பூஜையறையில் வாராஹி அம்மனை வைத்து வணங்கலாமா? வீட்டில் குலதெய்வம் , சிவலிங்கம் வழிபாடு செய்யலாமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிவலிங்கத்தை வீட்டில் வைத்திருப்பது அபசகுனம் என்பர்.. எனவே, சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? என்பதில் சந்தேகம் வரலாம். அதேபோல, வாராஹி அம்மனை வீட்டில் வைத்து வணங்கலாமா? குலதெய்வத்தை வீட்டில் வணங்கலாமா என்ற சந்தேகங்களும், குழப்பங்களும் பலருக்கும் உள்ளது... இதுகுறித்து முன்னோர்கள் என்ன சொல்லி உள்ளார்கள்? விதிமுறைகள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்...!
லிங்கத்தை உரிய விதிமுறைகளை பின்பற்றி, வைத்திருப்பதனால், வீட்டிலேயே வைத்து வழிபடலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்..
வீட்டின் வடகிழக்கு மூலையில் சிறிய சிவலிங்கம் அதாவது, கட்டை விரலை விட பெரிதாக இல்லாத அளவுக்கு, ஒரே ஒரு சிவலிங்கம் மட்டும் வைக்க வேண்டும். லிங்கம் இருந்தால் வேறு கடவுள்களை வைக்க வேண்டாம். கௌரி அல்லது விநாயகரின் களிமண் சிலையை வைத்து பூஜை செய்வது சிறப்பு..

லிங்கம் வழிபாடுகள்
கல்லால் ஆன லிங்கம் அல்லது தங்கம், வெள்ளி, செம்பினால் ஆன சிவலிங்கம் வைக்கலாம். லிங்கம் வைத்திருக்கும் இடம் காற்றும், வெளிச்சமும் இருக்க வேண்டும்.. சிவலிங்கத்தின் மீது எப்போதும் நீர் விழும்படியான அமைப்பில் வைத்திருக்க வேண்டும். தினமும் 2 வேளை பூஜை முக்கியம்.. வெள்ளை பூக்களை கொண்டு அலங்கரித்து அர்ச்சனை செய்யலாம். தேங்காய் தண்ணீரால் அபிஷேகம் செய்யக் கூடாது.
ஓரிரு நாட்கள் வெளியூர் செல்வதாக இருந்தால், ஒரு சொம்பில் சுத்தமான தண்ணீர் நிரப்பி வைத்துவிட்டு போகலாம். நீண்ட நாள் பிரயாணம் என்றால், நைவேத்தியம் செய்வதற்கு கட்டாயம் ஒருவரை நியமிக்க வேண்டும்.. அல்லது கையோடு சிவலிங்கத்தை வெளியூருக்கு கொண்டு சென்று, தங்கியிருக்கும் இடத்தில் வைத்து பூஜித்து கொள்ளலாம்.
வாராஹி அம்மன்
அதேபோல, பார்க்க கரடுமுரடான முகம் இருந்தாலும், பல நன்மைகளை தரும் சாந்த நாயகி இந்த வாராஹி அமமன். எனவே, வீட்டுப் பூஜையறையில் வாராஹி தேவியின் படத்தையோ, சிலையையோ தாராளமாக வைத்துக் கொள்ளலாம். வாராஹிக்கு செந்நிற மலர்கள் உகந்தவை என்பதால், செவ்வரளி, அரளி, செம்பருத்தி, ரோஜா போன்ற பூக்கள் கொண்டு வாராஹி அலங்கரித்து பூஜிக்கலாம்.
குலதெய்வம் வழிபாடுகள்
அதேபோல, குலதெய்வ வழிபாடு என்றால், பலருக்கும் தங்களது குலதெய்வம் தெரியாமல் இருக்கும்.. பல குலதெய்வங்களுக்கு உருவம் இருக்காது. கற்களாகவோ ஆயுதங்களாகவோ இருப்பதும் உண்டு. எனவே குலதெய்வம் உள்ள இடங்களுக்கு நேரடியாகவே சென்று வணங்குவதே சரியானது.
மண், சந்தனம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி போன்றவற்றை சிறிதளவு எடுத்து, அதை ஒரு சிவப்பு துணியில் வைத்து முடிச்சாக கட்டி , வீட்டின் வாசலின் நிலைப்படியின் மேல்பகுதியில் ஆணிஅடித்து மாட்டிவிட வேண்டும். பிறகு தினமும் இதற்கு தூப, தீபம் காட்டி வழிபட்டு வந்தால், குலதெய்வ சக்தியை வீட்டில் வரவழைக்கலாம் என்பது சான்றோர்களின் கருத்தாகும்.
More From
-
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
பைக் டாக்ஸியில் ஏறிய துணிக்கடை பெண்.. மேகாலயா டூ சென்னை! நடுரோட்டில் அலறிய பெண்! டிரைவர் செய்த பகீர் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட்











Click it and Unblock the Notifications