட பகவானுக்கு கருட ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ கருட ஹோமம், ஸ்ரீ அனுமந்த ஹோமம், ஸ்ரீ மகாலக்ஷ்மி ஹோமம் பல்வேறு சஞ்சீவிகளைக் கொண்டு சிறப்பு யாகங்களுடன் நவ கலச திருமஞ்சனமும், புஷ்பாஞ்சலியும், அன்னபிரசாதம் வழங்கும் நிகழ்வும் ஸ்வாமிகளின் ஆசியுரையும் நடைபெற்றது.

நாளைய தினம் 27.07.2023 வியாழக்கிழமை வாஸ்து நாளை முன்னிட்டு காலை 7.00 மணிமுதல் 9.00 மணிக்குள்ளாக அஷ்டதிக் பாலகர்கள், பஞ்ச பூதங்கள் மற்றும் வாஸ்து பகவானுக்கு சிறப்பு ஹோமத்துடன் திருமஞ்சனமும் நடைபெறவுள்ளது. மேலும் உங்கள் இல்லத்தில் தன்வந்திரி பகவான் என்ற வைபவத்திற்காக தன்வந்திரி உற்சவர் விஜய யாத்திரை பெங்களூரில் துவங்கவுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+