பூமியிலிருந்து வைகுண்டம் எங்கே இருக்கிறது? எப்படி போக வேண்டும் தெரியுமா?
சென்னை: வைகுண்டம் என்கிறார்களே அது பூமியிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பது தெரியுமா? வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது என்கிறார்களே அது உண்மைதானா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து தீபா தங்கராசு என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மன்னன் ஒருவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. வைகுண்டம் என்று சொல்கிறார்களே, அது பூமியிலிருந்து எவ்வளவு தூரம்? என்பதே மன்னனின் சந்தேகம்.
அவையைக் கூட்டி சபையிலுள்ள பண்டிதர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான். அவர்கள் அவரவர் அறிவுக்கு எட்டிய வரை, வைகுண்டம் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதைக் குறிப்பிட்டனர்.
மன்னன் திருப்தியடையவில்லை. அப்போது சபையிலிருந்த விதூஷகன் எழுந்து, மகாராஜா! வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் உள்ளது என்றான்.
இதற்கு ஆதாரம் என்ன? என்று மன்னன் கேட்டான். உடனே விதூஷகன், கஜேந்திரன் எனும் யானையை முதலை பிடித்தபோது, ஆதிமூலமே என்று கூவி அழைத்தது அந்த யானை. அதன் குரல் கேட்டு க்ஷண நேரத்தில் மகாவிஷ்ணு அங்கே தோன்றி, கஜேந்திரனைக் காப்பாற்றினார். இது உண்மை எனில், வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது என்பதும் உண்மைதானே? என்று பதிலளித்தான்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமமே அவ்வளவு சக்தி வாய்ந்தது. ஹரி நாமத்தால் காப்பாற்றப்பட்டவர்கள் பலர் சபையோர் கரகோஷமிட்டு வாழ்த்தினர். மன்னன் மனமகிழ்ந்து விதூஷகனுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
எனவே கலியுகத்தின் தாரக மந்திரம்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
என தினமும் 108 முறை இந்த நாமத்தை ஜபம் செய்யவும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications