கொட்டிக் கொடுத்த பக்தர்கள்.. இந்த ஆண்டில் திருப்பதி ஏழுமலையானுக்கு வந்த உண்டியல் காணிக்கை இவ்வளவா?!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு மட்டும் உண்டியல் காணிக்கையாக ரூபாய் 1,398 கோடி பெறப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் பல்லாயிக்கணக்கானோர் திருப்பதி வந்து செல்கின்றனர். சில நிமிடங்கள் தரிசனத்திற்காக பல மணி நேரம் கால் கடுக்க காத்திருந்து ஏழுமலையான தரிசித்து வருகின்றனர் பக்தர்கள்.

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் தங்களின் சக்திக்கு ஏற்ப காணிக்கை செலுத்துகின்றனர். திருப்பதி உண்டியல் வருமானம், ஆண்டு தோறும் மலைக்க வைக்கும் அளவில் இருந்து வருகிறது. அதில் இந்த ஆண்டும், மாற்றம் இல்லை.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2023ஆம் ஆண்டில் 2.52 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், பக்தர்கள், திருப்பதி உண்டியலில் ரூ.1,398 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். தொடர்ந்து 22-வது மாதமாக இந்த டிசம்பர் மாதத்திலும் ரூ.100 கோடியை கடந்து உண்டியல் காணிக்கை வந்தது.
இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக ரூ.129 கோடியும், நவம்பர் மாதத்தில் ரூ.108 கோடியும் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர். டிசம்பர் மாதத்தில் பக்தர்கள் ரூ.116 கோடி காணிக்கையாக செலுத்தி உள்ளனர். இன்றைய நிலவரத்தையும் கணக்கில் இன்னும் அதிகமாக வரக்கூடும்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் வருகையை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளாகவே 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 23-ம்தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில் நாளை (திங்கட்கிழமை) இரவுடன் நிறைவு பெறுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications