காமாட்சி அம்மன் விளக்கோ குத்துவிளக்கோ எந்தெந்த கிழமைகளில் தேய்க்கலாம்? விளக்கேற்றும் திசை எது?
சென்னை: விளக்கை தேய்த்து கழுவ உகந்த நாட்கள் எது எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அத்துடன் மற்ற நாட்களில் விளக்கை தேய்த்தால் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதையும் பார்க்கலாம்.
வீடுகள், கோயில்களில் ஏற்றப்படும் விளக்கில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். இது போன்று விளக்கேற்றி வழிபடுதல் என்பது தீய சிந்தனைகளை தடுக்கிறது. அது போல் விளக்கின் அடிபாகத்தில் பிரம்மாவும் தண்டு பகுதியில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் ஊற்றும் இடங்களில் சிவன் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.

அப்படிப்பட்ட விளக்கை எப்போதும் தேய்த்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதில் பச்சை நிறத்தில் ஒரு கறை படிய விடவே கூடாது. அது போல் ஏற்றிய திரியை வைத்தே விளக்கை ஏற்றக் கூடாது, ஒவ்வொரு முறையும் புதிய திரியை ஏற்ற வேண்டும். குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில்தான் தேய்க்க வேண்டும்.
செவ்வாய், புதன்கிழமைகளில் விளக்கை தேய்த்தால் திங்கள் முதல் புதன்கிழமை நள்ளிரவு வரை அதில் குடியிருக்கும் தாட்சாயினி வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை விளக்கு தேய்ப்பதை தவிர்த்துவிட்டு வியாழக்கிழமையே தேய்த்து வைத்துவிட வேண்டும்.

அதற்கான மஞ்சள் குங்குமத்தை கூட அடுத்த நாளான வெள்ளிக்கிழமை வைத்துவிடலாம். விளக்கை எந்தெந்த திசைகளில் ஏற்றலாம் என தெரியுமா? ஒரு முகம் ஏற்றினால் நினைத்த செயல்கள் நடக்கும். இரு முகம் ஏற்றினால் குடும்பம் சிறக்கும். மூன்று முகம் ஏற்றினால் புத்திர தோஷம் நீங்கும். நான்கு முகம் ஏற்றினால் செல்வம் பெருகும். ஐந்து முகம் ஏற்றினால் சகல நன்மைகளும் கிடைக்கும்.
அது போல் மண்ணால் செய்யப்பட்ட விளக்கை ஏற்றினால் தரித்திரம் விலகும். வெள்ளி விளக்கு ஏற்றினால் திருமகள் அருள் கிடைக்கும். பஞ்ச லோக விளக்கு ஏற்றினால் தேவதை வாசம் உண்டாகும். வெண்கல விளக்கு ஏற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும். இரும்பாலான விளக்கு ஏற்றினால் சனிகிரக தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
அது போல் ஞாயிற்றுக்கிழமைகளில் விளக்கை தேய்த்தாலும் அன்று அசைவ உணவு சமைத்திருந்தால் விளக்கை தேய்க்கக் கூடாது. அசைவம் சமைக்காத வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை விளக்கை தேய்த்தால் கண் சம்பந்தமான நோய்கள் தீரும். திங்கள்கிழமை விளக்கை தேய்த்தால் மனம் அமைதிபடும்.
வியாழக்கிழமைகளில் விளக்கை தேய்த்தால் குருபகவானின் அருள் கிடைத்து மனக்கவலைகள் தீரும். சனிக்கிழமைகளில் விளக்கை தேய்த்தால் வாகன விபத்துகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications