மருதாணி விதைகள்.. சாம்பிராணியுடன் நாலு மருதாணியின் விதையை பொடித்து போடுங்க.. கூடும் பணம், மகிழ்ச்சி
சென்னை: வீடு முழுவதும் வாரம் ஒரு முறையாவது தூபம் போட்டு வந்தால், வீட்டிலுள்ள திருஷ்டிகள், எதிர்மறை ஆற்றல்கள் விலகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்தவகையில், மருதாணி செடியின் விதைகளில் எப்படி தூபம் போட வேண்டும் தெரியுமா? இதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
பெரும்பாலும் வீடுகளில் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் சாம்பிராணி போடுவார்கள். இதனால், தேவையற்றவை விலகி தேவையானவை வீடு தேடி வரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

சாம்பிராணி : சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.. சிலர் சாம்பிராணியில் அகில் போட்டு தூபம் போடுவார்கள். இதனால், குழந்தைபேறு உண்டாகும். அதேபோல, சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட்டால் வீட்டில் தெய்வம் நிலைக்கும். சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு தூபம் போட்டால், வீடெல்லாம் லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்..
சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட்டால் சகல தோஷங்களும் விலகிவிடும். சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டால், காரியசித்தி உண்டாகும். சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட்டால் சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பவுடரை போட்டு தூபமிட்டால், பெரியோர்களின் மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.
மருதாணி இலை: அந்தவகையில், சாம்பிராணியில் மருதாணி இலை பொடியையும் பயன்படுத்தலாம்.. எப்படி தெரியுமா? மருதாணி விதைகளை வெயிலில் காயவைத்து ஒரு டப்பாவில் வைத்து கொண்டு, வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி போடும் போது, அதில் இந்த மருதாணி விதைகளையும் நாலு பொடித்து தூபம் போடுவதால், சூனிய கோளாறுகள் மொத்தமும் விலகும்.. உங்களை இத்தனை காலமும் வாட்டிக்கொண்டிருந்த துரதிர்ஷ்டங்களும் விலகும்.. கட்டுக்கடங்காத செலவுகளும் இனி கட்டுக்குள் வரக்கூடும்..
சிலர் வாரம் 2 முறை என இல்லாமல் தினம்தோறும் வீட்டில் சாம்பிராணி போடுவார்கள்.. அப்படி போடுபவராக இருந்தாலும், மருதாணி காய்களை பயன்படுத்தலாம்.. காரணம், தாந்திரீக வித்தைகளில் இந்த மருதாணி விதைகளைதான் நிறைய பயன்படுத்துகிறார்களாம்... இப்படி மருதாணி விதைகளுடன் வீட்டில் சாம்பிராணி தூபம் போடும்போது, அந்த வாசத்திற்கு வீட்டில் கண்ணுக்கு தெரியாத எந்த கெட்ட சக்தியாக இருந்தாலும் அது நீங்கி விடும்.. அத்துடன், வீட்டில் விஷ ஜந்துக்கள், பூச்சிகள் இருந்தாலும் வெளியேறிவிடும்.
தொழில் விருத்தி: வீடுகளில் மருதாணி விதையை போட்டு தூபம் ஏற்றுவதை விட, வியாபாரம் செய்யும் இடங்கள், தொழில் ஸ்தாபனங்கள், தொழில் கூடங்களிலும் மருதாணி விதையில் தூபம் போடுவதால், மிகப்பெரிய முன்னேற்றமும், வளர்ச்சியும் காணப்படும். காரணம், மருதாணி விதைகளில் மகாலட்சுமி நிறைந்திருப்பதால், தொழில் வளர்ச்சியடையும்.. மருதாணி விதையை பொடித்து போடும்போது, வெண்கடுகம் சேர்த்து தூபம் போட்டால், இன்னும் நல்லது.. பொருளாதார முன்னேற்றம் அடையும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications