Karadaiyan nonbu 2025: காரடையான் நோன்பு எப்போது? தாலி சரடு மாற்ற உகந்த நேரம் எது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காரடையான் நோன்பு இந்த ஆண்டு எப்போது வருகிறது, இந்த நோன்பின் போது எப்படி விரதம் இருக்க வேண்டும், தாலி சரடு மாற்றிக் கொள்ள நல்ல நேரம் எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இந்த நோன்பு யாருக்கு முக்கியமானது என்பதையும் பார்க்கலாம்.

மாசி மாதத்தில் வரும் நோன்புதான் இந்த காரடையான் நோன்பு. இந்த நோன்புக்கு கார அடைகளை செய்து படைக்க வேண்டும். திருமணமான பெண்கள் தங்களின் திருமாங்கல்யம் நிலைக்க இந்த நோன்பை நோற்கிறார்கள்.

spirtuality karadaiyan nonbu 2025

அது போல் குடும்பம் செல்வச் செழிப்புடன் இருப்பதற்கும் இந்த விரதம் முக்கியமானதாகும். இதை சாவித்திரி நோன்பு என்றும் சொல்லலாம். இது மாசி மாதம் முடிந்து பங்குனி தொடங்கும் நாளில் கடைப்பிடிக்கப்படும். இந்த நோன்பை தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் உள்ள பெண்களும் கடைப்பிடிக்கிறார்கள்.

சாவித்திரி, தனது கணவர் சத்தியவானை எமனிடம் சென்று மீட்டதாக வரலாறு உண்டு. இதற்காக சாவித்திரி மேற்கொண்ட இந்த விரதம்தான் பலனை அளித்தது. காட்டில் இருந்த சாவித்திரி தனது கணவரின் நீண்ட ஆயுளுக்காக பராசக்தியிடம் பிரார்த்தனை செய்து நோன்பு இருந்ததே காரடையான் நோன்பு என அழைக்கலாயிற்று.

இந்த விரத நாளன்று காட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து கார அடை செய்து அம்பாளுக்கு படையலிட்டு வழிபட்டாள் சாவித்திரி. அப்போது

"உருகாத வெண்ணெய்யையும் ஓர் அடையையும் நோற்று உனக்கு நான் வைத்தேன். எந்நாளும் என் கணவர் எனை விட்டு நீங்காத அருள் தருவாய்". இதனால் இன்றும் கார அடையை செய்து வைத்து படைக்கிறார்கள். இந்த ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இந்த காரடையான் நோன்பு வருகிறது.

இந்த நாளில் திருமணமான பெண்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக தாலி சரடை மாற்றிக் கொள்வார்கள். திருமணமாகாத பெண்கள் கைகளில் மஞ்சள் நிற நோன்பு கயிறை கட்டிக் கொள்வார்கள். காரடையான் நோன்பு மார்ச் 14 ஆம் தேதி காலை சூரிய உதயத்தின் போது தொடங்கி சூரிய அஸ்தமனத்தின் போது முடியும்.

மார்ச் 14 ஆம் தேதி சூரிய உதயம் காலை 6.40-க்கு தொடங்குகிறது. அது போல் மாலை சூரிய அஸ்தமனம் 6.31 மணிக்கு மறைகிறது. எனவே இந்த கால கட்டத்தில் பூஜை செய்து வழிபடலாம். மேலும் மாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள்ளாக தாலி சரடை மாற்றலாம். நோன்பு கயிறையும் கட்டிக் கொள்ளலாம்.

கணவர்கள் மனைவி கார அடையை தருவார்கள். அதை அம்பிகையை நினைத்து வாங்கி சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். கணவர் வீட்டில் இருந்தால் அவரை வைத்து தாலி சரடை மாற்றிக் கொள்ளலாம். பின்னர் அவரிடமும் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களிடமும் ஆசி பெறலாம்.

கார அடை செய்வது எப்படி?

அரிசி மாவு, தேங்காய், காராமணி, உப்பு, எண்ணெய், கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவை தேவையான பொருட்களாகும்.

செய்முறை

  • மாவு அரிசியை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து, சுத்தமான டவலில் பரப்ப வேண்டும்.
  • 10 முதல் 30 நிமிடங்கள் வரை அப்படியே இருக்க வேண்டும். பின்பு மிஷினில் கொடுத்தோ அல்லது மிக்ஸியிலோ அரைத்துக் கொள்ளலாம். அரைத்த மாவை சல்லடையால் சலித்து கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் காராமணியை சேர்த்து 2 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
  • இத்துடன் 1 கப் தண்ணீர் சேர்த்து பீன்ஸ் மென்மையாகும் வரை சமைக்கவும். அதிகமாக வேக வைத்துவிட வேண்டாம். பின்னர் தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் போட்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின்னர் அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் தேங்காய், காராமணியை போட வேண்டும், மேலும் அடைக்கு தேவையான உப்பையும் போட்டுவிடவும்.
  • தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் தீயை குறைத்துக் கொண்டு அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக கட்டிகள் இல்லாதபடி சேர்க்க வேண்டும். தேவைபட்டால் இன்னொரு வெந்நீர் வைத்துக் கொள்ளுங்கள். மாவு தண்ணீரை அதிகமாக இழுத்தால் உடனே இந்த வெந்நீரை சேர்க்கலாம்.
  • பிறகு வடை சைஸில் சிறிய அடையாக தட்டி நடுவில் ஓட்டை போட்டு நெய் தடவிய இட்லி தட்டில் வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவிடவும்.


இனிப்பு அடை செய்முறை

அரிசி மாவு, காராமணி, வெல்லம், நல்லெண்ணெய், தேங்காய் துண்டுகள், ஏலக்காய் தூள், நெய் ஆகியவை தேவையான பொருட்களாகும்.

  • ஒரு வாணலியில் காராமணியை வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • அத்துடன் 1 கப் தண்ணீர் விட்டு காராமணி மிருதுவாகும் வரை வேகவிடவும்.
  • பிறகு வெல்லத்தை தண்ணீர் தேர்த்து கரைந்ததும் வடித்துக் கொள்ள வேண்டும். அதை மீண்டும் கொதிக்க வைத்து அதில் காராமணி, ஏலக்காய், தேங்காய், உள்ளிட்டவை போட்டு கொதிக்க விடவும், பிறகு தீயை குறைத்துக் கொண்டு அரிசி மாவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்க வேண்டும்.
  • பின்னர் கெட்டியானதும், நெய் தடவிய இட்லி தட்டுகளில் அடை போல் தட்டி நடுவில் ஓட்டை போட்டு ஆவியில் வேக வைக்க வேண்டும்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+