ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதலா? இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்
திருச்சி: ஸ்ரீரங்கநாதர் கோவிலில் தரிசனத்திற்கு வந்த ஐயப்ப பக்தர்கள் மூலஸ்தானத்தின் முன்பாக சத்தம் போட்டதோடு பணியாளர்களை அடித்ததாக இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியுள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு மாலை போட்டு சபரிமலை செல்லும் பக்தர்களும் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்ய வருகை தருவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் கூட்டமாக சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அப்பொழுது அவர்கள் மூலஸ்தானம் அருகே சென்று கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. மூலஸ்தானத்தின் முன்பிருந்து உடனடியாக நகராமல் நின்றதாகவும் தெரிகிறது.
உடனடியாக அங்கு பணியில் இருந்த கோவில் பணியாளர்கள் அவரை அப்புறப்படுத்தியுள்ளனர். அப்போது இரு பிரிவினருக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது கோவில் பணியாளர்களும், பக்தர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஐயப்ப பக்தர் ஒருவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது.
இன்று காலை சுமார் ஏழு மணி அளவில் ஸ்ரீரங்கம் காயத்ரி மண்டபத்தில் பக்தர்கள் வரிசையில் ஆந்திராவைச் சேர்ந்த 34 நபர்கள் காயத்ரி மண்டபத்தில் உள்ள உண்டியலை மிகுந்த ஓசை உடன் அடித்துள்ளார்கள் உண்டியலையும் பிடித்து ஆட்டி உள்ளார்கள் இதனை தட்டி கேட்ட திருக்கோயில் பணியாளரை தலை முடியை… pic.twitter.com/VtcNG5fkpq
— கல்கி குமார் (@kalgikumaru) December 12, 2023
இதன் காரணமாக தாக்கப்பட்ட கோவில் காவலர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐயப்ப பக்தரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் துறையினர் கோவிலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை போராட்டம் அறிவித்துள்ளார். இதனிடையே ரங்கநாதர் கோவிலில் நடந்த சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர மாநிலத்தை 34 பக்தர்கள் உண்டியலை மிகுந்த ஓசையுடன் அடித்ததுடன் கோவில் பணியாளரையும் தாக்கி உள்ளனர்.
மற்ற பக்தர்களையும் தரிசனம் செய்ய விடாமல் இடையூறு செய்தனர். இதை தட்டிக்கேட்ட பணியாளரை தலைமுடியை பிடித்து உண்டியலில் மோத செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications