உங்கள் கனவில் சிவன் கோயிலோ சிவ லிங்கமோ வந்தால் என்ன பலன்? நன்மையா தீமையா?
சென்னை: உங்கள் கனவில் சிவன் கோயில் அல்லது சிவலிங்கம் வந்தால் நல்லதா கெட்டதா? சாஸ்திரம் சொல்வது என்ன? கனவில் கோயில், கடவுளை கண்டால் அதற்கு என்ன அர்த்தம்?
தூங்கும் போது வருவதல்ல கனவு, உங்களை தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு என கலாம் கூறியிருந்தார். இது ஒரு புறம் இருந்தாலும் நாம் காணும் கனவுகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன.

அந்த வகையில் கனவில் பாம்பு வந்தால் என்ன பலன், மாடு துரத்தினால் என்ன பலன், பாம்பு தீண்டினால் என்ன பலன், அழகான மலர்களை கண்டால் பலன் என்ன? இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன அர்த்தம், அல்லது உயிருடன் இருப்பவர்கள் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? என்பதெல்லாம் நாம் தெரிந்து கொள்ள நினைப்பதுதான்?
வாழ்க்கையில் நாம் எதையெல்லாம் செய்ய வேண்டும் என கனவு காண்பதை போல வாழ்க்கையில் நடக்க போகும் சில விஷயங்கள் நமக்கு கனவுகள் மூலம் அறிகுறியாக தென்படுகின்றன. கனவு என ஒதுக்கி வைத்துவிட முடியாது. அவை நம் வாழ்க்கையின் ஒரு பகுதி. சில நேரங்களில் தேவையில்லாமல் ஏராளமான கனவுகள் வரும்.
பல சமயங்களில் கனவுகள் வந்து தேவையற்ற விஷயங்களை கூறும் போது அது நமக்கு கவலையை அளிக்கும். கனவு அறிவியல் என்ற ஒன்று உண்டு. அதன் படி ஒவ்வொரு கனவுக்கும் ஓர் அர்த்தம் உண்டு என கூறப்படுகிறது. உங்கள் கனவில் சிவன் கோயில் வந்தால் அது சக்தியின் சின்னம். இந்த கனவு எவ்வளவு மோசமான சூழ்நிலையில் இருந்தாலும் உங்களை கடவுள் கைவிடமாட்டார் என்பதை குறிக்கும் சின்னம். நீங்கள் தடைகளை கடக்க முடியும். நீங்கள் தைரியமாக இருப்பீர்கள்.
பெரிய பிரச்சினைகளை கூட எதிர்கொள்ளும் துணிச்சல் உங்களுக்கு கிடைக்கும். சிவன் கோயிலை கனவில் காண்பது உங்கள் வாழ்வில் முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது. நீங்கள் மிகவும் வருத்தமடைந்து அமைதியை தேடும் போது உங்களுக்கு அத்தகைய கனவுகள் வந்தால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு சிறந்த எதிர்காலத்தை நோக்கி செல்ல போகிறீர்கள் என்பதை குறிக்கும்.
கனவில் சிவலிங்கத்தை கண்டால் உங்கள் பிரச்சினைகள் நீங்கும். நீங்கள் சிக்கல்களால் சூழப்பட்டிருந்தால் எந்த வழியும் தெரியவில்லை என்றால் இந்த கனவு உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். நீங்கள் பணப்பற்றாக்குறையால் சிரமப்படுகிறீர்கள் என்றால் உங்கள் கனவு உங்கள் நிதி நிலையில் மாற்றம் ஏற்படும். மொத்தமாக உங்கள் கனவில் சிவன் கோயிலையோ சிவ லிங்கத்தையோ பார்த்தால் உங்கள் வாழ்வில் ஏற்றம் என்று அர்த்தம்.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
பித்ருக்களின் ஆசியைப் பெற வேண்டுமா? சனி அமாவாசையில் தவறவிடக் கூடாத தர்ப்பண முறைகள்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications