கிச்சன் வாஸ்து டிப்ஸ்: உங்கள் வீட்டு சமையல் அறையில் இதை மட்டும் செய்யுங்கள்.. உணவுப்பஞ்சம் வராது
சென்னை: நாம் உண்ணும் உணவு ருசியோடு இருப்பதோடு ஆரோக்கியத்தை தருவதாகவும் இருக்க வேண்டும். எத்தனையோ நாடுகளில் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் வறுமையில் வாடுகிறார்கள். இந்தியாவில் இலவச அரிசி, கோதுமை உள்ளிட்ட பல திட்டங்களாலும் பள்ளிகளில் வழங்கப்படும் இலவச உணவுகளாலும் பலரும் பசியாறுகின்றனர். நம்முடைய வீட்டில் உணவு பஞ்சம் வராமல் இருக்க குறைவில்லாமல் பொருட்கள் இருக்க என்ன செய்ய வேண்டும் எனறு பார்க்கலாம்.
சமையல் அறை வாஸ்து: நம்முடைய வீட்டில் எத்தனையோ அறைகள் இருந்தாலும் சமையல் அறை முக்கியமானது. அங்குதான் நம்முடைய எல்லோருடைய ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. அம்மாவின் கை பக்குவ ருசியை மட்டும் கொடுப்பதில்லை நம்முடைய ஆரோக்கியத்தையும் நிர்ணயம் செய்கிறது. பொதுவாக வீடுகளில் வாஸ்து படி சமையல் அறை அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கு மூலையில்தான் இருக்க வேண்டும் அதுதான் சிறப்பானது.

கிச்சன் மேடை: கேஸ் ஸ்டவ் அல்லது அடுப்பு வைக்கும் மேடை தென்கிழக்கு மூலையில் தெற்கு கிழக்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும். சூரிய ஒளிக்கதிர்கள் சமையல் அறைக்குள் வரும் வகையில் ஜன்னல் அமைப்பது சிறப்பானது. சமைப்பவர் கிழக்கு நோக்கியே சமைக்க வேண்டும். சமையலறையில் பாத்திரம் கழுவும் குழாய் வடகிழக்கில் அமைப்பது நல்லது. வடகிழக்கு மூலை மட்டுமே தண்ணீர் குழாய் அமைக்க நல்ல இடம் இல்லாவிட்டால் பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படும்.
சரியான திசை: எந்த திசையில் சமையல் அறை வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது போல எந்த திசையில் சமையல் அறை கண்டிப்பாக இருக்கக்கூடாது என்றும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. வடகிழக்கில் சமையலறை வைத்தால் குடும்பத்தின் பொருளாதார நிலை பாதிக்கும். வடகிழக்கு எனப்படும் ஈசான்ய மூலையில் சமையல் அறை வரவே கூடாது. இது தண்ணீருக்கு மட்டும் ஏற்ற இடம். இங்கே அக்னி வைக்க கூடாது. சமையலறை இருப்பது தோஷத்தை கொடுக்கும். குடும்பத்தலைவியின் உடல் நலம் பாதிக்கப்படும். அக்னியில் தண்ணீர் எப்படி கொதிக்குமோ அதுபோல இங்கே சமையலறை அமைத்துவிட்டால் அந்த குடும்பத்தின் பொருளாதார நிலையில் பாதிப்பு ஏற்படும்.
உடல் நல பாதிப்பு: தென்மேற்கு எனப்படும் கன்னி மூலையில் சமையலறை வைக்கவே கூடாது. உடல் நல பாதிப்பு வரும். துஷ்ட சக்திகளால் பாதிப்பு வரும் கடன் பிரச்சினை திருமண தடை, திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும். அதே போல மேற்கு சமையலறையும் வரவு செலவு சரியாக போகும். நண்பர்கள் கூட விரோதிகளாவார்கள். நல்ல வாய்ப்புகள் கூட தட்டிப்போகும். தென்கிழக்கு பகுதிக்கு எதிர் மூலையான வடமேற்கு வாயுமூலலை பகுதியில் சமையல் அறை வைக்கலாம் ஆனால் அவ்வப்போது லேசாக உடல் நல பாதிப்பு ஏற்படும். தொழில் முன்னேற்றம் வரும் வாஸ்துபடி கட்டிடம் அமைந்தால் தோஷம் வர வாய்ப்பு இல்லை.
வாஸ்து தோஷம் நீங்க: வீட்டுக்குள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு பகுதிக்கு சமையலறையை மாற்ற இயலாத பட்சத்தில், இருக்கிற சமையலறைக்குள் சின்ன சின்ன மாற்றங்களை செய்யலாம். குறிப்பாக அடுப்பு மேடை கிழக்கு நோக்கி தென்கிழக்கு மூலையில் இருக்க வேண்டும். தவறான சமையல் அறை அமைப்பில் குடியிருப்பவர்கள் ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்கலாம். குடும்பத்தில் வறுமை ஏற்படாது. இரவு நேரத்தில் உணவு கொஞ்சமாவது வைக்க வேண்டும்.

உப்பு பாத்திரம்: நம்முடைய உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் உப்பு மகாலட்சுமியின் அம்சம் நிறைந்தது. அந்த உப்பினை நாம் தினமும் கைகளால் எடுத்துதான் வணங்கி விட்டு சமையலுக்கு போட வேண்டும். அந்த உப்பினை நாம் சரியான இடத்தில் வைக்க வேண்டும். அப்போதுதான் உணவுப்பொருட்கள் நம்முடைய வீட்டில் குறைவில்லாமல் இருக்கும். பொதுவாக சமையல் அறையில் உப்பு போட்டு வைக்கும் பாத்திரத்தை மேலே செல்பில் வைக்கவே கூடாது. சமையல் செய்யும் மேடைக்கு கீழே குனிந்து எடுக்கும் வகையிலோ, கைக்கு எட்டும் இடத்திலோதான் வலது கை பக்கத்தில்தான் உப்பு வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் கல் உப்பு வாங்கி கொட்டி வைப்பது செல்வ வளத்தை அதிகரிக்கும்.
அன்னபூரணி: நம்முடைய உணவில் ருசி கூடவும் ஆரோக்கியம் அதிகரிக்கவும் நாம் அன்னபூரணி தாயாரின் படத்தை சமையல் அறையில் மாட்டி வைப்பது சிறப்பானது. இதன் மூலம் வாஸ்து தோஷங்கள் இருந்தாலும் நீங்கும். காசி அன்னபூரணி உலகிற்கே உணவு கொடுப்பவள் எனவே நாம் அன்னபூரணியின் படத்தினை மாட்டி வைப்பதன் மூலம் உணவு தோஷங்கள் இருந்தாலும் நீங்கும். செல்வ செழிப்பு அதிகரிக்கும். எதையும் நம்பிக்கையோடு செய்தால் நல்லவை தேடி வரும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications