கந்தசஷ்டி விரதம் 2024.. கந்தனின் சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை.. யார் யார் விரதத்தை தவிர்க்கலாம்
சென்னை: நாளை நவம்பர் மாதம் 2ம் தேதி கந்தசஷ்டி விரதம் துவங்க உள்ள நிலையில், இந்த விரதத்தின் சிறப்புகள் என்னென்ன? பலன்கள் என்னென்ன தெரியுமா? கந்த சஷ்டி விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும்? இதோ சுருக்கமாக பார்க்கலாம்.
கார்த்திகை மாதத்தில் வரும் மகா சஷ்டி தினத்தில் திருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வழிபடுவது வழக்கமாகும்.. "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழியாகும்.. அதாவது, சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதே இதன் அர்த்தமாகும்..

அந்தவகையில் குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு மிக முக்கியமான விரதமாக இது திகழ்கிறது.. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்றும், குழந்தையாக முருகனே பிறப்பார் என்றும் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
நாளை நவம்பர் மாதம் 2ம் தேதி கந்தசஷ்டி விரதம் ஆரம்பமாகிறது.. இரவு 08.06 மணி வரை பிரதமை திதியும் உள்ளது. அதனால் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள், விடிகாலையிலேயே குளித்து முடித்து முருகனுக்கு பூஜை செய்து உங்களின் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
வழிபாடு முறை: முருகன் படங்களை சுத்தப்படுத்தி சந்தனம், குங்குமம் வைத்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.. வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், நைவேத்தியமாக காய்ச்சிய பால், தேன் கலந்து வைத்து, விளக்கேற்றி வழிபட வேண்டும்.
குழந்தை வரம் பெற விரும்புபவர்கள் சஷ்டி தினங்களில் விரதமிருக்கலாம்... கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை மகா சஷ்டியில் 6 நாள் விரதம் கடைப்பிடிப்பது மிக மிக விசேஷம் என்பார்கள்.. இந்த நேரத்தில், தம்பதி இருவருமே விரதம் கடைப்பிடித்தால், குழந்தை பலன் கிடைக்கும் என்பார்கள்.. பக்தர்கள் விரதத்தின்போது முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்வது, கந்த சஷ்டி கவசம் படிப்பது, திருப்புகழ் உள்ளிட்டவைகளை படிப்பது போன்றவற்றை செய்யலாம்.
பால் பழங்கள்: விரதம் இருப்பவர்கள் வீட்டிலும் இருக்கலாம்.. முருகர் கோயிலும் இருக்கலாம்.. வேலைக்கும் சென்று அலுவலகத்தில் இருக்கலாம்.. சிலர் தண்ணீர் மட்டும் குடிப்பார்கள், சிலர் பால்பழம் மட்டும் சாப்பிடுவார்கள்.
இந்த 6 நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து விரதத்தை கடைப்பிடிக்கலாம், அப்படி முடியாதபட்சத்தில், ஒருமுறை வீதம் 6 மிளகையும் 6 கை நீரையும் குடிக்கலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், உப்பு நீர், எலுமிச்சம் சாறு, நார்த்தம்பழச்சாறு, இளநீர் போன்றவற்றை சஷ்டி விரதம் இருப்பவர்கள் குடிக்கக்கூடாது.
மஞ்சள் கயிறு: காப்பு கட்டுபவர்களும், சூரிய உதயத்திற்கு முன்பாகவே காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை ஆரம்பித்துவிட வேண்டும். காப்பு கட்டி விரதம் இருப்பவர்கள் மஞ்சள் தடவிய நூலில், விரலி மஞ்சள் வைத்து கைகளில் கட்டிக்கொள்ளலாம். அல்லது வெறும் மஞ்சள் கயிறும் மட்டும் கட்டிக்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம். பெரியவர்களிடம் இந்த கயிறு கொடுத்து கைகளில் கட்டிக் கொண்டால், ஆசீர்வாதம் பெருகும். காலை, மாலை என 2 வேளையும் குளித்து விட்டு முருகனுக்கு பூஜை செய்ய வேண்டும்..
மருந்து மாத்திரைகளை எடுப்பவர்களாக இருந்தால், விரதம் மேற்கொள்வதை பற்றி யோசித்து முடிவெடுக்கலாம்.. பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் இந்த விரதத்தை தவிர்க்கலாம்.. மாதவிடாய் இருப்பவர்கள், பூஜையறைக்குள் செல்லாமல், விரதம் இருக்கலாம்..
அதேபோல, விரதம் மேற்கொள்பவர்கள், பகல் நேரத்தில் தூங்கக் கூடாது... முடிந்தவரை பேச்சை குறைத்து, அமைதியுடன் முருக சிந்தனையில் இருப்பது நல்லது. அல்லது ஓம் சரவண பவா என்று ஒரு நோட்டுபுத்தகத்தில் எழுதி கொண்டே இருக்கலாம். 7 நாள் கந்தசஷ்டி விரதம் இருப்பது மிகமிக சிறப்பு.
பலன்கள்: குழந்தை இல்லாதவர்கள் மட்டுமல்ல, நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வேலை கிடைக்கவில்லை, எதிரிகள் தொல்லையால் இன்னலுக்கு ஆளாகுபவர்கள், வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியாமல் தவிப்பவர்கள் கந்தசஷ்டியில் விரதம் இருக்கலாம்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications