Hanuman Jayanthi: எந்தெந்த ராசிக்காரர்கள் அனுமன் சாலிசா பாராயணம் செய்ய வேண்டும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பவுர்ணமி நன்னாளில் அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படும் நிலையில் எந்தெந்த ராசிக்காரர்கள் அனுமன் அருளை பெற அனுமன் சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

ஹனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. அவருடைய பிறந்த நாளை கொண்டாடும் நாள் இது. வலிமை, பக்தி, ஞானம் உள்ளிட்டவைகளுக்கு சொந்தக்காரர் ஹனுமன்.

spirtuality hanuman jayanti

அனுமனின் அருளை பெற அனுமன் சாலிசாவை பல பக்தர்கள் சொல்லி வருகிறார்கள். அது போல் அனுமனை போல உடல் வலிமை, ஞானம், அறிவு ஆகியவற்றை பெறவும் இது உதவுகிறது.

அந்த வகையில் அனுமன் அருளை பெற எந்தெந்த ராசிக்காரர்கள் அனுமன் சாலிசா சொல்ல வேண்டும் என்பதை பார்க்கலாம். ஜோதிடர்களும் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் இந்த அனுமன் சாலிசாவை சொல்ல வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.

அந்த வகையில் மேஷம், விருச்சிகம், சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அனுமன் சாலிசாவை ஜெபிக்க வேண்டும்.

மேஷம்- செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் கொண்டது மேஷ ராசி. அனுமன் சாலிசாவை இந்த ராசிக்காரர்கள் சொல்வதன் மூலம் அவருக்கு மன அமைதி கிடைக்கும். புத்தி கூர்மையும் கிடைக்கும். மன சஞ்சலம் குறையும்.

விருச்சிகம்- இந்த ராசிக்கும் செவ்வாய்தான் அதிபதி. இவர்கள் எல்லாவற்றிற்கும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். அனுமன் சாலிசாவை சொல்வதன் மூலம் மன அமைதியும் தெளிவும் கிடைக்கும். எதிர்மறை எண்ணங்களில் இருந்து பாதுகாக்கும்.

சிம்மம்- சூரியனின் ஆதிக்கத்தை கொண்டவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். இவர்கள் அச்சமின்மையும் பெருமையையும் கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் அனுமன் சாலிசா சொல்வதன் மூலம் ஈகோ தொடர்பான போராட்டங்களில் இருந்து விடுபடுவார்கள். தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள உதவும்.

கடகம்- செவ்வாயை ராசி அதிபதியாக கொண்டவர்கள். உணர்ச்சிவசப்படுவீர்கள். அனுமன் சாலிசா சொல்வதன் மூலம் உங்களது ஆன்மீக தொடர்பை வலுப்படுத்தும், பாதுகாப்பான சூழல் மற்றும் அமைதியை கொடுக்கும்.

தனுசு, மீனம்- இரு கிரகங்களுமே குருவின் ஆதிக்கத்தை பெற்றவை. உண்மை மற்றும் தார்மீக தெளிவை தேடலுடன் தொடர்புடையவர்கள். இவர்கள் அனுமன் சாலிசா சொன்னால் அது பாதுகாப்பு அரணாக இருக்கும் என்கிறார்கள்.

அனுமன் சாலிசா துளசிதாஸ் என்பவரால் எழுதப்பட்டது. இதில் மொத்தம் 40 பத்திகள் உள்ளன. இந்த ராசிக்காரர்கள் அனுமன் சாலிசாவை சொன்னால் அனுமனின் ஆசிகளை அதிகமாக பெறுவார்கள். அது மட்டுமல்லாமல் இதை சொன்னால் அச்சம் போகும், எதிர்மறை எண்ணம் விலகும், உள்ளுணர்வை வலுப்படுத்தும். ஆன்மீகத்தையும் வளர்க்கும் என்கிறார்கள்.

இன்று அனுமன் ஜெயந்தி நாளன்று சிவப்பு அல்லது காவி நிறத்தினாலான உடைகளை அணிய வேண்டும். செந்தூரம், வாழைப்பழம், பூக்கள், வெல்லம் வைத்து படைக்க வேண்டும். நெய் விளக்கு ஏற்றி ஊதுபத்தி ஏற்ற வேண்டும். அனுமன் சாலிசாவை 11 முறை அல்லது 108 முறை ஜெபித்தால் அதீத பலன்களை பெறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+