பூஜை அறையில் இது ரொம்ப முக்கியம்.. அகல் விளக்கு அற்புதம்.. கல் உப்பு பலன்கள்! அம்சம் நிறைந்த பூஜையறை
சென்னை: எந்த வீட்டில் பூஜைகள் தவறாமல் நடக்கிறதோ, அங்கு கடவுள்களின் வாசம் நிரந்தரமாக இருப்பதாக சொல்வார்கள்.. அந்தவகையில் காலை, மாலைகளில் பூஜைகள் செய்வது அவசியமானதாகிறது. அதேசமயம் பூஜை அறையில் சில முக்கிய பொருட்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பார்கள்.. அதிலும் குறிப்பாக 2 பொருட்கள் தினமும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டுமாம். அவை என்ன? அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? சுருக்கமாக பார்க்கலாம்.
வீட்டில் வைப்பதற்கு கடவுள் படங்கள், சிலைகளை தேர்வு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். பூஜையறையில் விநாயகர், மகாலட்சுமி, சிவ பெருமான் உள்ளிட்ட சாந்தமான கடவுள் படங்களை அல்லது சிலைகளை வைத்து வழிபடலாம். ஒருவேளை, வேல், லிங்கம் வைத்திருந்தால் வாரம் ஒருமுறை அபிஷேகம் செய்து, பூஜை செய்தால் போதும்.

பூக்கள் - பூஜைகள்
கடவுள்களை பூக்களால் அலங்கரித்து வைக்கலாம்.. ஆனால் அந்த மலர்கள் எப்போதுமே பூத்ததுபோல ஃபிரஷ்ஷாக இருக்க வேண்டும்.. காய்ந்த மலர்களை பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு பூஜையின்போதும், புதிய மலர்களையே பயன்படுத்த வேண்டும்.
பொதுவாக வீட்டின் பூஜை அறை என்றாலே, மணக்க மணக்க வாசம் வீசும்.. இந்த வாசனை மனதில் ஒருவிதமான மகிழ்ச்சியையும், தெய்வீக மனநிலைமையையும் தோற்றுவிக்கும்.. ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை ஏற்றிவைப்பது. வீட்டிலுள்ள தீய சக்திகளையும், எதிர்மறை ஆற்றல்களையும், விரட்டியடித்துவிடும்.. அத்துடன், காற்று மண்டலுமும் சுத்தமாகும்.
மணிச்சத்தம் - தெய்வீகம்
பூஜை நேரத்தில் மணிச்சத்தமும் கேட்க வேண்டும். காரணம், மணியிலிருந்து வெளியாகும் சத்தம், காது வழியாக உடலுக்குள் சென்று, எதிர்மறை ஆற்றல்களை நீக்கக்கூடியது.. மணி ஒலிக்கும்போது, தெய்வீக அதிர்வலைகளும் வீட்டை சுற்றி பரவும்.
அதேபோல, தாமிரம் அல்லது செம்பினால் ஆன சிறிய பாத்திரத்தில் புனித நதிகளின் தீர்த்தம் வைத்திருக்கலாம். வெள்ளிக்கிழமைகள்ல இந்த நீரை வீட்டிலும், வீட்டை சுற்றிலும் தெளித்து விடலாம். ஆனால், எந்தக் காரணத்தை முன்னிட்டும் இரும்புப் பொருள்களை பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது. இரும்பு யமனுக்கு உரியது.. இதனால் நேர்மறை சக்திகளை கிரகிக்க முடியாது.
அகல் விளக்கு - அமைதி
இவையெல்லாம் வழக்கமாக வீடுகளில் இருக்கும் என்றாலும், அகல் விளக்கு ஒன்றாவது பூஜையறையில் வைத்திருக்க வேண்டும். இந்த அகல்விளக்கில் வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வந்தால், குடும்பத்தில் ஏற்றம் பெருகும்.. வெள்ளி உள்ளிட்ட உலோகங்களில் விளக்குகள் இருந்தாலும், அகல் விளக்கு ஒன்றாவது இருக்கும்.
அதேபோல, ஒவ்வொரு நாள் பூஜையின்போதும் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூஜை செய்ய வேண்டும். அடுத்த நாள் அதை வீட்டின் கூரையில் ஊற்றிவிட வேண்டும். இதனால் துர்சக்திகள் வீட்டை நெருங்காது. அதேபோல, ஒரு கிண்ணத்தில் அரிசி வைக்கலாம். கண்ணாடி வைத்திருக்கலாம்.
கல் உப்பு - கடன் தொல்லை
பூஜையறையில் ஒரு கண்ணாடி கிண்ணத்தில், புதிதாக வாங்கிய கல் உப்பை நிறைத்துக்கொள்ள வேண்டும். அதன் மீது சிறிதளவு மஞ்சள் தூள், குங்குமத்தை தூவ வேண்டும். இந்த கல் உப்பு நிறைந்த கிண்ணத்தை பூஜை அறையில் மகாலட்சுமியின் படத்திற்கு அருகில் வைத்துவிட்டு, 2 மணி நேரம் கழித்து அதனை எடுத்து பீரோவில் நகை வைக்கும் இடத்தில் வைத்துவிட வேண்டும். இதனால் நிதி நிலைமை உங்களுக்கு சீராகும்.. அடகு வைத்த நகையும் விரைவில் உங்கள் கைக்கு வந்து சேரும்.
-
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா!












Click it and Unblock the Notifications