இட்லி பூ செடி.. வெற்றி தரும் வெட்சி பூக்கள்.. வீட்டில் பணம், மகிழ்ச்சி பெருக உதவும் வாஸ்து செடிகள்
சென்னை: செடிகளின் மூலம். நமக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும் என்பது மறுக்க முடியாத ஒன்று. அந்த வகையில் நமக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய பல பூச்செடிகள் உள்ளன. இந்த செடிகளை வளர்த்து வருவது, குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வத்தை வாரி வழங்கும். அதில் ஒருசிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.
முதலாவதாக, பன்னீர் ரோஜாவை சொல்லலாம்.. பன்னீர் வாசம் வீட்டிற்குள் வீசினாலே லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். எனவே, பன்னீர் ரோஜாவை வீட்டின் முன்பு வைத்து வளர்க்கலாம்.

மல்லிகை செடி: அடுத்ததாக, மல்லிகை செடியை சொல்லலாம். இறைவன் சிவபெருமானுக்கு சூடப்படும் பூவாகும்.. சரும வியாதிகளை குணப்படுத்துவதில் மல்லிகைக்கு நிகர் இல்லை.. எனவே, மல்லிகை செடியை கிழக்கு திசையில், நன்றாக சூாிய வெளிச்சம் படும்படியாக வைத்து வளர்க்கும்போது, நம்முடைய மன அழுத்தமும் குறையும்..
அதேபோல, துளசிச்செடியை கிழக்கு திசையில் வைத்து வளர்க்க வேண்டும்.. மிகச்சிறந்த கிருமிநாசினியான துளசியின்மீது, சூரியக்கதிர்கள் படும்போது, ஏராளமான நன்மைகள் அந்த இடத்தை சுற்றி படர்கிறது.. நேர்மறை எண்ணங்களை வாரி வழங்குகிறது.. ஒருவேளை, கிழக்கு திசையில் துளசி செடியை வளர்க்க முடியாவிட்டால் வடகிழக்கு திசையில் வைக்கலாம். வடகிழக்கிலும் வளர்க்க முடியாவிட்டால் வடதிசையில் துளசிச்செடியை வளர்க்கலாம். எக்காரணம் கொண்டும் தெற்கு திசையில் வளர்க்கக்கூடாது.
லில்லி செடிகள்: வெள்ளை நிறத்திலான லில்லி செடிகளையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.. காற்றை தூய்மைப்படுத்தும் ஆற்றல் இந்த லில்லிக்கு உள்ளது. இந்த லில்லிக்கு சூரிய வெளிச்சம் அவ்வளவாக தேவைப்படாது என்பதால், பெட்ரூம், ஹால், டைனிங் டேபிள் உள்ளிட்ட பகுதிகளிலும் வைக்கலாம். இதனால் வீட்டிற்குள் நோ்மறையான சக்திகள் கிடைப்பதுடன், குடும்பத்தில் இணக்கமான சூழல் எப்போதுமே இருக்கும்.
அதேபோல, இட்லி பூக்களையும் குறிப்பிடலாம்.. இதனை வெட்சி பூ என்பார்கள்.. அந்த காலங்களில் மன்னர்கள் போருக்கு செல்லும்போது, இந்த பூவை சூடிக்கொண்டு செல்வார்களாம்.. இந்த பூவை வைத்து சென்றால் கட்டாயம் வெற்றி கிடைக்கும் என்றும் நம்பினார்களாம். அதனால்தான், இதற்கு வெற்றி பூ என்றும் சொல்வார்கள். இந்த பூவை வீட்டில் வைத்து வளர்ப்பவர்களுக்கு, வெற்றி தானாக தேடி வரும்.. அத்துடன் வாசலில் இதனை வைத்து வளர்க்கும்போது மகாலட்சுமியே வாசம் செய்வதுபோல காணப்படும்.
இட்லி பூ செடி: அழகுக்காகவும், அதிர்ஷ்டத்துக்காகவும் வளர்க்கப்படும் வெட்சி செடியின் பூ, இலைகள் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது.. இந்த செடியின் பூக்கள், உடல் சோர்வு, காய்ச்சலை குணப்படுத்தக்கூடியது. உடல் அசதியாக இருந்தால், அல்லது வயிற்றுப்போக்கு இருந்தால், இந்த பூக்களே மருந்தாகின்றன.
வெட்சி பூக்களில் டீ தயாரித்து காலை, மாலை என இருவேளைகள் குடித்தாலே போதும்.. அதேபோல பெண்களுக்கு வெள்ளைப்போக்கு தொந்தரவு இருந்தால், வெட்சி பூவை விழுதாக அரைத்து, அதில் ஒரு ஸ்பூனை பசுமோரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாவதுடன், கர்ப்பப்பையில் உண்டாகும் புண்களும் ஆறிவிடும்.
எப்படி வளர்க்கலாம்: ஆனால், இந்த இட்லி பூ செடியை வளர்ப்பதற்கு அதிக வெயில் தேவைப்படாது.. அதிக தண்ணீரும் ஊற்றக்கூடாது.. கட்டி இல்லாமல் மண் இருந்தாலே போதும்.. எனவே, சிறு தொட்டியில் செம்மண்ணை உதிர்த்துபோட்டு இந்த செடியை வைக்க வேண்டும்.
ஆனால், நடுவதற்கு முன்பு அந்த குழியில் சிறிதளவு மாட்டு சாணத்தை வைத்து, அதற்கு மேல் இந்த செடியை நட்டுவைத்தால் போதும். வாரம் ஒருமுறை, வெங்காயத்தோல், வாழைப்பழத்தோல்களை ஊறவைத்த தண்ணீரை ஊற்றி வந்தாலே, பூக்கள் நன்றாக பூத்து குலுங்கும்.
இந்த செடிகளில் மூங்கில் செடிகளையும் சேர்த்து கொள்ளலாம்.. காற்றிலுள்ள மாசுகளை சுத்தம் செய்யக்கூடிய சக்தி இந்த மூங்கிலுக்கு உண்டு. செல்வ வளம், ஆரோக்கியம் ஆகியவற்றை தரக்கூடியது இந்த மூங்கில் செடிகள்.. அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.. ஆனால், இது வைக்கப்படும் எண்ணிக்கைக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும் என்பார்கள்.. அதாவது, 5 என்ற எண்ணிக்கையில் வைப்பதால் செல்வம் பெருகும், 6 எண்ணிக்கையில் வைத்தால் அதிர்ஷ்டம் பெருகும், 7 வைத்தால் ஆரோக்கியம் பெருகும், 21 வைத்தால் எல்லையில்லா செழிப்பு பெருகும் என்பார்கள்..












Click it and Unblock the Notifications