Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடை விழா.. 12ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கொடை விழாவை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஏப்ரல் 8ஆம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோயில் மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயம். ஆண் பக்தர்களுக்கு கேரள மாநிலத்தில உள்ள சபரிமலை ஐயப்பன் பிரசித்தமோ, அது மாதிரி நெல்லை, குமரி மற்றும் கேரள மாநில பெண் பக்தர்களுக்கு பெண்களின் சபரிமலை போன்றதாகும். கேரள மாநில பெண்கள் இருமுடி கட்டிக்கொண்டு இக்கோயிலுக்கு வந்து இங்குள்ள பகவதியம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்று போற்றப்படுகிறது.

Kanniyakumari Mandaikadu Bhagwati Amman Temple Masi Kodai festival local holiday on 12 March 2024

கேரள கோவிலை போன்று அமைப்பு கொண்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வருகின்றனர். சபரிமலைக்கு ஆண்கள் 41 நாள்கள் விரதம் இருந்து,பயபக்தியுடன் சென்று வழிபட்டு வருவதைப் போல, ஒவ்வொரு ஆண்டும் மாசி கொடை விழாவை ஒட்டி கேரளத்து பெண்கள் 41 நாள்கள் பயபக்தியுடன் விரதம் இருந்து, இருமுடி கட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வார்கள்.

கல்யாண வரம், குழந்தை வரம், உடல் உறுப்புகளில் குறைபாடு, கண் திருஷ்டி தோஷம், தலைவலி நிவாரணம் போன்றவற்றிற்காக இங்கு பிரார்த்தனை செய்யப்படுகின்றது. இக்கோயிலில் கொடுக்கப்படும் மண்டையப்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. அரிசிமாவில் வெல்லம்,பாசிப் பருப்பு,ஏலம்,சுக்கு ஆகியவை சேர்ந்து நீராவியால் அவித்துத் தயார் செய்யப்படுகிறது இந்த மண்டையப்பம். அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது.

மாசி கொடை விழாவின் போது வேண்டுதல் நிறைவேற ஆலய வளாகத்தை சுற்றிலும் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்கின்றனர். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயிலிருந்து மீண்டபிறகு இங்கே வந்து, முத்தப்பம் என்னும் அப்பத்தை நைவேத்தியம் செய்கின்றனர்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் கொடைவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இவ்விழாவில் தமிழகம் மட்டுமல்லாது, கேரளா முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள் வந்து பகவதியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் உட்பட, தமிழ்நாடு கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடியேற்ற விழாவில் கலந்து கொண்டனர்.

விழா நாட்களில் 3ஆம் நாள் விழா முதல் 10ஆம் திருவிழா வரை காலை, இரவில் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 10ஆம் நாள் பிற்பகல் 3.30 மணிக்கு யோகா, இரவு 8 மணிக்கு அகிலத்திரட்டு விளக்கவுரை, இரவு 10 மணிக்கு கர்நாடக இன்னிசை கச்சேரி நடைபெறும்.

மார்ச் 12ஆம் தேதி இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும், நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்குபூஜை நடக்கிறது. பின்னர் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை நிர்வாகிகள் மற்றும் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

இதனிடயே மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கொடை விழாவை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஏப்ரல் 8ஆம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+