பூரி ஜெகன்னாதர் கோயிலில் இத்தனை அற்புதங்களா? கோபுரம் மீது பறவைகளே பறக்காதாமே?
சென்னை: ஒடிஸா மாநிலம், புரி கடற்கரையில் அமைந்துள்ள பூரி ஜெகந்நாதர் கோயில் ஆலயத்தில் உள்ள கோபுரத்தின் மீது பறவைகளே பறக்காதாம். அது போல் அந்த கோபுரத்தின் மீது பறவைகள் உட்காரவும் செய்யாதாம்.
இதுகுறித்து குரலோவியம் என்ற சமூகவலைதள ஐடியில் கூறியிருப்பதாவது: பூரி ஜெகன்னாதர் கோவிலின் மீது பறவைகள் பறப்பதில்லை, உட்காருவதில்லை! அறிவியலாளர்களும் திகைக்கும் மர்மம்..

மன்னன் அனந்தவர்மன் சோதகங்க தேவனால் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த பூரி ஜெகன்நாதர் ஆலயம். மற்ற இந்து கோயில்களை போல இல்லாமல் ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவரின் சிலை புனித வேப்ப மரம் என்றழைக்கப்படும் தாரு பிரமத்தினால் செய்யப்பட்டதாகும்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மூலவரின் சிலை அதே மரத்தினால் மறுவுருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிர்ஷ்டை செய்யப்படுகிறது. கிருஷ்ணர், பலராமர் மற்றும் சுபத்திரை ஆகியோர் இக்கோயில் மூலவர்கள் ஆவர்.
12 ஆண்டுக்கு ஒரு முறை
பூரி ஜெகநாத் கோயிலின் கருவறையில் மரத்தால் ஆன மூலவர் சிலைகள் உள்ளன. உலகிலேயே ஒரே கோயில் இதுதான். 12 வருஷத்துக்கு ஒரு முறை நடைபெறும் நவகளேபரா திருவிழாவுக்கு ஒவ்வொரு முறையும் புதிய சிலைகள் செய்கிறார்கள்.
கோபுரத்தின் நிழல்
இந்த கோயில் கோபுரத்தின் நிழல் ஒருபோதும் கீழே விழுவதில்லை. சூரியன் சுட்டெரித்தாலும் கோபுரத்தின் நிழலை பார்க்க முடியாது. இந்த கோயிலின் மேல் பறவைகள் எதுவும் பறப்பதில்லை. அதே நேரத்தில் இந்த கோபுரத்தில் எந்த பறவைகளும் அமர்வதுமில்லை. இந்த கோபுரத்தின் மேலுள்ள சக்கரம் எங்கிருந்து பார்த்தாலும், ஒரே மாதிரி தான் இருக்குமாம்.
எதிர்காற்றில் கொடி
பொதுவாக காலையில் இருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும். இதன் கொடி எப்போதும் காற்றை எதிர்த்து பறக்கிறது.
தங்க துடைப்பம்
கடற்கரையை ஒட்டி ஜெகந்நாதர் இருந்தாலும் கோவிலின் முதல் படியை தாண்டினால் கொஞ்சமும் கடல் அலைகளின் சத்தம் கேட்பதில்லை. தேர்த்திருவிழாவின் போது பூரி மன்னர் பரம்பரையினர் தங்கத் துடைப்பத்தைக் கொண்டு தெருவை சுத்தம் செய்கின்றனர். புதிய புதிய தேர்கள் செய்து கொண்டே இருக்கின்றனர். இது எப்படி சாத்தியம் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
உணவு பிரசாதம்
ஆலயத்தின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும் ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதும் இல்லை மீந்து போய் வீணானதும் நடந்தது இல்லை.
மடப்பள்ளி
மடப்பள்ளியில் இன்று வரை, விறகு அடுப்பு வைத்து, மண் பானைகளைக் கொண்டுதான் சமைக்கிறார்கள். இந்த மண் பானைகளை ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு அடுக்குகள் வைத்து, கீழே தீ மூட்டுகிறார்கள். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் கீழ் பானையில் உள்ள அரிசி கடைசியாகவும், மேல் பானையில் உள்ள அரிசி முதலாவதாகவும், வேகும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.
ரத யாத்திரை
பூரி ஜெகன்னாதர் கோயில் வைணவத் திருக்கோயிலாகும். இங்கு ரத யாத்திரை ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறுகிறது. அதாவது ஆடி பவுர்ணமி மாதம் தொடங்கி 9 நாட்கள் வரை இந்த ரத யாத்திரை கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்களாம்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications