அட்சய திருதியை நாளில் குபேரனுக்கு ஃபினான்ஸ் டிபார்ட்மென்ட் கிடைச்சதா? அன்னபூரணியும் பிறந்தாராமே!
சென்னை: அட்சய திருதியை நன்னாளில் தங்கம் வாங்கலாமா, வெள்ளி வாங்கலாமா, எதுவும் இல்லாவிட்டால் ஒரு கிலோ கல் உப்பாவது வாங்கலாமா என பலர் யோசனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அட்சய திருதியை நன்னாள் ஒரு புண்ணிய தினம் என்கிறார்கள், அது குறித்து பார்க்கலாம்.

இதுகுறித்து ஆன்மீக களம் என்ற ஐடியில் தீபா தங்கராசு கூறியிருப்பதாவது:
அட்சய திரிதியை... புண்ணிய தினம்.. (30.04.25 புதன்கிழமை)
1. பரசுராமர் அவதரித்த திருநாள்
2. கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த திருநாள்
3. பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள்.
4. பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்,
5. வியாச தேவரால் மஹாபாரதம் இன்று தான் எழுதப்பட்டது.
6. திரேதாயுகம் தொடங்கிய நாள்
7. "கனகதாரா ஸ்தோத்ரம்" ஆதிசங்கராச்சாரியாரால் இன்று இயற்றப்பட்டது.
8. குபேரருக்கு இன்று செல்வத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது
9. அன்னபூரணிதேவி தோன்றிய நாளாகக் கருதப்படுகிறது.
10. இந்நன்னாளில் ரதயாத்திரைக்கான ரதம் செய்யும் பணி தொடங்கும்.
11. கீர்ஷோர் கோபிநாத் (ரெமுன, ஒரிஸா), மதன மோகன், கோவிந்தா மற்றும் கோபிநாத் விக்ரகங்களுக்கு சந்தன் யாத்திரை தொடங்கும் நாள்
12. பார்லி தோன்றிய நாள் (யாகத்திற்கு உபயோகப்படுத்தும் பொருள்)
13. பத்திரிநாத்திலுள்ள கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில் குளிர் காலங்களில் நடையடைத்து அட்சய திரிதியை சுபதினத்தில் மீண்டும் பக்தர்கள் தரிசிப்பதற்காக கோவில் நடை திறக்கபடும்.
ஹரே கிருஷ்ண ஹரே
கிருஷ்ண கிருஷ்ண
கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அட்சய திருதியை என்பது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் அமாவாசைக்கு பிறகு 3ஆவது நாளில் வரும் திருதியை திதியில் கொண்டாடப்படுவதாகும். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த நாளில் தானம் செய்வது, தங்கம் வாங்குவது, வீட்டு கிரகபிரவேசம் செய்வது என்பது பலனை தரும். இந்த நன்னாளில் சுபகாரியங்களையும் செய்யலாம். அந்த வகையில் இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5.31 மணிக்குத் தொடங்கி ஏப்ரல் 30-ஆம் தேதி பிற்பகல் 2.12 மணிக்கு முடிகிறது. எனவே வழிபாடு செய்ய உகந்த நேரம் ஏப்ரல் 30ஆம் தேதி காலை 5.41 மணி முதல் 12.18 மணி வரை ஆகும்.
இந்த நாளில் லட்சுமி தேவியையும் விஷ்ணு பகவானையும் வழிபட்டால் மகிழ்ச்சி பெருகும். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாக இருக்கும். அது போல் வெள்ளி கூட வாங்கலாம்.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
பித்ருக்களின் ஆசியைப் பெற வேண்டுமா? சனி அமாவாசையில் தவறவிடக் கூடாத தர்ப்பண முறைகள்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications