திருப்பதி போகணும்னு பிளான் செய்தாலும் முடியலையா? அப்போ சனிக்கிழமைகளில் இதை செய்ங்க!
திருப்பதி: திருப்பதிக்கு போகணும்னு நினைக்கிறீர்கள், ஆனால் போக முடியவில்லையா, அதற்கு நீங்கள் சனிக்கிழமையில் ஒன்றை செய்தால், நிச்சயம் வெங்கடாஜலபதியை கண் குளிர பார்த்து அவரது ஆசியை பெறலாம்.
திருப்பதிக்கு செல்வது என்றாலே அலாதி பிரியம்தான். திருப்பதிக்கு செல்ல டிக்கெட் புக் செய்துவிட்டாலே அந்த நாளை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். என்னதான் ஆன்லைனில் புக் செய்ய காத்திருந்தாலும் பெருமாள் அழைத்தால்தான் நாம் அவரை பார்க்க செல்ல முடியும்.

டிக்கெட் புக் ஆகிவிட்டு பிறகு ரத்தான கதையெல்லாம் நடந்திருக்கு. எனவேதான் பெருமாள் நம்மை அழைத்தால் மட்டுமே அந்த புண்ணிய தலத்தை நாம் மிதிக்க முடியும்.
இப்படி திருப்பதி செல்ல நினைத்தும் போக முடியாமல் இருப்பவர்கள் சில எளிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் பெருமாளின் அருளை பெற முடியும். எந்த ஒரு கோவிலுக்கும் நாம் நினைத்த நேரத்தில் சென்றுவிட முடியாது. அதற்கு நமக்கு தரிசனம் தர வேண்டும் என அந்த தெய்வமும் நினைக்க வேண்டும் என்பார்கள்.
இதற்கு நமது குலத்தெய்வத்தின் அருள் வேண்டும் என்பது முக்கியம்தான். எனினும் திருப்பதி ஏழுமலையானை மட்டும் நினைத்த மாத்திரத்தில் எளிதாக தரிசித்துவிட முடியாது. திருப்பதி செல்ல வேண்டும் என நினைத்தாலே பல்வேறு தடைகள் எழத்தான் செய்யும். திருப்பதிக்கு சென்றாலும் ஏழுமலையானை தரிசிக்காமல் வருவோர் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
எனவே பெருமாளின் கடைக் கண் பார்வை நம் மீது பட வேண்டும். இப்படி திருப்பதி செல்ல தடை ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். சிலர் பிறந்த போதிலிருந்தே திருப்பதி சென்றதில்லை என்பார்கள். இதெல்லாம் நம் கர்மவினை என்றாலும் அதை நிவர்த்தி செய்யலாம். கருணை கொண்டவர்தான் ஏழுமலையான். அவரை தன் மனதில் நினைத்து வேண்ட வேண்டும்.
சோதனைகளை கொடுத்து வாழ்க்கை பாடங்களை கற்று கொடுப்பாரே தவிர பெருமாள் தன் பக்தனை எப்போதும் கைவிட மாட்டார். அவரது அருளை பெற சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பிறகு பெருமாளி படத்திற்கு முன் நின்று
ஓம் நமோ வெங்கடேசாய
ஓம் நமோ கோவிந்தாய
ஓம் நமோ நாராயணாய
என 10 முறை சொல்லி துளசியை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த மந்திரங்களை 108 முறை சொல்லி வழிபடலாம். இந்த மந்திரங்களை சொல்லி வழிபட்டு வந்தால் விரைவிலேயே திருப்பதி பெருமாள் உங்களை திருப்பதிக்கு அழைப்பார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications