தங்கத்தை வீட்டில் இங்கே வைக்காதீங்க.. தங்க நகை நிறைய சேரணுமா? தங்க தோஷம் நீங்க சூப்பர் வாஸ்து டிப்ஸ்
சென்னை: வீடுகளில் தங்கம் தங்கியிருக்க வேண்டுமா? தங்க நகைகள் பெருகி கொண்டேயிருக்க வேண்டுமா? தங்க நகைகளை வீட்டில் எந்த இடத்தில், எப்படி வைக்க வேண்டும்? தங்கம் பெருக்குவதற்கு உதவும் பரிகாரங்கள் என்ன? சுருக்கமாக பார்ப்போம்.
அட்சய திருதியில் பலரும் தங்கம் வாங்குவார்கள் என்றாலும், பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரம் வரும் புதன், வெள்ளி கிழமைகளிலும் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டம் என்பார்கள்.

தங்கதோஷம்: தங்க நகைகளை வீட்டுக்கு வாங்கி வந்ததுமே, அதை தூய்மையான வெண்மை நிற துணி அல்லது பேப்பரில் சுற்றி, கல் உப்பில் சிறிது நேரம் புதைத்து வைத்திருக்க வேண்டும். இப்படி செய்தால், தங்கத்தில் உள்ள தோஷங்கள் அனைத்தும் விலகி, மேலும் தங்கம் பெருக வழிவகுக்கும். அதேபோல வேறு வழியிலும் தங்க தோஷத்தை நீக்கலாம்.
அதாவது, நீங்கள் இரவலாக கொடுக்கும் தங்க நகைகளில் கூட தோஷம் உண்டாகுமாம்.. அதனால், ஒருவர் போட்ட நகையை வாங்கி, அப்படியே இன்னொருவர் போட்டுக் கொள்ள கூடாது. காரணம், தங்க நகைகளை அணிந்திருக்கும்போது, நம்முடைய உடலிலிருந்து வரும் வியர்வை துளிகள் நகைகளில் சேர்ந்து தோஷத்தை உண்டாக்கிவிடுமாம்.
பன்னீர், கஸ்தூரி மஞ்சள்: எனவே தோஷம் நீங்காமல் தங்கத்தை அணிய அல்லது அணிவிக்க கூடாது... தங்க தோஷம் நீங்க வேண்டுமானால், தண்ணீரில் சிறிதளவு பன்னீரும், கஸ்தூரி மஞ்சளும் கலந்து அதில் நகைகளை போட்டு எடுத்து, மறுபடியும் பயன்படுத்தி கொள்ளலாம்.
சனிக்கிழமை, ரோகிணி நட்சத்திரம், அமிர்தயோகம் இந்த மூன்றுமே ஒன்றுசேர்ந்து வரும் நாளன்று, "ஓம் தங்க கணபதி வஸ்ய வஸ்ய நம" என 108 முறை பாராயணம் செய்துவிட்டு தங்கம் வாங்கினால் தங்கம் பெருகும் என்பார்கள்.. அதேபோல, லக்கினத்தில் குரு,10 ல் சந்திரன், 11ல் புதன் போன்ற நிலைகள் இருக்கும் காலகட்டத்தில் தங்கம் வாங்கினாலும், வீட்டில் தங்கம் பெருகுமாம்.
தங்க நகைகள்: தங்க நகைகளை வீடுகளில் வைத்திருப்பதில்கூட திசைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள்.. அந்த வகையில், வீட்டின் கன்னி மூலையில் அதாவது, தென்மேற்கு பகுதியில் தங்கத்தை வைக்கும்போது, தங்கம் அதிகரிக்கும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.. ஆனால், வீட்டின் வடமேற்கு திசையில் தங்கம் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல, நகைகள் வைத்திருக்கும் லாக்கர்கள், வடக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். ஈசானிய மூலையில் தங்கம் மற்றும் பணம் வைப்பது சிறப்பானதாகும்.. அதேபோல, வெள்ளிக்கிழமைகளில், சுவாமி படங்களுக்கு தங்க நகைகளை அணிவித்து வரும்போதும் தங்கம் வீட்டில் மும்மடங்கு பெருகும் என்பார்கள்..
சமையலறை: தங்க நகைகளை ஒருபோதும் சமையலறையிலுள்ள, அரிசி, பருப்பு, அஞ்சறை பெட்டிகளில் வைக்கக்கூடாது. அதேபோல, அடுப்பு மேடையில் அக்னி மூலையிலும், தங்க நகைகளை வைக்கக்கூடாது.. இதனால், வீட்டில் தங்கம் தங்காது என்பார்கள்.. அதேபோல, வட மேற்கு மூலையிலுள்ள அறையிலும் தங்க நகைகளை சேமித்து வைக்கக் கூடாது என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications